Home / Islamic Months / Haj / Umrah / Sacrifice / முஸ்தலிஃபாவில் ஏற்படுகின்ற தவறுகள் – செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர் -7

முஸ்தலிஃபாவில் ஏற்படுகின்ற தவறுகள் – செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர் -7

முஸ்தலிஃபாவில் ஏற்படுகின்ற தவறுகள்

1. தொழுகைக்கு முன் ஜம்ராத்தில் எறிவதற்காக கற்களை சேகரிப்பது இது பொதுவாக நிகழும் தவறுகளில் ஒன்று. முதலில் மஃரிபையும், இஷாவையும் சேர்த்து குறைத்து தொழ வேண்டும்.

2. சில ஹாஜிகள் முஸ்தலிஃபாவில் இரவு தங்குவதை அலட்சியப் படுத்துகின்றனர். அது ஹஜ்ஜின் மிக முக்கியமான கடமையாகும். யார் வேண்டுமென்று இக்கடமையை விடுகின்றாரோ அவர் ஒரு ஆட்டை ஃ பித்யாவாக மக்காவிலுள்ள ஏழைகளுக்கு வழங்க வேண்டும். அதிலிருந்து இவர் எதையும் அன்பளிப்பாக வழங்கவோ உண்ணவோ கூடாது.

3. முஸ்தலிஃபாவில் இரவு தங்குகின்ற நாளில் விழித்திருந்து நஃபிலான வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது இதுவும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கு மாற்றமான செயல் ஆகும். காரணம் (யவ்முன்னஹர்) துல் ஹஜ் பத்தாவது நாள் அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகின்ற காரணத்தினால் முந்தய இரவு ஓய்வெடுப்பதே சிறந்தது.

4. முஸ்தலிஃபாவிலிருந்துதான் ஜம்ராத்தில் எறியும் அனைத்து கற்களையும் சேர்க்க வேண்டும் என்று சிலர் கருதுகின்றனர். இதுவும் தவறாகும். ஹாஜிகள் எந்த இடத்திலிருந்தும் கற்களை சேர்த்துக் கொள்ளலாம். துல் ஹஜ் பத்தாவது நாள் (யவ்முன்நஹர் ) ஜம்ரதுல் அகபாவில் எறிகின்ற கற்களை மட்டும் எடுத்துக்கொண்டால் போதுமானது.

5. அரஃபாவிலிருந்து வெளியேறிய உடன் தல்பியா சொல்வதை விட்டு விடுவது இதுவும் தவறாகும். அரஃபா , மினா , முஸ்தலிஃபா.. என்று ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிவதற்கு முன்பு வரை தல்பியா சொல்வது நபிவழியாகும்

தொகுப்பு : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி

Check Also

துல்ஹஜ் பத்து நாற்களும் அதில் செய்ய வேண்டிய சில அமல்களும்

அஷ்ஷேக் தஸ்னீம் கபுரி ஹஜ் வழிகாட்டுதல் வகுப்பு துல்ஹஜ் பத்து நாற்களும் அதில் செய்ய வேண்டிய சில அமல்களும் 17 …

Leave a Reply