Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / உசூலுல் ஹதீஸ் பாகம் 1

உசூலுல் ஹதீஸ் பாகம் 1

உசூலுல் ஹதீஸ்

பாகம்-1

 

مصطلح الحديث, علوم الحديث, اصول الحديث

🔰 நாம் ஏன் உசூலுல் ஹதீஸை தெரிந்து கொள்ள வேண்டும்?

நாம், நபி (ஸல்)அவர்களின் வார்த்தைகளை நேரடியாக செவிமடுக்கவில்லை. நாம் அவர்களின் செயல்களை நேரடியாக கண்டதில்லை . இவைகளை அறிவிக்கும் அறிவிப்பாளர்களின் மூலமே அறிந்துகொள்ளவேண்டியுள்ளது .  ஆதலால் அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மை, மனனசக்தி, கிரகிக்கும் ஆற்றல், அவர்களின் தகவல் முரண்பாடு, தவறுகள் போன்றவற்றை உறுதிப்படுத்தும் ஆய்வு முறையே உஸுலுல் ஹதீஸ்(ஹதீஸ் கலையின் மூலதத்துவங்கள்) என்ற கலை தோற்றம் பெற்றது . நபியவர்களிடம் சஹாபாக்கள் ஹதீஸை நேரடியாகப் பெற்றவர்கள் என்றவகையில் , முதலில் அவர்களைப்பற்றி ஆராய்வோம்.

சஹாபாக்கள் ஹதீஸை நேரடியாக கற்றவர்கள் என்றவகையில் , முதலில் அவர்களைப்பற்றி ஆராய்வோம்

ஒவ்வொரு ஹதீஸின் தரத்தைப்பற்றிய அறிவைப்பெறவே நாம் இதைக்கற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம்.

🔰 ஸஹாபி என்பவர் யார்?

من لقي النبي صلى الله عليه وسلم مؤمنا ومات على الإسلام،

♻️நபி ஸல் அவர்களை முஸ்லிமான நிலையில் சந்தித்து மேலும் முஸ்லிமான நிலையில் மரணித்தவரை ஸஹாபி என்றழைக்கப்படுவார்.

ولو تخللت  ذلك ردة

♻️ ஒருவேளை அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி மீண்டும் முஸ்லிமாக மாறினாலும் ஸஹாபி என்ற அந்தஸ்தை அவர் இழப்பதில்லை.

உதாரணம் :

இஸ்லாத்தை விட்டு வெளியேறி மீண்டும் இஸ்லாத்தை ஏற்ற ஸஹாபி யார்❓அதற்கான பதில்

  قرّة بن هبيرة والأشعث بن قيس

💠 குர்ரத் இப்னு ஹூபைரா

இவர்☝️அபூபக்கர் (ரலி) அவர்கள்  காலத்தில் ஜகாத் விஷயத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு கொடுக்க வேண்டாம் என்று முர்தத்தா சொன்ன ஆட்களில் ஒரு ஆள்.ஹாலித் இப்னு வலீத் (ரலி) அவர்களால் இவர் பிடிக்கப்பட்டு, கட்டி அப்படியே அபூபக்கர் (ரலி) அவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது, அவர் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் சொன்னார். உள்ளே முர்தத்தாக இல்லை, வெளியே தான் முர்தத். எனக்கு பிள்ளைகள், சொத்துக்கள் இருந்தன.. அவைகளெல்லாம் பரிபோய்விடும் என்று பயந்து முர்தத் ஆக கூறினேன் என்றார்.பிறகு, அபூபக்கர் (ரலி) அவரை விட்டுவிட்டார்கள்.


💠அல் அஸ்அத் இப்னு கைஸ்

இவரும்☝️முர்தத் ஆன ஆட்களில் ஒரு ஆள். ஜக்காத் கொடுக்க மாட்டோம் என்று சொல்லி, அவரும் சிறை பிடிக்கப்பட்டு அபூபக்கர் (ரலி) அவர்களிடம் மதீனாவை நோக்கி அனுப்பப்பட்டார். வந்ததும் அவர் மீண்டும் இஸ்லாத்தை தழுவினார்.
அபூபக்கர் (ரலி) அவர்கள், தன் சகோதரி உம்மு ஃபர்வா அவர்களை அவருக்கு திருமணம் முடித்து கொடுத்தார்கள்.

