Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / உசூலுல் ஹதீஸ் பாகம் 8

உசூலுல் ஹதீஸ் பாகம் 8

உசூலுல் ஹதீஸ்

பாகம்-8

 

நபி (ஸல்) விடமிருந்து ஸஹாபாக்கள் எவ்வாறு ஹதீஸுகளை பெற்றுக்கொண்டார்கள் என்று நாம் முந்தைய வகுப்புகளில் அறிந்து கொண்டோம். இப்போது நபி ஸல் வின் ஹதீஸுகளை தெரிந்து கொள்வதின் அவசியம் பற்றி   பார்ப்போம்

நபி (ஸல்) அவர்களுக்கு கட்டுப்படுதல்:

நபி ஸல் உயிரோடிருக்கும்போது அவர்களுக்கு கட்டுப்படுவது கடமையாகும்.

சூரா அன்னிஸா 4:65

فَلا وَرَبِّكَ لا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لا يَجِدُوا فِي أَنْفُسِهِمْ حَرَجًا

مِمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا

உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் , அவர்களுக்குக் கட்டுப்படல் :

சூரா அந்நூர் 24:56,63

وَأَقِيمُوا الصَّلاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ

(56)(முஃமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள்.

فَلْيَحْذَرِ الَّذِيْنَ يُخَالِفُوْنَ عَنْ اَمْرِهٖۤ اَنْ تُصِيْبَهُمْ فِتْنَةٌ اَوْ يُصِيْبَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏

(63)ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்

وصلوا كما رأيتموني أصلي

நபி ஸல் கூறினார்கள் என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறு தொழுங்கள்  (புஹாரி : 7246 )

لِتَأْخُذُوا مَنَاسِكَكُمْ

நபி ஸல் கூறினார்கள் என்னிடமிருந்து வணக்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள் (முஸ்லிம் :  1297 )

ஆகவே நபி ஸல் கற்பிக்கக்கூடிய சட்டங்களை நாம் ஏற்று நடப்பது கடமையாகும்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply