Home / ஃபிஹ்க் ஏனையவைகள் / ருகூஃ, ஸுஜுதுகளில் ஓத முடியுமான அவ்ராதுகள்…

ருகூஃ, ஸுஜுதுகளில் ஓத முடியுமான அவ்ராதுகள்…

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

மனிதனைப் படைத்த அல்லாஹ்வுத்தஆலா அவன் நாளாந்தம் தனக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்பதற்காக சில கடமைகளை மனிதன் மீது கடமையாக்கி இருக்கிறான். அவ்வாறு கடமையாக்கப்பட்ட கடமைகளில் ஒன்று தான் தொழுகையாகும்.

சில தொழுகைகள் மனிதன் மீது கடமையானதாகவும் இன்னும் சில தொழுகைகள் சுன்னத்தாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றன. எந்த தொழுகைகளாக இருந்தாலும் அவைகளை எப்படி நிறைவேற்ற வேண்டுமென்ற ஒழுங்கினை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழகான முறையில் வழிகாட்டியிருக்கிறார்கள்.

அந்தடிப்படையில் தொழுகையில் காணப்படுகின்ற பகுதிகளாக ருகூஃ மற்றும் ஸுஜூத் போன்றவைகள் காணப்படுகின்றன. இவைகளில் என்ன அவ்ராதுகள் ஓத வேண்டுமென்பதற்காக சில அவ்ராதுகளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்திருக்கிறார்கள்.

சில மக்களுக்கு அந்த அவ்ராதுகள் பாடமில்லாதவைகளாக இருக்கலாம். அல்லது பாடமாக இருந்தாலும் அதில் தவறுகள் விட்டு விட்டு பாடமாக இருந்தால் அவர்கள் அத்தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இவ்வாக்கத்தினை இந்தயிடத்தில் பதிவு செய்கிறேன்.

ருகூஃ, ஸுஜுதுகளில் ஓத வேண்டிய அவ்ராதுகள்:-

  • முதலாவது துஆ:

عن حذيفة رضي الله عنه :

أنه صلى الله عليه وسلم كان يقول في ركوعه : ( سبحان ربي العظيم ، وفي سجوده : سبحان ربي الأعلى ) رواه مسلم والترمذي .

ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ருகூவில்
‘ஸுப்ஹான ரப்பியல் அழீம்’ ( سبحان ربي العظيم ) என்றும், ஸுஜுதுகளில் ‘ஸுப்ஹான ரப்பியல் அஃலா’ ( سبحان ربي الأعلى ) என்றும் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள்.
(முஸ்லிம், திர்மிதி)

இந்த அவ்ராதுகளை நாம் ஒவ்வொருவரும் கட்டாயமாக வாசித்துப் பார்க்க வேண்டும்.

ஏனென்றால் சில மக்கள் ருகூஃவுடைய நேரத்தில் ஸுப்ஹான ரப்பியல் அழீம் வபி ஹம்திஹி என்றும் ஸுஜூதுடைய நேரத்தில் ஸூப்ஹான ரப்பியல் அஃலா வபி ஹம்திஹி என்றும் “வபி ஹம்திஹி” என்ற சொல்லை இந்தயிடத்தில் மேலதிகமாக ஓதுகின்றனர். ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த நேரங்களில் வபி ஹம்திஹி என்ற வார்த்தையினை சேர்க்கவில்லை என்ற செய்தியினை இந்த ஹதீஸின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

  • இரண்டாவது துஆ:

وعن علي رضي الله عنه :

أن رسول الله صلى الله عليه وسلم كان يقول إذا ركع : ( اللهم لك ركعت وبك آمنت ولك أسلمت ، خشع لك سمعي وبصري ومخي وعظمي وعصبي ، وإذا رفع قال : اللهم ربنا لك الحمد ملء السماوات ومل ء الأرض وملء ما بينهما وملء ما شئت من شئ بعد ، وإذا سجد قال : اللهم لك سجدت وبك آمنت ولك أسلمت ، سجد وجهي للذي خلقه وصوره وشق سمعه وبصره تبارك الله أحسن الخالقين ) رواه مسلم .

அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ருகூவிற்குச் சென்றால் ‘அல்லாஹும்ம லக ரகஃது வபிக ஆமன்து வலக அஸ்லம்து ஹஷஆ லக ஸம்ஈ வபஸரீ வமுஹ்ஹி வ அழ்மி வ அஸபீ’ என்றும் ருகூவிலிருந்து எழும்பினால் ‘அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வமில்அல் அர்ழி மா பைனஹுமா வமில்அமா ஷிஃத மின் ஷைஇன் பஃத்’ என்றும் ஸுஜூதுக்கு சென்றால் ‘அல்லாஹும்ம லக ஸஜத்து வபிக ஆமன்து வலக அஸ்லம்து ஸஜத வஜ்ஹிய லில்லதி ஹலககு வஸவ்வரகு வஷக்க ஸம்அஹு வபஸரஹு தபாரகல்லாஹு அஹ்ஸனுல் ஹாலிகீன்’ என்றும் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள்”
(முஸ்லிம்)

  • மூன்றாவது துஆ

وعن عائشة رضي الله عنها قالت :

كان النبي صلى الله عليه وسلم يقول في ركوعه وسجوده : ( سبحانك اللهم ربنا وبحمدك ، اللهم اغفر لي ) رواه البخاري .

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ருகூவிலும் ஸுஜூதிலும் ‘ஸுப்ஹானகல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக அல்லாஹும்ம இஃபிர்லி’ என்று ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள்”
(புஹாரி)

ஆகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ருகூவிலும் ஸுஜூதிலும் ஓதிய இது போன்ற துஆக்களை நாமும் ஹதீஸ்களில் வந்தது போன்று ஓதி அல்லாஹ்வுடைய அன்பை பெற்றுக் கொள்வோமாக!

தொகுப்பு:பர்ஹான் அஹமட் ஸலபி

Check Also

வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 01 |

வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 01 | அஷ்ஷேக் அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி Subscribe to our …

Leave a Reply