🔰 ஒருவரை ஸஹாபி என்று எவ்வாறு அறிந்து கொள்வது?
1) التواتر நாம் காலம்காலமாக வாழையடி வாழையாக  ஸஹாபி  என பரவலாக அறியப்பட்டவர்  (உதாரணம்: அபூபக்கர் , உமர், உத்மான், அலி (ரலி).
2) الشهرة மக்கள் மத்தியில் பிரபல்யமானவர்கள் (உதாரணம் :-   ضمام بن ثعلبةலிமாம் பின் தஃலபா, உக்காஷஹ் பின் மிஹ்ஸன்.
3) ஸஹாபி, ஒருவரை நபியவர்களைக் கண்டதாக கூறுவது.
4) நம்பகத் தன்மை உள்ளவர், தான் நபியவர்களைக்கண்டதாகக் கூறுவது . ஆனால் அவ்வாறு கூறுபவர் , ஹிஜ்ரி100 க்கு முன்பு வாழ்ந்தவராகயிருக்கவேண்டும் .
5) ஒரு நம்பிக்கைக்குரிய, சஹாபாக்களைப் பற்றிய அறிவு உள்ள  “தாபிஈ” ஒருவர் குறிப்பிட்ட நபரை  ஸஹாபி என அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும்.

🔸 الصحابة رضى الله عنهم كلهم عدول

சஹாபாக்கள் அனைவரும் நம்பகமானவர்களே. சில சந்தர்ப்பங்களில் சில தவறுகள் ஏற்படலாம் ஆனால் அவர்களுடைய நம்பகத்தன்மையில் ஒரு குறைவும் இல்லை.
ஸஹாபாக்கள், நம்பகத்தன்மை என்ற விடயத்தில் விமர்சனங்களுக்கு(الجرح ) அப்பாற்பட்டவர்கள் . இதை அரபியில் “الصحابة كلهم عدول  (ஸஹாபாக்கள் அனைவரும் நம்பகமானவர்களே) என்று கூறப்படும். அதாவது, அல்லாஹ் , ஸஹாபாக்களை, நபிகளார் மீது மனமுரண்டாக பொய் சொல்வதிலிருந்து பாதுகாத்துள்ளான் என்பதாகும். ஆனால், பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் என்ற பொருள் அல்ல . ஏனெனில் சில ஸகாபாக்கள் , விபச்சாரம் போன்ற பாவங்கள் செய்து தண்டிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் , சில சந்தர்ப்பங்களில் ஹதீஸ் அறிவிக்கும்போது அதில் அவர்களுக்கு தற்செயலான தவறு ஏற்படலாம். அது மனித சுபாவத்துக்கு உட்பட்டதாகும்.
“ஸஹாபாக்கள் அனைவரும் நம்பகமானவர்களே” என்ற விதி, அவர்கள் மத்தியில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தங்களில் கலந்து கொண்டவர்கள் , கலந்து கொள்ளாதவர்கள் அனைவருக்கும் பொருந்தும். இது அஹ்லுஸ் ஸுன்னாக்களின் ஏகோபித்தமுடிவாகும் . ஆனால் வழிகெட்ட ஷீயாக்கள், அலி (ரழி) அவர்களுக்கு எதிரானவர்கள் அனைவரையும் தரக்குறைவாகப் பேசுகின்றனர்.

🔸معصومو نمن تعمد الكذب على البى صلى الله عليه وسلم

நபி (ஸல்) மீது வேண்டுமென்று இட்டுக்கட்டி பொய் சொல்ல மாட்டார்கள்(சஹாபாக்களில் தவறு சில செய்தவர்களும் இருக்கிறார்கள் உதாரணம் விபச்சாரக்குற்றம் நிறைவேற்றப்பட்டவர்களும் இருக்கிறார்கள்)
🔸சஹாபக்களுக்கிடையில் சில யுத்தங்களும் நடந்திருக்கின்றன. அதை வைத்து ஷியாக்கள் சில சஹாபாக்களை திட்டுகிறார்கள்.அது சரியான நிலைப்பாடன்று.

🔷 அதிகமான ஹதீஸுகளை அறிவித்த 6 முக்கிய சஹாபாக்கள்

  • அபூஹுரைரா (ரலி) 5374
  • இப்னு உமர் (ரலி) 2630
  • அனஸ் இப்னு மாலிக் (ரலி) 2186
  • ஆயிஷா (ரலி) 2110
  • இப்னு அப்பாஸ் (ரலி) 1660
  • ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி)1540

🔷 அதிகமான மார்க்கதீர்ப்பு வழங்கியவர் இப்னு அப்பாஸ் (ரலி). அவர் நபி (ஸல்) வின் காலத்தில் சிறுவராக இருந்தாலும் நீண்ட காலம் வாழ்ந்தவர்.

🔷 நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 4 அப்துல்லாஹ்க்கள் ⤵

  • அப்துல்லாஹ் இப்னு உமர்
  • அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்
  • அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்
  • அப்துல்லாஹ் இப்னு அமர் இப்னுல் ஆஸ்

🔰 சஹாபாக்கள் மொத்தம் எத்தனை பேர்?

சஹாபாக்கள் எண்ணிக்கை பற்றி நுணுக்கமான மதிப்பீடு கிடையாது. ஆனால் ஒரு லட்சத்தி பதினாலாயிரம் பேர் இருக்கலாம் என ஹதீஸ் கலை அறிஞர் அபூஸுர்ஆ அர்ராஸி கூறுகிறார்கள்.

🔷 சஹாபாக்களில் பல தரப்பட்டவர்கள் உள்ளார்கள் ⤵

  • ஹிஜ்ரத் செய்தவர்கள்
  • அடைக்கலம் கொடுத்த அன்ஸாரிகள் 
  • முக்கிய யுத்தங்களில் கலந்து கொண்டவர்கள்  
  • முதலாவதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள்.
  • மக்கா வெற்றிக்குப்பின் இஸ்லாத்தைத் தழுவியவர்கள்.
  • 🔷 சஹாபாக்களில் சிறந்தவர்கள் ⤵
  • முதலில் அபூபக்கர் (ரலி)
  • பிறகு உமர் (ரலி)
  • பிறகு உஸ்மான் (ரலி)
  • பிறகு அலீ (ரலி)

🔷முதலாவதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள்.⤵

  • அபூபக்கர் (ரலி) (அடிமையல்லாத சுதந்திரமானவர்களில்)
  • அலி பின் அபீ தாலிப் (ரலி) (சிறுவர்களில்)
  • கதீஜா (ரலி) (பெண்களில்)
  • ஜைத் இப்னு ஹாரிசா (ரலி) (அடிமையாக இருந்து விடுதலை பெற்றவர்களில்)
  • பிலால்(ரலி) (அடிமைகளில்)

🔷 கடைசியாக மரணித்த சஹாபி أبو الطفيل عامر بن واثلة الليثي அபூத் துபைல் ஆமிர் இப்னு வாதிலத  அல் லைதீ. இவருக்கு முன்பு அனஸ் (ரழி) அவர்கள் ஆவார் (அதாவது கடைசிக்கு முதல்)

🔷  சஹாபாக்களை பற்றிய மிக முக்கியமான நூல் :
இப்னு ஹஜர் அல் அஸ்கலானி தொகுத்த الإصابة في تمييز الصحابة என்ற நூலாகும் . (சஹாபாக்களின் பெயர்களை அலிப் பா வரிசையில் தொகுத்துள்ளார் . ஒவ்வொரு அச்சரத்தில் கூறப்பட்டவர்களை நான்காகப் பிரித்துள்ளார். நான்காவது, ஸஹாபாக்கள் என தவறுதலாக பட்டியலில் இணைக்கப்பட்டவர்கள். இது முக்கியத்துவம் வாய்ந்த பணியாகும் )

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply