Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 69

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 69

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 69

உலகத்தில் மறுமையை நம்பக்கூடியவர்கள் : முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள்

மேற்கூறப்பட்ட கூட்டத்தினர் பொதுவாக நம்பக்கூடிய சம்பவம் :
குகைவாசிகளின் சம்பவம் (இது மறுமை இருக்கிறது என்பதற்கான  ஆதாரம் என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்)

உலக மக்களில் அதிகமானோரின் நம்பிக்கை அறிவுக்கு முரண்படாமல் இருந்தால் அது உண்மை என்பதற்கான சான்றாகும்.

சூரா பகரா வில் 3 சம்பவங்கள் (மரணித்தவர்களை உயிர்ப்பித்த சம்பவங்கள்):

  1.  இப்ராஹிம் (அலை) பறவைகளை வெட்டி பிறகு வா என்று அழைத்தபோது அது உயிருடன் வந்தது.
  2.  மூஸா (அலை) – மாட்டை அறுத்து அதன் துண்டை மரணித்தவர் மீது அடிக்கச்செய்து அவரை உயிருடன் எழுப்பிய சம்பவம் .
  3. அழிந்து போன கிராமத்தை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான் என எண்ணிய (உஸைர் அலை) அவர்களை அல்லாஹ் 100 வருடம் மரணிக்க வைத்தான். அவர் எழுந்து பார்த்தபோது உணவு நன்றாகவும் கழுதை உக்கிப்போன நிலையிலும் இருந்தது

சுவர்க்கமும் நரகமும் அழிக்கப்படுமா?

ஸூரத்துர் ரஹ்மான் 55: 26, 27

كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ, وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلالِ وَالإِكْرَامِ

(26)(பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே –

وَيَبْقَىٰ وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ

(27) மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.

ஸூரத்துந் நம்ல் 27:87

وَيَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَفَزِعَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ ۚ

وَكُلٌّ أَتَوْهُ دَاخِرِينَ

இன்னும் ஸூர் (எக்காளம்) ஊதப்படும் நாளை (நபியே! நீர் நினைவூட்டுவீராக அந்நாளில்) அல்லாஹ் நாடியவர்களைத் தவிர, வானங்களில் இருப்வர்களும், பூமியில் இருப்பவர்களும் திகிலடைந்து விடுவார்கள்; அவ்வனைவரும் பணிந்தவர்களாக அவனிடம் வருவார்கள்.

அல்லாஹ் எதை நாடுவான் என்று நாம் அறியமாட்டோம் ஆகவே இதைப்பற்றி எவ்வாறு அல்லாஹ் குர்ஆனில் விளக்கி இருக்கிறானோ அவ்வாறே புரிந்து கொள்வது சிறந்தது

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply