Home / Uncategorized / النحو الواضح (Nahw_al_wadhiah) அரபு மொழி – பாடம் 2| ஆசிரியர் : சல்மான் பாரிஸ் Misc

النحو الواضح (Nahw_al_wadhiah) அரபு மொழி – பாடம் 2| ஆசிரியர் : சல்மான் பாரிஸ் Misc

النحو الواضح (Nahw_al_wadhiah) அரபு மொழி – பாடம் 2 PDF(Download)

النحو الواضح அரபு புத்தகம் (Download)

தொடர் – 2
—————–
النحو
الواضح

————-
الجزء الأول முதலாவது பாகம்
——————————————–
ஆய்வு :
————
இதில் الْبُسْتَانُ جَمِيْلٌஎன்ற முதலாவது இணைப்பை மட்டும் நாம் எடுத்துக்கொண்டால் , இரண்டு வார்த்தைகளால் இணைந்திருப்பதை நாம் பார்க்கலாம்.
இதில் الْبُسْتَانُஎன்ற வார்த்தையை மட்டுமோ அல்லது جَمِيْلٌஎன்ற வார்த்தையை மட்டுமோ நாம் எடுத்துக்கொண்டால் , அதில் தனித்த அர்த்தத்தைத் தவிர நாம் விளங்கமாட்டோம்.
உரையாடுவதற்கும் இந்த ஒற்றை வார்த்தைப் போதுமானதாக ஆகாது.
இவ்விரண்டு வார்த்தைகளையும் இணைப்பிலுள்ள முறையின் அடிப்படையில் நாம் இணைக்கும் போது தான் நமக்கு முழுமையான அர்த்தமும் , அதன் பயனும் கிடைக்கிறது. الْبُسْتَانُ என்ற தோட்டமாகிறது جَمِيْلٌ என்ற அழகின் மூலம் வர்ணனை பெற்றிருக்கிறது.
இதனால் தான் இதற்கு பயனுள்ள வாக்கியம் (الْبُسْتَانُ جَمِيْلٌ) என்று பெயர்ச்சொல்லப்படுகிறது. இவ்விரண்டு
வார்த்தைகளில் ஒவ்வொன்றும் இந்த வாக்கியத்தில் ஒரு பகுதியாகக் கருதப்படும்.
இவ்வாறு தான் மீதமுள்ள உதாரணங்களிலும் சொல்லப்படும்.
இதன் மூலம் ஒரு வார்த்தை மட்டும் உரையாடுவதற்கு போதுமானதாக ஆகாது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். ஏனெனில் மனிதன் முழுமையான பயனை அடைந்து கொள்வதற்கு இரண்டு வார்த்தைகளோ அல்லது அதற்கு மேற்பட்ட வார்த்தைகளோ இருப்பது அவசியமாகும்.
قُمْ , اِجْلِسْ , تَكَلَّمْ.
போன்ற வார்த்தைகளை வெளிப்படையாகக் காணும்போது ற்றை வார்த்தையாகவும் , உரையாடுவதற்கு
போதுமானதாகவும் இருக்கிறது. ஆனால் உண்மையில் இவைகள் ஒற்றை வார்த்தை கிடையாது. இவை
இரண்டு வாக்கியங்களால் இணைக்கப்பட்ட ஒரு வாக்கியம் ஆகும்.
அவற்றில் ஒன்று قُمْ என்பதைப் போல் வெளிப்படையாக மொழியப்பட்டது
ஆகும். மற்றொன்று வெளிப்படையில் மொழியப்படாதது ஆகும். அதுவாகிறது “
أَنْتَ” (நீ) என்பதாகும். இது
மொழியப்படாவிட்டாலும் கேட்கக்கூடியவன் வாக்கியத்தில் புரிந்துகொள்வான்.
குறிப்பு : اِجْلِسْ என்றால் அமரு என்று பொருள். அதாவது இது வெளிப்படையில் ஒற்றை வார்த்தையாக
இருந்தாலும்
நீ அமருஎன்ற இணைக்கப்பட்ட இரு வார்த்தைகளாகவே
உள்ளது. அதே போல் தான் மற்ற இரு வார்த்தைகளும்.
الْقَوَاعِدُசட்டங்கள்
—————————-
1. வார்த்தைகளால் ஆன இணைப்பு என்பது முழுமையான
பயனை தருவது ஆகும்.
இதற்கு الْجُمَلَةُ الْمُفِيْدَةُ பயனுள்ள வாக்கியம் என்றும் வாக்கியம் كَلَامًا– வாக்கியம் என்றும் சொல்லப்படும்.
2. الْجُمَلَةُ الْمُفِيْدَةُ
பயனுள்ள வாக்கியமாகிறது இரண்டு வார்த்தைகளோ அல்லது அதற்கும் மேற்பட்ட வார்த்தைகளோ
இணைந்ததாக இருக்கும். அதில் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு பகுதியாக கருதப்படும்.

 

இன் ஷாஅ அல்லாஹ் . . .தொடரும் . . .

Check Also

Muharram

https://www.qurankalvi.com/category/islamic-months/muharram/

Leave a Reply