Home / Islamic Months / Shabhan / ஒவ்வொரு மாதமும் பிற 13, 14, 15, ஆகிய தினங்களில் நோன்பு நோற்று வருபவர்கள் ஷஃபானிலும் இத்தினங்களில் நோன்பு நோற்பது சுன்னாவாகும்..

ஒவ்வொரு மாதமும் பிற 13, 14, 15, ஆகிய தினங்களில் நோன்பு நோற்று வருபவர்கள் ஷஃபானிலும் இத்தினங்களில் நோன்பு நோற்பது சுன்னாவாகும்..

ஒவ்வொரு மாதமும் பிற 13 14 15 ஆகிய தினங்களில் நோன்பு நோற்று வருபவர்கள் ஷஃபானிலும் இத்தினங்களில் நோன்பு நோற்பது சுன்னாவாகும்..

மாதந்தோறும் பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து ஆகிய நிலவு பிரகாசிக்கும் நாட்களில் (அய்யாமுல் பீள்) நோன்பு நோற்றல். என்ற தலைப்பின் கீழ்தான் இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ் இந்த ஹதீஸை கொண்டு வருகின்றார்:

ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்குமாறும். ளுஹாநேரத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுமாறும். உறங்குவதற்கு முன் வித்ருத் தொழுகையை தொழுது விடுமாறும் இந்த மூன்று விஷயங்களை என் தோழர் (ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்!” (அறவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், புஹாரி: 1981).

15 வது தினத்தை “பராஅத்” என சிறப்பித்து அத்தினத்தில் நோன்பு நோற்பதற்கு தனியான சிறப்புகள் உள்ளன என்று நினைப்பதுதான் தவறு. ஏனெனில் அவ்வாறு செய்வதற்கு ஆதாரப்பூர்வமான எந்த செய்தியும் இல்லை என்பதைத்தான் குறிப்பிடுகின்றோம். அய்யாமுல் பீல் என அழைக்கப்படும் வெள்ளை நாட்களில் (13, 14, 15) நோன்பிருப்பது சுன்னவாகும் அதை எவரும் மறுக்கவில்லை.

ஒவ்வொரு மாதமும் அந்நாட்களில் நோன்பு நொற்று வருபவர்கள் ஷஃபானிலும் தாராளமாக நொற்றுக்கொள்ளலாம். நாம் குறிப்பிடுவது ஷஃபானின் 15 வது தினத்தை மாத்திரம் சிறப்பித்து நோன்பு நோற்பதும், யாஸீன்களை ஓதுவதும், விஷேசமாக உணவுகளை தயாரிப்பதும், இரவில் சிறப்புத் தொழுகைகளைத் தொழுவதும் இவைகளுக்குத்தான் ஆதராமில்லை. இவைகள் வழிகெட்ட பித்அத்துகள் என அறிஞர்கள் தீர்ப்பளித்துமுள்ளனர்.

அல்லாஹ்வின் தூதர் ரமலானைத் தவிர்த்து அதிகம் நோன்பிருந்த மாதம் ஷஃபான் எனவே ஒருவர் ஷஃபானில் அதிகம் நோன்பு வைப்பாரானால் அது அவருக்கு மகத்தான் கூலிகளை அல்லாஹ்விடம் பெற்றுக்கொடுக்கும். ஷஃபானில் அதிகம் நொன்பு வைப்பது நபி வழி.

நல்லமல்களையெல்லாம் இல்லை என்று கூறுவது, அல்லது குறைப்பதுதான் இவர்களின் வேலை என சிலர் நம்மீது குற்றம் சுமத்துகின்றனர். அது அர்த்தமற்ற ஒரு குற்றச்சாட்டாகும். ஏனெனில் ஷஃபானில் அல்லாஹ்வின் தூதர் அதிகம் நொன்பு நோற்று நமக்கு ஒரு முன்மாதிரியை வழங்கினார்கள். அதை நம்மில் எத்தனை பேர்தான் அறிந்து வைத்திருக்கின்றோம். அதை நம்மில் எத்தனை பேர்தான் செயல் படுத்துகின்றோம். அதே நேரத்தில் ஷஃ.பான் 15 தை சிறப்பித்து நோன்பு நோற்பதை அதிகமானோர் செய்கின்றனர். ஆனால் இதற்கு எந்த அடிப்படையுமில்லை, எந்த ஆதாரமுமில்லை, நபி வழிக்கு முரணாணது எனக் கூறும்போது பலர் கொதிக்கின்றனர்.

இங்கு பலரும் விளங்க வேண்டிய முக்கிய அம்சம், நாம் நல்லமல்களின் மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற வேண்டுமானால் நபி வழியில் அதற்கு முன்மாதிரி இருக்க வேண்டும். நபி வழியில் முன்மாதிரி இல்லாத செயல்கள் அனைத்தும் வழிகேடுகள் என்பதை அல்லாஹ்வின் தூதர் நமக்கு எச்சரித்திருக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் காட்டித் தராத செயல்கள் அனைத்தும் அல்லாஹ்விடம் நிராகரிக்கப்படும் என அல்லாஹ் தூதர் குறிப்பிட்டுள்ளார்கள். நாம் நபியவர்களின் போதனையை ஏற்று இறை திருப்தியை பெறுவதா? அல்லது நபி வழி இல்லாவிட்டாலும் நாம் மூதாதையர்களின் வழியில்தான் செல்வோம் என அடம்பிடித்து நரகம் நுழைவதா? என்பதை முடிவு செய்ய வேண்டும்.

நமது சமுதாயத்தில் தூய நபி வழியை விட வழி கெட்ட பித்அத்துகள் அறிமுகமாகி இருப்பதுதான் அதிகம். இதை நாம் வேதனையுடன் ஏற்றாக வேண்டும். அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றைத்தான் இது உண்மை படுத்திக்கொண்டிருக்கின்றது: “எங்கு பித்ஆ (மார்க்கத்தின் பெயரால் நூதனங்கள்) உயிர் பெறுகின்றதோ, அங்கு மரணிப்பது தூய நபி வழியாகும்”.

அல்லாஹ் தனது திருமறையில் கூறும்போது:

وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்”. (அல்ஹஷ்ர் 59: 7).

 

தொகுப்பு: அஸ்ஹர் யூஸுப்ஃ ஸீலானி..

 

 

Check Also

நூல் முஹ்தஸர் ஃபிக்ஹுஸ் ஸவ்ம் – பாகம் 01

உரை: மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி நூலாசிரியர்: அஷ்ஷைக் அலவி இப்னு அப்துல் காதர் அஸ்ஸக்காஃப் ஹஃபிழஹுல்லாஹ் Subscribe to …

Leave a Reply