Home / Q&A / இமாம் ஸலாம் சொல்லி, தொழுகையை முடித்ததும் அவர் அமரும் முறை யாது ?

இமாம் ஸலாம் சொல்லி, தொழுகையை முடித்ததும் அவர் அமரும் முறை யாது ?

இமாம் ஸலாம் சொல்லி, தொழுகையை முடித்ததும், அவர் அமரும் முறை யாது ?

நபி ஸல் அவர்கள் ஸலாம் சொன்னதும், மஃமூம்களை “முகத்தால்” நோக்கி உட்கார்வார்கள் . அதற்க்குரிய ஆதாரங்கள் பின்வருமாறு :

(1) ” நபி ஸல் அவர்கள் தொழுகையை முடித்துக்கொண்டால், முகத்தால் எங்களை முன்னோக்குவார்கள் என ஸமுரஹ் பின் ஜுன்தப் ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள் .புஹாரி : 845 , முஸ்லிம் :2275 )

(2)” நபி ஸல் அவர்கள் ஸலாம் கொடுத்தார்கள் . முகத்தால் என்னை நோக்கினார்கள் ….. என இப்னு மஸ்உஊத் ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள் .( புஹாரி : 401, முஸ்லிம் : 572 )

(3) ” நபி ஸல் அவர்கள், இஷாத் தொழுதுவிட்டு, அவர்களின் முகத்தால் எங்களை முன்னோக்கினார்கள் அனஸ் ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள் (புஹாரி : 847 , முஸ்லிம் :426 ) ஆனால் இலங்கையில், இமாம்கள், தங்களது வலது கைபக்கத்தை , மஃமூம்கள் பக்கம் வைத்து அமர்கின்றார்கள் . இது நபிவழிக்கு முரணானதாகும் . மேலும், ஷாபி மத்ஹப் அறிஞ்சர் நவவி அவர்கள், இமாம் , மஃமூம்களை முன்னோக்குவது விரும்பத்தக்கது என்று கூறுகின்றார்கள் . (Dr.Ahmed Ashraff)

Check Also

முஸ்லிம்க்கு சொர்க்கம், காஃபிர்க்கு நரகமா? | கேள்வி பதில் |

முஸ்லிம்க்கு சொர்க்கம், காஃபிர்க்கு நரகமா? அஷ்ஷேக் ரம்ஸான் பாரிஸ் (மதனி) சிறப்பு மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சி முஸ்லிம்க்கு சொர்க்கம், …

Leave a Reply