Home / துஆக்கள் / சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.16) – மழை வேண்டி ஓதும் துஆ

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.16) – மழை வேண்டி ஓதும் துஆ

மழை வேண்டி ஓதும் துஆ – ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி.
اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا،
 مَرِيئًا مَرِيعًا، نَافِعًا غَيْرَ ضَارٍّ،
 عَاجِلًا غَيْرَ آجِلٍ 

Audio mp3 (Download)

தமிழில் :-
அல்லாஹும்மஸ்கினா கய்ஸன் முகீஸன், மரீஅன் மரீعன் நாஃபிஅன் கைர ழார்ரின்,

ஆஜிலன் கைர ஆஜிலின். .

பொருள்:-

யா அல்லாஹ்! உதவியையும், மகிழ்வையும் , அபிவிருத்தியையும் ஏற்படுத்தும்

வகையில் நெருக்கடியில்லாமல் பயனையும் , தாமதமில்லாமல் துரிதமாகவும்

எங்களுக்கு மழை பொழியச்செய்வாயாக!

அறிவிப்பாளர்:- ஜாபிர் (ரலி) அவர்கள், நூல்:- அபூதாவூத்
குறிப்பு :-
நபிகளார் (ஸல்) அவர்களிடத்தில் ஒருவர் மழைவேண்டி பிரார்த்திக்க கோரிக்கை
வைக்கும் போது மேற்கூறப்பட்ட துஆவை நபிகளார் கேட்க வானத்தை மேகங்கள்

மறைக்கும் அளவிற்கு மழை தொடர்ச்சியாக பொழிந்தது இறைவனின் நாட்டத்தினால்.

துஆ வார்த்தைக்கு வார்த்தை
مُغِيثًا
غَيْثًا
اسْقِنَا
اللَّهُمَّ
உதவித் தரக்கூடிய
மழையை
எங்களுக்கு புகட்டுவாயாக! (பொழியச்செய்வாயாக)
யா அல்லாஹ்!
مَرِيعًا
مَرِيئًا
அபிவிருத்தியை
மகிழ்வை
غَيْرَ ضَارٍّ
نَافِعًا
நெருக்கடியில்லாத (தீங்கிழைக்காத)
பயனை
غَيْرَآجِلٍ
عَاجِلًا
தாமதமில்லாத
துரிதமான

மேலும் புஹாரி 1013  வது ஹதீஸில்

اَللّهُمَّ اسْقِنَا اَللّهُمَّ اسْقِنَا اَللّهُمَّ اسْقِنَا

அல்லாஹும்மஸ்கினா,அல்லாஹும்மஸ்கினா,அல்லாஹும்மஸ்கினா

பொருள் :-
யாஅல்லாஹ்! எங்களுக்கு மழை பொழியச்செய்வாக!

இன்னும் புஹாரி 1014  வது ஹதீஸில்

اَللّهُمَّ أَغِثْنَا اَللّهُمَّ أَغِثْنَا اَللّهُمَّ أَغِثْنَا

அல்லாஹும்ம அகிஸ்னா, அல்லாஹும்ம அகிஸ்னா,அல்லாஹும்ம அகிஸ்னா

பொருள் :-
யாஅல்லாஹ்! எங்களுக்கு மழை பொழியச்செய்வாக!

என்று சுருக்கமாகவும் ஹதீஸ்கள் வந்துள்ளன.

Check Also

வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 02 |

வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 02 | அஷ்ஷேக் அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி Subscribe to our …

Leave a Reply