Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / இறைவன் கேட்கும் சில கேள்விகள் 12

இறைவன் கேட்கும் சில கேள்விகள் 12

அகீதா

இறைவன் கேட்கும் சில கேள்விகள்!?

பாகம் – 12

மக்காவில் இருந்த இணைவைப்பாளர்கள் எப்படிப் பட்டவர்கள்?

யூதர்கள் மற்றும் கிருஸ்துவர்களைத் தவிர அதிகமானவர்கள் மறுமையை நம்பாத இணைவைப்பாளர்கள்,

எனவே தான் நாங்கள் மறுமையில் எழுப்பப்படுவோமா? தண்டிக்கப்படுவோமா?என்றெல்லாம் அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டனர்.

ஸூரத்து ஃபாத்திர் 35:40

قُلْ اَرَءَيْتُمْ شُرَكَآءَكُمُ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ اَرُوْنِىْ مَاذَا خَلَقُوْا مِنَ الْاَرْضِ اَمْ

لَهُمْ شِرْكٌ فِى السَّمٰوٰتِ‌ ۚ اَمْ اٰتَيْنٰهُمْ كِتٰبًا فَهُمْ عَلٰى بَيِّنَتٍ مِّنْهُ ۚ بَلْ اِنْ يَّعِدُ الظّٰلِمُوْنَ

بَعْضُهُمْ بَعْضًا اِلَّا غُرُوْرًا‏

  “அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள் இணை தெய்வங்களை நீங்கள் கவனித்தீர்களா? “அவர்கள் பூமியில் எதைப்படைத்திருக்கின்றனர்?” என்பதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களின் (படைப்பில்) அவர்களுக்கு ஏதேனும் கூட்டுண்டா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக; அல்லது தெளிவான ஆதாரத்தை அளிக்கக் கூடிய வேதத்தை நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா? எதுவுமில்லை! அநியாயக்காரர்கள், அவர்களில் சிலர் சிலருக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றேயன்றி வேறில்லை” (என்று நபியே! நீர் கூறும்)

இந்த உலகில் வேதம் என்று நம்பக்கூடிய எதை எடுத்தாலும் அதில் ஏகத்துவத்தை மாற்ற அல்லது அழிக்க எவராலும் முடியவில்லை என்பதே பிற மதத்தவரும் பெரும் சவாலாகவும் அதில் அவர்களுக்கு படிப்பினையும் இருக்கிறது.

ஸூரத்துல் அஹ்காஃப் 46:4

قُلْ اَرَءَيْتُمْ مَّا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَرُوْنِىْ مَاذَا خَلَقُوْا مِنَ الْاَرْضِ اَمْ لَهُمْ شِرْكٌ فِى

السَّمٰوٰتِ‌ؕ اِیْتُوْنِىْ بِكِتٰبٍ مِّنْ قَبْلِ هٰذَاۤ اَوْ اَثٰرَةٍ مِّنْ عِلْمٍ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏

  “நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன; அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

ஸூரத்துல் ஹஜ் 22:73

  மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

One comment

  1. Assalam alikkum (var)Bathroom pogum pothu left kalaium velila Varumpothu right kalaium vaithuthan varavenduma illai eppadinalaum poi varalama vilakkam tharavum

Leave a Reply