Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / நஜீசின் வகைகள் பாகம் 4

நஜீசின் வகைகள் பாகம் 4

ஃபிக்ஹ்

நஜீஸ்களின் வகைகள் பாகம் – 4

المني والمذي والودي

 சிறுநீரும் பிறகு வரும் வெள்ளை நிற வழுவழுப்பான நீர்  ↔ الودى 

    இச்சை நீர் ↔ المذي 

 (இந்திரியம் (குளிப்பு கடமை ↔ المني  

(8) الودى – சிறுநீருக்குப் பிறகு  வரும் வெள்ளை நிற கனமான திரவம். இது அசுத்தமாகும். இது உடலிலோ உடையிலோ பட்டால் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்
ஆயிஷா (ரலி) – சிறுநீர் கழித்ததற்கு பின் வரும் வதீ வந்தால் உளூ முறிந்து விடும். அவர்கள் அதை சுத்தப்படுத்த வேண்டும் குளிக்கத்தேவையில்லை.

 ✽ நபி (ஸல்) – والمذي والودي வெளிப்பட்டால் நீங்கள் உறுப்புகளை சுத்தம் செய்து விட்டு உளூ செய்தால்  போதுமானது.

(9) المذي – இச்சை நீர். வழுவழுப்பான வெள்ளை திரவம். பாலியல் உணர்வுகள் ஏற்படும்போது அல்லது  கணவன் மனைவி உறவின் ஆரம்பத்தில் வரும். இது அசுத்தமாகும். இது உடலிலோ உடையிலோ பட்டுவிட்டால் கழுவ வேண்டும்.

  அலி (ரலி) – எனக்கு அதிகமான மதி வெளியாகும். நபி (ஸல்) என்னுடைய மாமனாராக இருந்ததால் இதை பற்றி கேட்க வெட்கப்பட்டேன். ஆதலால் இன்னொருவர் மூலம் நபி (ஸல்) விடம் கேட்டபோது – நபி (ஸல்) அவரிடம் உளூ செய்யச் சொன்னார்கள்(புஹாரி). ஆகவே மதி வெளிப்பட்டால் சுத்தம் செய்ய வேண்டும் என்பதால் அதை அசுத்தம் என்று நாம் அறிகிறோம்.

  நான் அதிகமாக மதி வெளியாகக்கூடியவனாக இருந்தேன். ஆதலால் நான் அதிகமாக குளித்துக்கொண்டிருந்தேன். நபி (ஸல்) கூறினார்கள் நீங்கள் உளூ செய்தால் போதுமானது. ஆடையில் பட்டால் அதில் தண்ணீர் தெளித்து கொள்ளுங்கள். (அபூதாவூத், இப்னு மாஜா, திர்மிதி)

உலமாக்கள் – உடலில் பட்டால் கழுவ வேண்டும் உடையில் பட்டால் தண்ணீர் தெளித்து விடுங்கள்.

(10) المني – இந்திரியம் (குளிப்பு கடமை).
இது சுத்தமா அசுத்தமா என்பதில் அறிஞர்களுக்கிடையில் 2 கருத்துக்கள் இருக்கிறது. இது உடையில் பட்டால் ஈரமாக இருந்தால் கழுவிக்கொள்ள வேண்டும் காய்ந்துவிட்டால் சுரண்டி விட்டால் போதுமானது.

  ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) வின் ஆடையில் இந்திரியம் காய்ந்திருந்தால் நான் என் விரலால் சுரண்டி விடுவேன். ஈரமாக இருந்தால் நான் கழுவி விடுவேன். (தாரகுத்னி)

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply