Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / உசூலுல் ஹதீஸ் பாகம் 10

உசூலுல் ஹதீஸ் பாகம் 10

உசூலுல் ஹதீஸ்

பாகம்-10

உமர் (ரலி) ஹதீஸுக்கு விஷயத்தில் எவ்வாறு இருந்தார்கள்?

عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ ، أَنَّ عُمَر َ خَرَجَ إِلَى الشَّامِ ، فَلَمَّا جَاءَ سَرْغَ بَلَغَهُ أَنَّ

الْوَبَاءَ قَدْ وَقَعَ بِالشَّامِ ، فَأَخْبَرَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ

عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : ” إِذَا سَمِعْتُمْ بِهِ بِأَرْضٍ فَلَا تَقْدَمُوا عَلَيْهِ ، وَإِذَا وَقَعَ بِأَرْضٍ

وَأَنْتُمْ بِهَا فَلَا تَخْرُجُوا فِرَارًا مِنْهُ ” ، فَرَجَعَ عُمَرُ بْنُ الْخَطَّابِ مِنْ سَرْغَ ، وَعَنْ ابْنِ

شِهَاب ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ ، أَنَّ عُمَرَ إِنَّمَا انْصَرَفَ بِالنَّاسِ مِنْ حَدِيثِ عَبْدِ

الرَّحْمَنِ بْنِ عَوْفٍ

5730. அப்துல்லாஹ் இப்னு ஆமிர்(ரலி) கூறினார்:-
உமர்(ரலி) ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். ‘சர்ஃக்’ எனுமிடத்தை அவர்கள் அடைந்தபோது ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக அவர்களுக்குச் செய்தி எட்டியது. அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவினால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டு) வெளியேறாதீர்கள்’ என்று சொல்ல கேட்டேன்’ என்று கூறினார்கள்.
உடனே உமர்(ரலி), (தம் முடிவு நபி(ஸல்) அவர்களின் வழி காட்டுதலுக்கேற்பவே அமைந்திடச் செய்ததற்காக) அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டுத் திரும்பிச் சென்றார்கள்.

Book :76

7317. முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.
உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்கள் மக்களிடம் ஒரு பெண்ணுக்குக் குறை பிரசவம் ஏற்படச் செய்வது குறித்து – அதாவது (கர்ப்பிணிப்) பெண்ணின் வயிற்றின் மீது அடித்து கருவைச் சிதைத்துக் குறை பிரசவம் ஏற்படுத்துவது குறித்து – கேட்டார்கள். அப்போது ‘இ(ந்தக் குற்றத்திற்குப் பரிகாரம் என்ன என்ப)து தொடர்பாக உங்களில் யாரேனும் நபி(ஸல்) அவர்களிடம் ஏதும் கேட்டுள்ளீர்களா?’ என்று உமர்(ரலி) அவர்கள் வினவினார்கள். ‘கேட்டிருக்கிறேன்’ என்று நான் சொன்னேன். உமர்(ரலி) அவர்கள், ‘அது என்ன?’ என்று கேட்க, நான் ‘நபி(ஸல்) அவர்கள், ‘அந்த சிசுவுக்காக ஓர் ஆண் அடிமையை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை (இழப்பீடாக) வழங்கிட வேண்டும்’ என்று சொல்ல கேட்டிருக்கிறேன்’ என்று சொன்னேன். உடனே உமர்(ரலி) அவர்கள், ‘நீங்கள் சொன்னதற்கு ஒரு சாட்சியைக் கொண்டுவராத வரை உங்கள் பொறுப்பிலிருந்து நீங்கள் விடுபடமுடியாது’ என்றார்கள். அப்போது நான் அங்கிருந்து வெளியாகி முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி) யை கண்டேன் அவரும் இந்த விஷயத்தில் சாட்சி சொன்னபோது உமர் (ரலி) அதை ஏற்றுக்கொண்டார்கள்.

Book :96

🔷 ஆகவே இதன் மூலம் உமர் (ரலி) ஹதீஸுகள் விஷயத்தில் மிகுந்த கவனமெடுத்ததையும் 2 பேர் அறிவித்திருக்க வேண்டும் என்று விரும்பியதையும் நாம் காண்கிறோம்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply