Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் 17

மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் 17

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

மறுமையின் அடையாளங்கள் பாகம் – 17

ظهور الخسف والمسخ والقذف

உருமாற்றம் பூகம்பம் வானத்திலிருந்து எறியப்படல் அதிகரித்தல்.

قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر هذه الأمة خسف ومسخ وقذف

💝ஆயிஷா (ரலி) – நபி (ஸல்)- பூமி விழுங்குவது, உருமாற்றம் செய்தல், வானத்திலிருந்து கல்மாரி பொழிதல் ஏற்படுதல் மறுமையின் அடையாளங்களில் பட்டதாகும். ஆயிஷா (ரலி) கேட்டார்கள் எங்களில் நல்லவர்கள் இருக்கும்போது அல்லாஹ் அழிப்பானா? நபி (ஸல்) கூறினார்கள் கெட்ட விஷயங்கள் வெளிப்பட ஆரம்பித்தால் நல்லவர்களையும் சேர்த்து தான் அல்லாஹ் அழிப்பான் நல்லவர்களுடைய நிய்யத்திற்கேற்ப அல்லாஹ் எழுப்புவான் (திர்மிதி)

சூரா ஹூது 11:117

وَمَا كَانَ رَبُّكَ لِيُهْلِكَ الْقُرَىٰ بِظُلْمٍ وَأَهْلُهَا مُصْلِحُونَ

↪(நபியே!) ஓர் ஊராரை, அவ்வூரார் சீர்திருந்திக் கொண்டிருக்கும் நிலையில் – அநியாயமாக உம் இறைவன் அழிக்கமாட்டான்.

ذهاب الصالحين↔ நல்லவர்கள் குறைதல்

تقوم الساعة حتى يأخذ الله – عز وجل – شريطته من أهل الأرض فيبقى عجاج لا

يعرفون معروفا ، ولا ينكرون منكرا ” ” هذا حديث صحيح على شرط الشيخين ،

إن كان الحسن سمعه من عبد الله بن عمرو .

💝அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி)- நபி (ஸல்)-அல்லாஹ் தனது நல்ல மக்களை கைப்பற்றும் வரை மறுமை நாள் ஏற்படாது அதில் சிலர் மிஞ்சியிருப்பார்கள் அவர்களுக்கு நன்மையென்றால் என்னவென்று தெரியாது தீமையென்றால் என்னவென்று தெரியாது(முஸ்னத் அஹ்மத்).

ارتفاع الاسافل⬇↔

கெட்டவர்கள் உயர்ந்த இடத்திற்கு செல்வார்கள்

إِنَّهَا سَتَأْتِي عَلَى النَّاسِ سِنُونَ خَدَّاعَةٌ، يُصَدَّقُ فِيهَا الْكَاذِبُ، وَيُكَذَّبُ فِيهَا الصَّادِقُ،

وَيُؤْتَمَنُ فِيهَا الْخَائِنُ، وَيُخَوَّنُ فِيهَا الْأَمِينُ، وَيَنْطِقُ فِيهَا الرُّوَيْبِضَةُ “، قِيلَ: وَمَا

الرُّوَيْبِضَةُ يا رسول الله؟ قَالَ: ” السَّفِيهُ يَتَكَلَّمُ فِي أَمْرِ العامة

💝அபூ ஹுரைரா (ரலி) – நபி (ஸல்)-ஏமாற்றக்கூடிய ஒரு காலம் வரும் பொய்யனை உண்மைப்படுத்துவார்கள் உண்மையாளனை பொய்ப்படுத்துவார்கள் மோசடிக்காரனை நம்புவார்கள் நம்பிக்கையாளனை நம்பாமல் இருப்பார்கள் ருவைபிலாக்கள்(மடையன், அறிவு கெட்டவன், விளக்கமில்லாதவன்) பேச ஆரம்பிப்பார்கள்.  (அஹ்மத்)

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply