Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தொழுகையின் சுன்னத்துகள் -1

தொழுகையின் சுன்னத்துகள் -1

ஃபிக்ஹ் பாகம் – 1

தொழுகையின் சுன்னத்துகள் 

தொழுகையில் ஃபர்ளையும், வாஜிபையும் தவிர நாம் செய்யக்கூடிய அனைத்தும் சுன்னத்துகளாக இருக்கின்றன.

வாஜிபிற்கும், சுன்னத்திற்கும் உள்ள வித்தியாசம்

வாஜிபை விட்டால் ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும்; சுன்னத்தை விட்டால் ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டாம்.

صلوا كما رأيتموني أصلي

என்னை எவ்வாறு தொழக் கண்டீற்களோ, அவ்வாறே தொழுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

  سنة القولية

(வார்த்தைகளால் சொல்லும் சுன்னத்)

தக்பீரத்துல் இஹ்ராமிற்கு பிறகு சொல்ல வேண்டிய துஆ

اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ ، اللَّهُمَّ نَقِّنِي مِنْ

خَطَايَايَ كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسِ ، اللَّهُمَّ اغْسِلْنِي مِنْ خَطَايَايَ  بالْمَاءِ

والثلج وَالْبَرَدِ

இறைவா – اَللّٰهُمَّ தூரமாக்கு – بَاعِدْ

எனக்கு இடையில் – بَيْنِيْ

என்னுடைய – وَبَيْنَ خَطَايَايَ

பாவங்களுக்கு இடையில்

அதுபோல –كَمَا நீ தூரமாக்கியது – بَاعَدْتَ

இடையில் – بَيْن கிழக்கு – اَلْمَشْرِقِ

மேலும் மேற்கு – وَالْمَغْرِبِ

اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ

அல்லாஹ்வே! எனக்கும், என் பாவங்களுக்கும் இடையில் நீ தூரம் ஏற்படுத்துவாயாக

كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ

கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடையில் தூரத்தை ஏற்ப்படுத்தியது போல

அல்லாஹ்வே! – اَللّٰهُمَّ

என்னை தூய்மைப்படுத்துவாயாக – نَقِّنِي

என்னுடைய பாவங்களிலிருந்து – مِنْ خَطَايَايَ

அதுபோல- كَمَا

தூய்மைப்படுத்தப்படுவது – يُنَقَّى

துணி – اَلثَّوْبُ வெள்ளை – الْاَبْيَض

அழுக்கிலிருந்து – مِنَ الدَّنَسِ

اللَّهُمَّ نَقِّنِي مِنْ خَطَايَايَ

அல்லாஹ்வே என்னுடைய பாவத்திலிருந்து என்னை தூய்மைப்படுத்துவாயாக

كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسِ

அழுக்கிலிருந்து வெள்ளை துணியை தூய்மைப்படுத்துவதை போல!

அல்லாஹ்வே! – اَللّٰهُمَّ

என்னை கழுகிவிடு – اغْسِلْنِي

என்னுடைய பாவங்களிலிருந்து  – مِنْ خَطَايَايَ

நீரைக்கொண்டு – بِالْمَاءِ

மேலும் பனிக்கட்டி – وَالثَّلْجِ

மேலும் ஆலங்கட்டி – وَالْبَرَدِ

اللَّهُمَّ اغْسِلْنِي مِنْ خَطَايَايَ  بالْمَاءِ وَالثَّلْجِ    وَالْبَرَدِ

அல்லாஹ்வே! என்னுடய பாவங்களிலிருந்து என்னை கழுகிவிடு; சுத்தமான நீரைக் கொண்டும், மேலும் பனிக்கட்டியைக் கொண்டும், மேலும் ஆலங்கட்டியைக் கொண்டும்…

ஆதாரம்♦️புஹாரி, முஸ்லிம், அபு தாவூத்,

இப்னு மாஜா, திர்மிதி

அபூ ஹூரைரா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், தக்பீரத்துல் இஹ்ரமிற்கும், ஃபாத்திஹாவிற்கும் இடையில் நீங்கள் அமைதியாக சொல்லுவது என்ன என்று கேட்டபோது, நபி ( ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதியதாக கூறினார்கள .

ஆதாரம்♦️அபு தாவூத்,ஹாக்கிம்

وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفاً مسلما وما انا من المشركين

إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا

اول المسلمين
وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفاً مسلما وما انا من المشركين

إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا

من المسلمين

اللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لا إِلَهَ إِلا أَنْتَ سُبْحَانَكَ وَبِحَمْدِكَ أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ ظَلَمْتُ نَفْسِي

وَاعْتَرَفْتُ بِذَنْبِي , فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا لا يَغْفِرُ الذُّنُوبَ إِلا أَنْتَ , وَاهْدِنِي لأَحْسَنِ

الأَخْلاقِ وَلا يَهْدِي لأَحْسَنِهَا إِلا أَنْتَ , وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا وَلا يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا

إِلا أَنْتَ , لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ بِيَدَيْكَ , وَالْمَهْدِيُّ مَنْ هَدَيْتَ , أَنَا بِكَ تَبَارَكْتَ

وَتَعَالَيْتَ , أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

இதை⬆️நபி ( ஸல்) அவர்கள்; ஃபர்ளிலும், சுன்னத்திலும் ஓதுபவராக இருந்தார்கள்.

 

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلاَ إِلَهَ غَيْرُكَ

உமர் (ரலி) அவர்கள்⬆️அறிவிக்கும், ரிவாயத்தில் இடம்பெற்ற துஆ..

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply