Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / காலுறையின் மீது மஸஹ் செய்தல் பாகம் – 4

காலுறையின் மீது மஸஹ் செய்தல் பாகம் – 4

ஃபிக்ஹ் பாகம் – 4

காலுறையின் மீது மஸஹ் செய்தல்

மஸஹ் செய்வதற்கான நிபந்தனை

அதை அணிவதற்கு முன்னர் உளூவுடன் இருக்க வேண்டும்.

ஆதாரம்

முகீரத் இப்னு ஷுஹபா (ரலி)-ஒரு இரவில் நபி (ஸல்) உடன் நானிருந்தேன். அவர்களுக்கு உளூ செய்வதற்காக பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தேன். நபி (ஸல்) – கைகளை கழுவினார்கள், தலையை தடவினார்கள்…….நான் நபி (ஸல்) அணிந்திருந்த காலுறையை கழட்டுவதற்காக குனிந்தேன். ஆனால் நபி (ஸல்) அதை கழட்ட வேண்டாம். நான் உளூஉடனிருக்கும்போது தான் அதை அணிந்தேன் என்று கூறிவிட்டு தன் இரண்டு கைகளினால் காலுறையின் மீது தடவினார்கள். (புஹாரி, முஸ்லீம், அஹ்மத்)

முகீரா இப்னு ஷுஹபா (ரலி) – நபி (ஸல்) விடம் – ஒருவர் தனது காலுறையின் மீது மஸஹ் செய்யலாமா என்று கேட்டபோது நபி (ஸல்) – ஆம் செய்யலாம் அவர் சுத்தமான நிலையில் அதை அணிந்திருந்தால் (முஸ்னத் ஹுமைதி)

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply