Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 31

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 31

ஹதீத் பாகம் – 31

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

6440 அனஸ் (ரலி)

وَقَالَ لَنَا أَبُو الْوَلِيدِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ عَنْ أُبَيٍّ قَال كُنَّا نَرَى

 ⇓ هَذَا مِنْ الْقُرْآنِ حَتَّى نَزَلَتْ أَلْهَاكُمْ التَّكَاثُرُ كُنَّا نَرَى هَذَا مِنْ   الْقُرْآنِ

நாங்கள் இதை குர்ஆனில் (ஒரு வசனமாக ) கண்டோம்.

⇓حَتَّى نَزَلَتْ أَلْهَاكُمْ التَّكَاثُرُ

சூரா தகாசுர் இறங்கும் வரை

❣ மேற்கூறப்பட்ட ஹதீதில் நாம் புரிந்து கொள்ளவேண்டியவை குர்ஆனில் சட்டம் மாற்றப்பட்ட வசனங்களும் உள்ளது என்பது போல ஓதல் மாற்றப்பட்ட வசனங்களும் உள்ளன.இப்னு அப்பாஸ் (ரலி) இந்த ஹதீஸ் ஆரம்பத்தில் குர்ஆனில் ஓதப்படும் வசனமாக இருந்தது என்பது எனக்கு தெரியாது என்று தான் இங்கு கூறுகிறார்கள்.

உபை இப்னு கஹ்ப் (ரலி) இதை ஆரம்ப காலத்தில் நாங்கள் இதை குர்ஆன் வசனமாக ஓதிக்கொண்டிருந்தோம் என்று உறுதியாக கூறுகிறார்கள்.

❣ ஓதல் மாற்றப்படுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்று குழப்பவாதிகள் கேட்கின்றனர். குர்ஆனில் சட்டம் மாற்றப்படுவதற்கான என்ன நியாயம் இருக்கிறதோ அத்தனை நியாயங்களும் இதில் இருக்கிறது.

❣சட்டம் மாற்றப்படுவது என்பதே இஸ்லாத்தில் இல்லை என்னும் மெளலானா மெளதூதி அவர்களது வாதம் பிழையானதாகும்.

ஸூரத்துல் பகரா 2:106

مَا نَنْسَخْ مِنْ اٰيَةٍ اَوْ نُنْسِهَا نَاْتِ بِخَيْرٍ مِّنْهَآ اَوْ مِثْلِهَا ‌ؕ اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏

ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply