Home / Uncategorized / உலகமே கண்ணீர் விட்டது – சிரியா மக்கள் கடலில் மூழ்கி பிணங்களாய் மிதந்தன

உலகமே கண்ணீர் விட்டது – சிரியா மக்கள் கடலில் மூழ்கி பிணங்களாய் மிதந்தன

சிரியா மக்கள் வாழ வழியில்லாமல் தங்களது உயிரையும் பணயம் வைத்து உயிர் வாழ்வதற்காக நீண்ட பயணம் செய்து வந்த விலை மதிக்க முடியாத உயிர்கள் இன்று கடலில் மூழ்கி பிணங்களாய் மிதந்தன…

சிரியாவில் தொடரும் உள்நாட்டு போர் மற்றும் சர்வதேச படைகளின் தாக்குதலினால் நாளுக்குநாள் சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் என அப்பாவி பொதுமக்கள் பல்லாயிரக் கணக்கானோர் கொலை செய்யப் படுகின்றனர்,

பாரிய அவலங்களையும், சிரமங்களையும் எதிர் நோக்கும் சிரியா பொதுமக்கள் ஆபத்தான பயணங்களை மேட்கொண்டு கடல் கடந்து சென்றாவது உயிர் வாழ எத்தனிக்கின்றனர்.

இந்நிலையில் துருக்கி கடல் ஊடாக கிரேக்க தீவுகளில் தஞ்சம் புகுந்து வாழ ஆபத்தான கடல் பயணம் மேற்கொண்ட தாய், தந்தை, இரு குழந்தைகள் என ஒரு சிரியா நாட்டின் குடும்ப உருப்பினர்கள் முழுமையாக கடலில் மூழ்கி இறந்துள்ள சம்பவம் தற்போது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது .

இவ்வாறு கடலில் முழ்கி இறந்துள்ள குழந்தைகளின் உடல் துருக்கி கடல் ஓரத்தில் தரை ஒதுங்கி உள்ளமை தற்போது உலகம் முழுவதையும் உலுக்கியுள்ளதோடு பலரை கண்ணீரில் மூழ்க வைத்துள்ளது.அத்துடன் சர்வதேச வலைத்தளங்களில், சமூக வலைகளில் வேகமாக பரவி வருகிறது.

இறைவா! வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் இந்த மக்களுக்கு நல்ல வழியை காட்டிடுவாயாக என்ற பிரார்த்தனைகள் மட்டுமே என்னால் முடிந்தது….
நீங்களும் இவர்களுக்காக பிரார்த்தியுங்கள்.

ஒடுக்கப்படும்போதும் ஒற்றுமை பட வாய்ப்புள்ளது!!!
ஒருங்கிணையும்போது ஒற்றுமை பட வாய்ப்புள்ளது!!!
நாம் எப்போது ஒற்றுமை படபோகிறோமோ!!!

நன்றி இணையம் & Madawala News..

 

hathees mp3

hathees mp3
 

Check Also

01: புதுமண தம்பதிகளுக்கு சில வழிகாட்டல்

வாராந்திர பயான் நிகழ்ச்சி புதுமண தம்பதிகளுக்கு சில வழிகாட்டல் (இஸ்லாமிய ‍‌‍குடும்பவியல்-பாகம்-12), உரை : S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : …

Leave a Reply