Home / துஆக்கள் / சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.17) – மழை பொழிந்து நின்றபின் ஓதவேண்டிய துஆ

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.17) – மழை பொழிந்து நின்றபின் ஓதவேண்டிய துஆ

 மழை பொழிந்து நின்றபின் ஓதவேண்டிய துஆ
ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி.
 
  مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ

 

 
وَرَحْمَتِهِ
اللَّهِ
بِفَضْلِ
مُطِرْنَا
அவனது அருளாலும்
அல்லாஹ்வின்
கிருபையாலும்
நாங்கள் மழையை அடைந்தோம்

Audio mp3 (Download)

 

தமிழில் :-
முதிர்னா பிஃபல்ளில்லாஹி வரஹ்மதிஹீ

 

பொருள்:-
அல்லாஹ்வின் அருளாலும்,கிருபையாலும் நாங்கள் மழையை அடைந்தோம்.

 

அறிவிப்பாளர்:-
ஜைத் இப்னு ஹாலித்  (ரலி) அவர்கள், நூல்:-  புஹாரி 846,1038,4147

 

குறிப்பு :-
நபிகளார் அவர்கள் ஃபஜ்ர் தொழுகையை முடித்த பின் மக்களிடத்தில் உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை அறிவீர்களா? என கேட்டார்கள் மக்கள் அதற்கு அல்லாஹ்வும், அவனது
தூதருமே நன்கு அறிவார்கள் என கூறினார்கள்.  அப்போது பெருமானார் அவர்கள்  என் அடியார்களில் என்னை நம்பியவர்களும்,நிராகரித்தவர்களும் உண்டு.அல்லாஹ்வின் அருளாலும்,கிருபையாலும் நாங்கள் மழைபொழிவிக்கப்பட்டோம் என கூறுபவரே என்னை நம்பியவர், மாறாக நாங்கள் இன்னென்ன நட்சத்திரங்களால் மழை பொழிவிக்கப்பட்டோம் என கூறுபவரே என்னை நிராகரித்தவர் ஆவார் என நபிகளார்    கூறினார்கள்.   .

 

மேற்குறிப்பிட்ட ஹதீஸ் போன்று முஸ்லிம், அபூதாவூத்அஹ்மத் நஸயி போன்ற பல நூல்களில் இடம்பெற்றுள்ளது.

Check Also

வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 02 |

வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 02 | அஷ்ஷேக் அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி Subscribe to our …

Leave a Reply