Home / அகீதா (ஏனையவைகள்) / பெரும்பாவங்களை அறிந்து கொள்வோம்

பெரும்பாவங்களை அறிந்து கொள்வோம்

بسم الله الرحمن الرحيم

மனிதன் செய்கின்ற பாவங்களை இரண்டு வகைகளாக பிரித்து நோக்க முடியும்.

சிறிய பாவங்கள்:-

இப்பாவங்கள் சில வேளைகளில் மனிதன் அறிந்ததும் அறியாமலும் செய்து கொள்ள முடியும். இவைகளிலிருந்து பாவமன்னிப்பு பெறுவதாக இருந்தால் சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

உதாரணம்: கடமையான தொழுகைகளை பேணித் தொழுதல், வுழுவினை பூரணமாக செய்தல் இன்னும் சில உபரியான வணக்கங்களை செய்வது எம்முடைய சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு காரணமாக அமையும். இது பாவங்களின் முதலாவது வகையாகும்.

பெரும்பாவங்கள்:-

இது பாவங்களின் இரண்டாவது வகையாகும். இதனைப் பற்றி சில உப தலைப்புகள் மூலமாக அவதானிக்கலாமென நினைக்கிறேன்.

பெரும்பாவங்கள் என்றால் என்ன?

பெரும்பாவங்கள் என்றால் எந்தக் குற்றத்தை செய்வதன் மூலம் உலகத்திலேயே குற்றப்பரிகாரம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதோ அவைகளும், அல்லது அல்லாஹ்வுடைய சாபம், தண்டனை, கோபத்தைப் பெற்றுத்தரக் கூடியவைகளாக இருக்கின்றனவோ அவைகளே பெரும்பாவங்களாகும்.

பெரும்பாவங்களின் எண்ணிக்கை:

இது பற்றிய விடயத்தில் உலமாக்கள் கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றார்கள். சிலர் “அழிவைத் தரக்கூடிய 7 பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்” என்ற ஹதீஸின் படி பெரும் பாவங்கள் ஏழு என்றும் இன்னும் சிலர் 70 என்றும் ஒவ்வொரு விதமான பதில்களை ஆதாரங்களின் அடிப்படையில் கூறுகின்றனர்.

பெரும் பாவங்களுக்கான உதாரணங்கள்:

விரிவை அஞ்சி அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவில் வந்துள்ள சில உதாரணங்களை மாத்திரம் சுட்டிக்காட்டலாமென நினைக்கிறேன்.

▪இணைவைத்தல்.
▪சூனியம் செய்தல்.
▪தொழுகையை விடுதல்.
▪ஸகாத் கொடுக்க மறுத்தல்.
▪ரமழான் மாதத்தில் நோன்பை விட்டுவிடல்.
▪பெற்றோருக்கு நோவினை செய்தல்.
▪விபச்சாரம் செய்தல்.
▪அநாதையின் சொத்தை சாப்பிடுதல்.
▪உறவுகளை துண்டித்தல்.
▪வட்டி.
▪மது அருந்துதல்.
▪திருடுதல்.
▪அவதூறு கூறல்.
▪ஆண்கள் பெண்களுக்கும் பெண்கள் ஆண்களுக்கும் ஒப்பாகுதல்.

இது போன்று இன்னும் சில பாவங்களையும் குறிப்பட முடியும்.

பெரும் பாவங்களிலிருந்து தவிர்ந்து நடப்பதன் சிறப்பு:

பெரும்பாவங்களை செய்வதிலிருந்து தவிர்ந்து நடப்பது எம்முடைய சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு ஒரு காரணியாக அமைகின்றது.
அல்லாஹ் கூறுகிறான்

“உங்களுக்கு தடுக்கப்பட்டவைகளில் பெரும் பாவங்களை விட்டும் நீங்கள் விலகிக் கொண்டால் உங்களை விட்டும் (சிறு) பாவங்களை நாம் அழித்து உங்களை சங்கைமிக்க இடத்தில் நுழைவிப்போம்”
(04:31)

எனவே நாமும் பாவங்களை விட்டு முற்றுமுழுதாக விலகி நடக்க அல்லாஹுத்தஆலா அருள்புரிவானாக…

தொகுப்பு:மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி

Check Also

அகீதா – அறுந்து போகாத வலுவான பிடிமானம் | பாடம் – 9 |

அகீதா – அறுந்து போகாத வலுவான பிடிமானம் | பாடம் – 9 | அஷ்ஷெய்க் அஜ்மல் அப்பாஸி ஜித்தா …

Leave a Reply