Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / உசூலுல் ஹதீஸ் பாகம் 7

உசூலுல் ஹதீஸ் பாகம் 7

உசூலுல் ஹதீஸ்

பாகம்-7

 

 ரசூல் (ஸல்) அவர்களை நோக்கி, பிரதிநிதிகள் குழுவை அனுப்பி  ஸுன்னாவைப் கற்றுக்கொண்ட கோத்திரங்களின் பெயர்கள் :

  1. وفد بنىي سعد بن بكر  பனீ சஃத் பின் பக்ர் கோத்திரம் : அதில் முக்கியமானவர் தான் ضمام بن ثعلبة திமாம் இப்னு தஃலபா(ஸஹாபாக்களின் பிரபல்யமானவர்களை பற்றி படிக்கும்போது இவரை பற்றி நாம் படித்தோம்)
  2.  وفد عبد القيس  அப்துல் கைஸின் கோத்திரம் : நபி ஸல் விடம் வந்து சில சட்டங்களை படித்துக்கொண்டனர். குறிப்பாக குடிபானம் சம்மந்தப்பட்ட விஷயங்கள் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸுகளில் காணமுடிகிறது.
  3. وفد تجيب ” துஜீப் கோத்திரம் : இவர்கள் ஸதகாக்களை  நபி ஸல் விடம் கொண்டுவந்தார்கள். நபி ஸல் அவர்களை கௌரவித்து அவர்களுக்கு சில சட்டங்களை கற்றுக்கொடுத்தார்கள்.

🔷 இவைகள்நாம் அறிந்திருக்க வேண்டிய 3 முக்கியமான தூதுவர்களை அனுப்பிய கோத்திரங்களாகும்.

🔷 இறுதி ஹஜ்ஜில் நபி (ஸல்) உடன் 40,000 பேர் ஹஜ் செய்த்தார்கள் . மதீனாவிலிருந்து ஹஜ்ஜுக்கு செல்லும் வழியில் வசிக்கும் கோத்திரங்கள்  நபியவர்களுடன் இணைந்து கொண்டனர் .  இணைந்த கோத்திரங்கள் மூலமாக சில சுன்னாக்கள் பரவின. நபியவர்களின் இறுதி  உரை, ஆட்கள் அதிகமாக இருந்ததால் ربيعة بن أمية بن خلف  ரபீஅத் இப்னு உமய்யா இப்னு ஹலப் அவர்களை முபல்லிகாக நியமித்து அவர்கள் மூலமாக நபி ஸல் வின் செய்திகள் பிற கோத்திரங்களுக்கு பரப்பப்பட்டது.

🔷அந்த ஹஜ்ஜின்போது நபி ஸல் கூறினார்கள்

لعلي لا أحج بعد عامي هذا

🔷 நபி (ஸல்) – இந்த வருடத்திற்கு பின் நான் ஹஜ் செய்ய மாட்டேன் என நான் அஞ்சுகிறேன்

🔷 அந்த ஹஜ்ஜில் கலந்து கொண்ட கோத்திரங்கள் அனைவரும் நபி (ஸல்) வின் ஸுன்னாவை எடுத்துச் சென்றார்கள். அப்போது

சூரா அல்மாய்தா 5:3

اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتى ورضيت لكم الاسلام دينا

இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்.

என்ற வசனம் இறக்கப்பட்டது.  

🔷 இவ்வாறாக நபி (ஸல்) தனது சுன்னாவை கற்றுக்கொடுத்தார்கள் ஸஹாபாக்கள் கற்றுக்கொண்டார்கள்..

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply