Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / நஜீசின் வகைகள் பாகம் 11

நஜீசின் வகைகள் பாகம் 11

ஃபிக்ஹ்

நஜீஸ்களின் வகைகள் பாகம் – 11

لا يبولن أحدكم فى مستحمه ثم يتوضأ فيه

நபி (ஸல்) – உங்களிலொருவர் உளூச்செய்யுமிடத்தில் சிறுநீர் கழிக்க வேண்டாம் அதில் அதிகமான குழப்பங்கள் உள்ளன. ( ஸஹீஹ், முஸ்லீம்)

தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்கவேண்டாம் என நபி (ஸல்) தடுத்தார்கள். (அஹ்மத், நஸாயீ, இப்னு)

ஆயிஷா (ரலி) – யாரேனும் நபி (ஸல்) நின்றுகொண்டு சிறுநீர் கழித்தார்கள் என்று சொன்னால் நீங்கள் அதை உண்மைப்படுத்தாதீர். (திர்மிதி)

ஹுதைபா (ரலி) – நபி (ஸல்) ஒரு கூட்டத்தார் தம் குப்பைகளை கொட்டும் இடத்தில் நபி (ஸல்) நின்று சிறுநீர் கழித்தார்கள். நான் கொஞ்சம் தூரமாக நின்றேன் நபி (ஸல்) கொஞ்சம் அருகில் வரச்சொன்ன போது சென்றேன் நபி (ஸல்) உளூ செய்தார்கள்.

ஆகவே அவசிய தேவையிருந்தால் நின்று கொண்டு சிறுநீர் கழிக்கலாம் என மேற்கூறப்பட்ட ஹதீஸுகளிலிருந்து புரிகிறது.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply