Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / உசூலுல் ஹதீஸ் பாகம் 9

உசூலுல் ஹதீஸ் பாகம் 9

உசூலுல் ஹதீஸ்

பாகம்-9

 

🏵 அபூபக்கர் (ரலி) காலத்தில் குர்ஆனை ஒன்று சேர்ப்பதில் அதிகமாக ஈடுபட்ட காரணத்தினால் ஹதீஸுகளை ஒன்று சேர்ப்பதை பற்றி அவர்கள் அப்போது முயற்சி எடுக்கவில்லை. எனினும் அவர்கள் காலத்தில் சில சம்பவங்கள் நடந்தது அதை வைத்து பார்க்கும்போது அபூபக்கர் (ரலி) ஹதீஸுகளுக்கு முக்கியம் கொடுத்ததாக காணமுடிகிறது.

حدثني يحيى عن مالك عن ابن شهاب عن عثمان بن إسحق بن خرشة عن قبيصة

بن ذؤيب أنه قال جاءت الجدة إلى أبي بكر الصديق تسأله ميراثها فقال لها أبو

بكر ما لك في كتاب الله شيء وما علمت لك في سنة رسول الله صلى الله عليه

وسلم شيئا فارجعي حتى أسأل الناس فسأل الناس فقال المغيرة بن شعبة حضرت

رسول الله صلى الله عليه وسلم أعطاها السدس فقال أبو بكر هل معك غيرك فقام

محمد بن مسلمة الأنصاري فقال مثل ما قال المغيرة فأنفذه لها أبو بكر الصديق

🏵 குபைஸத் இப்னு துவைப் (ரலி)-ஒரு பாட்டி அபூபக்கர் (ரலி) விடம் வந்து தனக்கும் அனந்தர சொத்தில் பங்கு வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.அதற்கு அபூபக்கர் (ரலி) அல்லாஹ்வுடைய வேதத்தில் உங்களுக்கு(பாட்டிக்கு) என்ன கொடுக்கப்படவேண்டும் என்று சொல்லப்படவில்லை மேலும் நபி (ஸல்) வின் சுன்னத்திலும் அதைப்பற்றி நான் அறிந்திருக்கவில்லை ஆகவே நான் மார்க்கம் தெரிந்தவர்களிடம் இதைப்பற்றி கேட்கிறேன் நீங்கள் பிறகு வாருங்கள் என கூறி பாட்டியை அனுப்பி வைத்தார்கள். பிறகு மக்களிடம் அபூபக்கர் (ரலி) இதைப்பற்றி கேட்டார்கள் அப்போது முகீரா இப்னு ஸுஹைப் (ரலி) கூறினார்கள் நான் நபி (ஸல்)உடனிருந்தபோது அவர்கள் 6 இல் 1 ஐ கொடுத்தார்கள் என்றார்கள் அப்போது அபூபக்கர் (ரலி) உங்களுடன் உங்களை தவிர வேறு யார் இந்த சம்பவத்தின்போது இருந்தார்கள் என வினவினார்கள்.அப்போது முஹம்மது இப்னு மஸ்லமா (ரலி) எழுந்து நின்று முகீரா சொன்னது போன்றே சொன்னார் ஆகவே அந்த பாட்டிக்கு 6 இல் 1 ஐ  கொடுக்க அபூபக்கர் (ரலி) உத்தரவிட்டார்கள்.
(இமாம் மாலிக்,அஹ்மத்,சுனனுல் அர்பஹா,இப்னு ஹிப்பான்,ஹாகிம்)

🏵 ஆகவே இந்த சம்பவத்தின் மூலம் அபூபக்கர் (ரலி) இந்த ஹதீஸை உறுதிப்படுத்திக்கொள்ள வேறு ஒரு சாட்சியமும் இருக்கிறதா என்று கேட்டார்கள் என்று விளங்க முடிகிறது.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply