Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஐந்தாவது பாடம் மற்றும் இலக்கணம்

ஐந்தாவது பாடம் மற்றும் இலக்கணம்

ஐந்தாவது  பாடம் மற்றும் இலக்கணம்

Full Lesson:

பாடம் :

சயீத் : முஹம்மதுடைய புத்தகமா இது, யாசிரே?

يَاسِرٌ : لَا, هذا كِتَابُ حَامِدٍ؟

யாசிர் : இல்லை, இது ஹாமித் உடைய புத்தகம்.

سَعِيْدٌ : أَيْنَ كِتَابُ مُحَمَّدٍ ؟

சயீத் :முஹம்மத் உடைய புத்தகம் எங்கே?

يَاسِرٌ : هُوَ عَلَى الْمَكْتَبِ هُنَاكَ.

யாசிர் : அது அங்கே மேஜையின் மீது ( இருக்கிறது )  

سَعِيْدٌ : أَيْنَ دَفْتَرُ عَمَّارٍ؟

சயீத் : அம்மாருடைய நோட் எங்கே?

يَاسِرٌ : هُوَ عَلَى مَكْتَبِ الْمُدَرِّسِ.

யாசிர் :அது ஆசிரியருடைய மேஜையின் மீது (உள்ளது)

سَعِيْدٌ : قَلَمُ مَنْ هَذَا يَا عَلِيُّ؟

சயீத் : அலியே, இது யாருடைய பேனா?

عَلِيٌّ : هَذَا قَلَمُ الْمُدَرِّسِ .

அலி : இது ஆசிரியருடைய பேனா.

سَعِيْدٌ : أَيْنَ حَقِيْبَةُ الْمُدَرِّسِ؟

சயீத் : ஆசிரியருடைய கைப்பை எங்கே?

علي : هِيَ تَحْتَ الْمَكْتَبِ

அலி : அது மேஜைக்கு கீழே (உள்ளது).

 

اِضَافَةٌ Definition.1 :

இரண்டு இஸ்முக்கள் இணையும் பொது அந்த இரண்டிற்கும் இடையே “உடைய” என்ற அர்த்தம் வருமாயின் அது “இலாஃபத் (اضافة)” எனப்படும்.

اَلاِْضَافَةُ : هِيَ نِسْبَةٌ بَيَنْ السْمَيْنِ عَلَى تَقْدِيْرِ حَرْفِ الْجَرِّ الاِْسْمُ الاَْوَّلُ يُسَمَّى مُضَافٌ

وَالاِْسْمُ الثَّانِيْ يُسَمَّى مُضَافٌ اِلَيْهِ

அல்இலாஃபத் : 

இரண்டு பெயர்ச்சொற்களுக்கு இடையில் “ஹர்ஃபுன் ஜர் (حَرْفُ الْجَرِّ)” மறைந்ததாக கணிக்கப்படும் பொது அல்லது மறைந்து இருக்கும்போது முதல் இஸ்மை “முலாஃப் (مُضَافٌ)” என்றும், இரண்டாவது இஸ்மை ” முலாஃப் இலைஹி (مُضَافٌ اِلَيْهِ)” என்றும் நாம் கூறுவோம்.

 

اِضَافَةٌ Definition.2 :

அல்லாஹ்வுடைய புத்தகம்كِتَابُ اللهِ

அல்லாஹ்வுடைய கைيَدُ اللهِ

ஹாமீதுடைய மகள்بِنْتُ حَامِدٍ

இரண்டு வார்த்தைகள் இணைந்து அதற்கிடையில் “உடைய” என்ற அர்த்தம் வருமாயின் அது “இலாஃபத்” எனப்படும். உடைமை முன்னாள் வரும். உடைமையை தொடர்ந்து உடையவர் வரும்.

உடைமைمُضَافٌ

உடையவர்مُضَافٌ اِلَيْهِ

 

அடையாளங்கள்  مُضَافٌ & مُضَافٌ اِلَيْهِ :

1. முதலில் مضاف தான் வரும், مضاف اليه – அதனை பின் தொடர்ந்து அதற்கு பின்னால் தான் வரும். இது மாறி வராது.

2. مضاف – என்பது مجرور (மஜ்ரூர்) ஆகவோ, منصوب (மன்சூப்) ஆகவோ, مرفوع (மர்ஃபூஹ்) ஆகவோ இடத்தைப் பொருத்து அதன் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் வரும்.

3. مضاف – உடைய ஆரம்பத்தில் “ال” (அல்) வரவே வராது.

4. مضاف اليه – இல், “ال” (அல்) வைத்தும் வரும், இல்லாமலும் வரும். அதன் கடைசி எழுத்து “تنوين” (தன்வீன்) வைத்தும் வரும், அது இல்லாமலும் வரும். அதன் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் வரும்.

5. مضاف – இல் “تنوين” (தன்வீன்) வராது.

 

Homework :

 

அங்கே – هناك, கீழே – تحت :

அங்கே – هناك :

هُنَاكَ – اِسْمُ الاِْشَأرةِ لِلْمَكَانِ اَلْبَعِيدُ

தூரத்தில் இருக்கும் ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டும் சுட்டுப்பெயர்ச்சொல். ஒரு இடத்தை குறிப்பதால் இடத்தை சுட்டிக்காட்டும் சுட்டுப்பெயர்ச்சொல்.

கீழே – تحت :

تحت – اِسْمُ الْمَكَانِ / ظَرْفُ الْمَكَانِ

(يُجَرُّ مَا بَعْدَهُ)

ஒரு இடத்தை குறிக்கும் பெயர்ச்சொல்.

تحت – விற்கு பின்னல் வரக்கூடிய வார்த்தை (மஜ்ரூர்) مجرور ஆக ஆகிவிடும். அதாவது تحت விற்கும் ஒரு مضاف اليه இருக்கும்.

 

ظرف :

ஒரு இடத்தையோ அல்லது காலத்தையோ குறைக்கக்கூடிய ஒரு இஸ்மை “ظرف” என்று சொல்லப்படும்.

ظرف – இரண்டு வகைப்படும்.

1. இடத்தைக் குறிக்கும் –  ظرف مكان

2. காலத்தைக் குறிக்கும் – ظرف زمان

எல்லா ظرف – களுக்கும் مضاف اليه இருக்காது.

تحت – வை போன்றே சில – களுக்கு இருக்கும். இதை “ظرف مضاف اليه” என்று சொல்லப்படும்.

 

 المنادى :

اَلْمُنَادَى – மொத்தம் 5 வகை. அதில் 3 வகை

1. اَلْمُفْرَدُ اَلْعَلَمَ

ஒரு வார்த்தையினுடைய பெயராக இருக்கும். உதாரணம் : ஓ முஹம்மதே – يَا مُحَمَّدُ

2. اَلنَّكِرَةُ اَلْمَقْصُوْدَةُ

குறிப்பிட்ட ஒரு நபர் அதாவது அந்த நபரின் பெயருக்கு பதிலாக வேறு அவர்களின் விஷயங்களை சொல்லி கூப்பிடுவது. உதாரணம் : ஓ ஆசிரியரே – يَا اُسْتَاذُ

3. اَلْمُضَافُ முளாஃப் – ஆக இருக்கும். உதாரணம் : ஓ அல்லாஹ்வினுடைய அடிமையே – يَا عَبْدُالله

اَلْمُنَادَى – வுக்கு تَنْوِيْنٌ (தன்வீன்) வராது. منادى (முனாத) مضاف – ஆக வரும்போது, அது منصوب (மன்சூப்) ஆக வரும்.

 

Gramer Analysis :

3rd Type of Khabar : خبر

இதற்கு

ظرف شبه جملة خبر

என்று சொல்லப்படும்.

 

H.w Page#27 :

 

H.w Answers Pg#27 :

 

H.w Page#28 :

 

 

 

 


H.w Page#28 Ex.3 Ex.4 :

 

 

 

 

 

 

 

 

 

Ex4 H.w Answers {1 to 5 } & Ex4 H.w {6 to 10}:

 

Ex4 H.w Answers {6 to 10 } & Ex4 H.w {11 to 15} :

 Ex4 H.w Answers {11 to 20 } :

H.W Page# 30, 31, 32 :

 Answer Page# 30, 31, 32 :

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

6 comments

  1. assalamu alaikum wr wb,
    i am jamia, this web link is really helpful to my study. jazakallah khaira

  2. If Mudhaf comes in Munadha it will come as Mansoob.
    Sister pls give one example for this

  3. The whole lesson can be put as book in pdf format

  4. If u pu the put whole book notes in pdf it will be very useful

Leave a Reply to Sharmila Cancel reply