Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / உசூலுல் ஹதீஸ் பாகம் 20

உசூலுல் ஹதீஸ் பாகம் 20

உசூலுல் ஹதீஸ்

பாகம்-20

🔷 உஸ்மான் (ரலி) வின் படுகொலைக்கு பின்னர் அரசியலில் ஏற்பட்ட தாக்கம் ஹதீஸ் கலையிலும் ஏற்பட்டது. உஸ்மான் (ரலி) கொல்லப்பட்டதும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தில் தலைமைத்துவத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது அது நிரப்பப்படாமல் இருந்தது. அப்போது உஸ்மான் (ரலி) வின் கொலையில் சம்மந்தப்பட்டவர்கள் அலீ (ரலி) இடம் தலைமைத்துவத்தை ஏற்குமாறு கோரினர். அதற்கு ஆரம்பத்தில் அலீ (ரலி) மறுத்தாலும் பிறகு கலீஃபா வாக உடன்பட்டு பைஅத் செய்தபோது உஸ்மான் (ரலி) வை கொன்றவர்களும் மக்களுடன் இணைந்து அலீ (ரலி) விடம் பைஅத் செய்தார்கள்.

🔷 அப்போது ஸஹாபாக்களின் ஒரு சாரார்(தல்ஹா (ரலி), ஸுபைர் (ரலி) போன்றவர்கள்) அலீ (ரலி) விற்கு பைஅத் செய்ததற்கு பிறகு ஹஜ்ஜிற்காக மக்கா சென்றிருந்த ஆயிஷா (ரலி) அவர்களை சந்திக்க சென்றார்கள். உஸ்மான் (ரலி) வை கொன்றவர்களை இனம் கண்டு பழிவாங்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். பிறகு பஸரா விற்கு சென்று ஆட்களை திரட்டி இதைப்பற்றி எடுத்துரைத்தார்கள். அதற்கு பிறகு ஒட்டக யுத்தம் நடந்தேரியது அதில் அலீ (ரலி) வெற்றி பெற்றார்கள் அந்த யுத்தத்தில் தல்ஹா (ரலி) கொல்லப்படுகிறார்கள் மேலும் ஸுபைர் (ரலி) அவர்கள் அந்த யுத்தத்திற்கு பிறகு கொல்லப்பட்டார்கள். இவர்களது மரணத்துடன் அந்த கோரிக்கை முடிந்துவிடவில்லை. அதற்குப்பிறகு முஆவியா (ரலி) உஸ்மான் (ரலி) விற்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்தார்கள். அப்போது அலீ (ரலி) ஷாம் நாட்டு மக்களெல்லாம் எனக்கு பைஅத் செய்ய வேண்டும் என்று முஆவியா (ரலி) விற்கு கடிதம் எழுதினார்கள். அதற்கு முஆவியா (ரலி) பதில் அனுப்புகையில் உஸ்மான் (ரலி) அநியாயமாக கொல்லப்பட்டு விட்டார்கள் அவர்களை கொன்றவர்களுக்கு முதலில் பழி தீர்க்கப்பட வேண்டும். அதற்கான பலம் என்னிடம் தான் இருக்கிறது ஆகவே அந்த கொலைக்காரர்களை என்னிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படியாயின் நான் உங்களுக்கு பைஅத் செய்வேன் என்றார்கள்.

🔷 அதற்கு அலீ (ரலி) அனைத்து மக்களும் எனக்கு பைஅத் செய்து விட்டார்கள் ஆகவே இந்த சர்ச்சையை என்னிடம் விட்டுவிடுங்கள் நான் அதில் நீதமான தீர்ப்பை அளிக்கிறேன் என்று பதிலளித்தார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply