Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / நஜீசின் வகைகள் பாகம் 10

நஜீசின் வகைகள் பாகம் 10

ஃபிக்ஹ்

நஜீஸ்களின் வகைகள் பாகம் – 10

திறந்தவெளியில் மலஜலம் கழிக்கும் பொது கிப்லாவை முன்னோக்கியோ பின்னோக்கியோ அமரக்கூடாது. கட்டிடத்துக்குள் போவதாயின் எந்த பக்கமும் முன்னோக்கலாம்.

ஆதாரம் :

إذَا جلس أحَدُكُم عَلَى حَاجَتِهِ فَلا يَسْتَقْبِلِ الْقِبْلَةَ وَلا يَسْتَدْبِرْهَا

  அபூஹுரைரா (ரலி) – எவரேனும் மலஜலம் கழிக்க அமர்ந்தால் அவர் கிப்லாவை முன்னோக்கவும் வேண்டாம் பின்னோக்கவும் வேண்டாம் (ஸஹீஹ் முஸ்லீம்)

இப்னு உமர் (ரலி) – நான் என்னுடைய சகோதரி ஹப்ஸா (ரலி) யின் வீட்டிற்கு சென்றபோது வீட்டின் மேலேறியபோது நபி (ஸல்) தன் தேவையை நிறைவேற்ற அமர்ந்திருந்தார்கள் ஷாம் தேசத்தை முன்னோக்கியும் கஹ்பாவை பின்னோக்கியும் அமர்ந்திருந்தார்கள் ( கட்டிடத்துக்குள் ) (புஹாரி, முஸ்லீம்)

பொந்துகளில் மலஜலம் கழிப்பதை நபி (ஸல்) தடுத்தார்கள் ஏனெனில் அது ஜின்கள் குடியிருக்குமிடம் என்று கூறினார்கள் ( அஹ்மத், நஸயீ, அபூதாவூத், ஹாகிம், பைஹகீ )

நபி (ஸல்) – இரண்டு சாபங்களை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். மனிதர்கள் நடக்கக்கூடிய பாதையும் அவர்கள் அமரக்கூடிய நிழல்களும். (அங்கே மலஜலம் கழிக்காதீர்கள்)

குளிக்கும் இடங்களில் மலஜலம் கழிக்கக்கூடாது.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply