Home / சிறிய ஹதீஸ்கள் வார்த்தைக்கு வார்த்தை மனனம் செய்வதற்காக / “சிறிய ஹதீஸ்கள் மனனம் செய்வதற்காக” – ஹதிஸ் எண் 5

“சிறிய ஹதீஸ்கள் மனனம் செய்வதற்காக” – ஹதிஸ் எண் 5

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ

 சிறிய ஹதீஸ்கள் மனனம் செய்வதற்காக” – ஹதிஸ் எண் 5

عَنْ حُذَيْفَةَ رَضِيَ اللهُ عَنْه قَالَ:
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
  ” لا يَدْخُلُ الْجَنَّةَ نَمَّامٌ
(صحيح مسلم 168)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“கோள் சொல்லித் திரிபவன் சுவனம் நுழைய மாட்டான்”
அறிவிப்பவர் : ஹுதைபா (ரலி). ஆதாரம் : முஸ்லிம் 168.
ஹதீஸ் வார்த்தைக்கு வார்த்தை…
لا يَدْخُلُ
الْجَنَّةَ
نَمَّامٌ
நுழைய மாட்டான்
சுவனம்
கோள் சொல்லித் திரிபவன்
ஹதிஸ் அறிவிப்பாளர்:

ஹுதைபா பின் யமான் (ரலி) அவர்கள் நபிகளாரின் அந்தரங்கச் செயலாளர் என்று அழைக்கப்பட்டவர், இஸ்லாமிய யுத்தங்களில் பெரும் பங்காற்றியவர், நபிகளாரைத் தொட்டும் 255 ஹதீஸ்களை அறிவித்தவர், ஹிஜ்ரி 36ம் ஆண்டு ஈராக்கில் இறையடி சேர்ந்தார்கள்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:

       1)       கோள் சொல்வது மக்களுக்கு மத்தியில் விரோதத்தை உண்டு பண்ணக்கூடிய ஒரு இழிவான பண்பாகும்.
       2)       கோள் சொல்வது சமூகத்தில் கலக்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும்.
       3)       கோள் சொல்வதை அனுமதிக்கப்பட்டதாக நினைத்து கோள் சொல்லித் திரிபவன் சுவனம் நுழைய மாட்டான்.

   Download PDF– “சிறிய ஹதீஸ்கள் மனனம் செய்வதற்காக” ஹதிஸ் எண் 5

Check Also

24: திக்ர் செய்வோம்!

தினம் ஒரு ஹதீஸ் 24: திக்ர் செய்வோம்! மௌலவி பக்ரூதீன் இம்தாதி

Leave a Reply