Home / கட்டுரை / கட்டுரைகள் / கவாரிஜ்கள் அன்றும் இன்றும் (1) | கட்டுரை | DR. அஷ்ஷேய்க் அஹ்மத் அஷ்ரப்

கவாரிஜ்கள் அன்றும் இன்றும் (1) | கட்டுரை | DR. அஷ்ஷேய்க் அஹ்மத் அஷ்ரப்

கவாரிஜ்கள் அன்றும் இன்றும் (1)

 

(கவாரிஜ்கள் பற்றிய முன்னறிவிப்புகள் )

 

நபி ஸல் அவர்கள், கவாரிஜ்கள் பற்றி சில முன்னறிவிப்புகள் செய்துள்ளார்கள். அவைகளில் சில :

 

 

“கடைசி காலத்தில் இளம்வயதான, புத்தி குறைந்த கூட்டம் தோன்றுவார்கள் . மக்கள் பேசும் சிறந்த வாக்கியத்தைக் (குர்ஆன் , ஹதீஸ்) கூறுவார்கள்.

அம்பு, வேட்டை மிருகத்தை பிய்த்துக்கொண்டு வெளியேறுவது போல், அவர்கள் மார்க்கத்தைப் பிய்த்துக்கொண்டு வெளியேறுவார்கள்.

அவர்களின் ஈமான் தொண்டைக் குழியைத் தாண்டாது” என நபியவர்கள் கூறியதாக,
அலி ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(புஹாரி : 3611, முஸ்லிம் : 1066 )

 

“நபி ஸல் அவர்கள் , யுத்தத்தில் கிடைத்த பொருட்களை பங்கிடும்போது, ” துல்குவைஸரா” என்பவர், அல்லாஹ்வின் தூதரே ! நீதியாக பங்கிடுங்கள் என்றார்,

அதற்கு நபியவர்கள், ” உனக்கு கேடு உண்டாகட்டும் ! நான் நீதி செலுத்தவில்லை என்றால், வேறு யார்தான் நீதி செலுத்துவார் ?! என்று கூறினார்கள் .

அதற்கு, உமர் ரழின் அவர்கள், அவனது கழுத்தை வெட்டட்டுமா ? எனக் கேட்டார்கள்.
அதற்கு , நபியவர்கள், ” இவனுக்கு தோழர்கள் உள்ளனர், அவர்களின் தொழுகையுடன் உங்களின் தொழுகையை குறைத்து மதிப்பிடுவீர்கள்.

அவர்களின் நோன்புடன் உங்களின் நோன்பைகுறைத்து மதிப்பிடுவீர்கள்.
அம்பு, வேட்டை மிருகத்தை பிய்த்துக்கொண்டு வெளியேறுவது போல், அவர்கள் மார்க்கத்தைப் பிய்த்துக்கொண்டு வெளியேறுவார்கள் எனக் கூறியதாக

 

அபூ சஈத் அல் குத்ரி ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள் (புஹாரி : 6933, முஸ்லிம் : 1064 )

 

நபியவர்கள் காலத்தில் காணப்பட்ட மிகச் சிறிய குழுவினர்களான கவாரிஜ்கள், முஸ்லிம்களை விட்டும் பிரியாமல் இணைந்தே இருந்தனர்.

அதனால், நபியவர்கள் இவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை . (தொடரும் இன்ஷாஅல்லாஹ் )

 

DR. அஷ்ஷேய்க் அஹ்மத் அஷ்ரப், பேராசிரியார் நஜ்ரான் பல்கலைக்கழகம்.

Check Also

முஸ்லிம்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும் ?

முஸ்லிம்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும் ? தொகுப்பு : யாஸிர் ஃபிர்தௌசி அழைப்பாளர் அல்- ஜுபைல் தஃவா நிலையம், …

Leave a Reply