Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / உசூலுல் ஹதீஸ் பாகம் 4

உசூலுல் ஹதீஸ் பாகம் 4

உசூலுல் ஹதீஸ்

பாகம்-4

1.

 
2.

 

ஹதீஸுகளை கேட்பதிலும் பரப்புவதில் ஸஹாபி பெண்களின் பங்களிப்பு

🔷 நபி (ஸல்) பெருநாள் திடலில் பெண்கள் பக்கம் தனியாக போய் பிரசங்கம் செய்தார்கள்.

🔷 பெண்கள் தங்களுக்கென ஒரு நாளில் கல்வி கற்பிக்குமாறு நபி (ஸல்) விடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க நபி (ஸல்) பெண்களுக்கு தனியாக கல்வி கற்றுக்கொடுத்தார்கள்

🔷 தனிப்பட்ட முறையில் சில ஸஹாபி பெண்கள் நேரடியாக நபி (ஸல்) விடம் வந்து கேட்டு தெரிந்து கொண்டார்கள் அல்லது ஆயிஷா (ரலி) மூலமாக கேட்டு தெரிந்து கொண்டார்கள்.

ﻭﻗﺎﻟﺖ أم المؤمنين ﻋﺎﺋﺸﺔ رضي الله عنها: “ﻧِﻌﻢَ اﻟﻨﺴﺎءُ ﻧﺴﺎءُ اﻷﻧﺼﺎﺭ ﻟﻢ ﻳﻤﻨﻌﻬﻦ

اﻟﺤﻴﺎء ﺃﻥ ﻳﺘﻔﻘﻬﻦ ﻓﻲ اﻟﺪﻳﻦ

ஆயிஷா (ரலி) – பெண்களில் சிறந்த பெண்கள். அன்சாரி பெண்கள் மார்க்க விஷயங்களை தெரிந்து கொள்வதில் அவர்கள் வெட்கப்பட மாட்டார்கள்

🔷 நபி (ஸல்) வின் மனைவிமார்கள் மார்க்க விஷயங்களை பரப்பக்கூடியவர்களாக இருந்தார்கள் அதில் குறிப்பாக ஆயிஷா (ரலி) புத்தி கூர்மையுடவர்களாகவும் இருந்தார்கள்.

🔷 இப்னு அபீ முலைக்கா (ரலி) – ஆயிஷா (ரலி) நபி (ஸல்) விடம் பல விவரங்களை தெளிவாக கேட்டறிந்தவர்களாக இருந்தார்கள்.

உதாரணம்:

صحيح البخاري برقم 103 : حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: أَخْبَرَنَا نَافِعُ بْنُ

عُمَرَ، قَالَ: حَدَّثَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

: كَانَتْ لاَ تَسْمَعُ شَيْئًا لاَ تَعْرِفُهُ، إِلَّا رَاجَعَتْ فِيهِ حَتَّى تَعْرِفَهُ، وَأَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ

عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ حُوسِبَ عُذِّبَ» قَالَتْ عَائِشَةُ: فَقُلْتُ أَوَلَيْسَ يَقُولُ اللَّهُ تَعَالَى:

{فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا} [الانشقاق: 8] قَالَتْ: فَقَالَ: ” إِنَّمَا ذَلِكِ العَرْضُ،

وَلَكِنْ: مَنْ نُوقِشَ الحِسَابَ يَهْلِكْ “

நபி (ஸல்) – மறுமையில் விசாரணைக்கு உட்படுபவர், வேதனை செய்யப்படுவார். அப்போது ஆயிஷா (ரலி) 84:8. ஓலையை வலது கரத்தில் வழங்கப்பட்டவன், சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான். என்று அல்லாஹ் குர்ஆனில் கூறவில்லையா என்று கேட்டார்கள் – அப்போது நபி (ஸல்) – அது விசாரணை அல்ல ; அது(நான் சொல்வது) ஒரு முஸ்லிமுடைய பாவங்கள் எடுத்துக்காட்டப்படும் .(அதன் மூலம் , அல்லாஹ் அவரது பாவத்தை மறைத்து, மன்னித்துள்ளான் என்பதை அறிந்துகொள்வான்) அணுஅணுவாக யார் கேள்வி கேட்கப்படுகிறாரோ மறுமை நாளில் அவர் வேதனைக்கு உள்ளாக்கப்படுவார் என்று சொன்னார்கள்;(புஹாரி : 103

இது போல ஆயிஷா(ரலி) ஒவ்வொரு விஷயத்தையும் நபி(ஸல்) விடம் தெளிவாக கேட்டு அறியகூடியவர்களாக இருந்தார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply