Home / Islamic Months / Haj / Umrah / Sacrifice / அரஃபா நாளில் ஏற்படும் தவறுகள் – செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர் -6

அரஃபா நாளில் ஏற்படும் தவறுகள் – செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர் -6

அரஃபா நாளில் ஏற்படும் தவறுகள்

1. அரஃபாவின் எல்லைகளை அறிந்து கொள்ளாமல் அராஃபாவிற்கு வெளியே தங்குவது இது மிகப்பெரும் தவறாகும். அரஃபாவில் தங்குவது ஹஜ்ஜின் கடமைகளில் மிக முக்கியமான கடமையாகும். அரஃபாவில் ஒருவர் தங்கவில்லையெனில் ஹஜ் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

2. அராஃபவில் தங்கி இருக்கும் ஒருவர் து ஆ செய்யும் போது கிபலாவை தனது வலப்பக்கமாகவோ, இடப்பக்கமாகவோ, பின் பக்கமாகவோ அமைத்துக் கொண்டு அராஃபவில் உள்ள ஜபலுர் ரஹ்மா என்ற மலையை முன்னோக்கி து ஆ செய்வது . இது சுன்னாவிற்கு மாற்றமாகும். கிபலாவை முன்னோக்கி து ஆ செய்வதே சிறந்தது.

3. மேலும் சிலர் அரஃபாவிலுள்ள ஜபலுர் ரஹ்மா என்ற மலையின் மீது ஏறி தொழுவதை கடமையாக கருதுகின்றனர். இதற்காக முண்டியடித்துக் கொண்டு கூட்ட நெரிசலை ஏற்படுத்துகின்றனர் . இது பித்தான செயலாகும் . இதற்கு நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல் இல்லை.

4. இன்னும் சிலர் அரஃபாவுடைய அந்த நாளிலே உண்பது , குடிப்பது , வீண் பேச்சு , கேளிக்கைகளில் ஈடுபடுவது என அந்த நாளை எந்த பயனும் இல்லாமல் கழிக்கின்றனர். இது சுன்னாவிற்கு மாற்றமான செயல் ஆகும். பரக்கத் நிறைந்த அந்தநாளில் சூரியன் மறைகின்ற வரை து ஆ ,திக்ரு , குர் ஆன் ஓதுவது , போன்ற நஃபிலான வணக்க வழிபாடுகளில் அதிகம் ஈடுபடவேண்டும்.

5. சூரியன் மறைவதற்கு முன் அரஃபாவிலிருந்து வெளியேறுவது இதுவும் சுன்னாவிற்கு மாற்றமான செயல் ஆகும் யார் அரஃபாவின் எல்லையிலிருந்து சூரியன் மறைவதற்கு முன் வெளியேறி பின் திரும்பவில்லையோ அவர் ஹஜ்ஜின் கடமைகளிலிருந்து ஒரு கடமையை விட்ட குற்றத்திற்கு ஆளாகிறார். அவர் ஃபித்யாவாக ஒரு ஆட்டை பலி கொடுக்க வேண்டும்.

6. அரஃபாவிலிருந்து முஸ்தலிபாவிற்கு செல்வதற்காக அமைதியை கடைபிடிக்காமல் அவசரப்பட்டு தனக்கும் பிறருக்கும் சிரமத்தை ஏற்படுத்திக் கொண்டு செல்வது இதுவும் மிகப் பெரும் தவறாகும்.

அரஃபா தினத்தில் நபி(ஸல்) அவர்களுடன் நான் திரும்பும்போது, நபி(ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் ஒட்டகத்தை அடித்து விரட்டக் கூடிய கடும் (அதட்டல்) சப்தத்தையும் ஒட்டகம் அலறுவதையும் செவியுற்றார்கள். உடனே தம் சாட்டையால் சைகை செய்து, ‘மக்களே! அமைதியைக் கடைப்பிடியுங்கள்! நன்மையென்பது விரைவதிலோ விரட்டுவதிலோ இல்லை’ எனக் கூறினார்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார், நூல் : புகாரி 1671

7. மஃரிபையும், இஷாவையும் சிலர் அரஃபாவில் தொழுகின்றனர் முஸ்தலிபாவில் தொழுவதே நபிவழியாகும் . எனினும் நேரம் தவறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தொகுப்பு : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி

Check Also

துல்ஹஜ் பத்து நாற்களும் அதில் செய்ய வேண்டிய சில அமல்களும்

அஷ்ஷேக் தஸ்னீம் கபுரி ஹஜ் வழிகாட்டுதல் வகுப்பு துல்ஹஜ் பத்து நாற்களும் அதில் செய்ய வேண்டிய சில அமல்களும் 17 …

Leave a Reply