Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 39

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 39

ஹதீத் பாகம் – 39

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب فضل الفقر

 ஏழ்மையின் சிறப்பு

حدثنا إسماعيل قال حدثني عبد العزيز بن أبي حازم عن أبيه عن سهل بن سعد

الساعدي أنه قال مر رجل على رسول الله صلى الله عليه وسلم فقال لرجل عنده

جالس ما رأيك في هذا فقال رجل من أشراف الناس هذا والله حري إن خطب أن

ينكح وإن شفع أن يشفع قال فسكت رسول الله صلى الله عليه وسلم ثم مر رجل

آخر فقال له رسول الله صلى الله عليه وسلم ما رأيك في هذا فقال يا رسول الله

هذا رجل من فقراء المسلمين هذا حري إن خطب أن لا ينكح وإن شفع أن لا

يشفع وإن قال أن لا يسمع لقوله فقال رسول الله صلى الله عليه وسلم هذا خير من

ملء الأرض مثل هذا

சஹல் இப்னு சஹத் அஸ்சாஹிதீ (ரலி) நபி (ஸல்) அமர்ந்திருக்கும் நேரத்தில் ஒரு மனிதர் நபி (ஸல்) வை கடந்து சென்றார் நபி (ஸல்) வின் அருகில் அமர்ந்திருந்தவரிடம் கடந்து சென்றவரைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கவர் குறிப்பிட்ட அந்த நபரைப்பற்றி “இவர் மக்களிலேயே மிகவும் கண்ணியமானவர்களில் ஒருவர், இவர் யாரையாவது திருமணம் முடிப்பதை பற்றி பேசினால் திருமணம் முடித்துக்கொடுத்துவிடுவார்கள். இவர் யாருக்கேனும் பரிந்துரை செய்தால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு விடும். அப்போது நபி (ஸல்) அமைதியாக இருந்தார்கள்.பிறகு இன்னொரு மனிதர் அந்த சபையை கடந்து சென்றார் இவரைப்பற்றி உங்களது  கருத்து என்ன என்று நபி (ஸல்) கேட்டபோது இவர் முஸ்லிம்களில் ஏழையானவர் இவர் திருமணம் பேசினால் அவருக்கு திருமணம் முடித்துக்கொடுக்க முன் வர மாட்டார்கள். அவரது பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.இவருடைய உபதேசத்தை மக்கள் காது கொடுத்து கேட்க மாட்டார்கள். அப்போது நபி (ஸல்) முன்பு கூறப்பட்டவரை விட இவர் பூமி நிரம்பும் அளவுக்கு இவர் மிகவும் சிறந்தவர்.

அவர் ஜுஹைத் இப்னு சூராக்கத்தல் கிஃபாரியாக இருக்கலாம் என்று இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ கருத்து தெரிவித்துள்ளார்கள்.

🔷 ️நபி (ஸல்) -உங்களில் சில மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்கள் உங்களிடம் தீனார் திர்ஹமை கேட்டால் நீங்கள் கொடுக்க மாட்டீர்கள். ஆனால் அவர் அல்லாஹ்விடத்தில் சொர்க்கத்தை கேட்டாலும் அதை அல்லாஹ் கொடுப்பான்.

விளக்கம் :

 عن أبي هريرة – رضي الله عنه – قال: قال رسول الله – صلى الله عليه وسلم

-: ((رُبَّ أشعث أغبر مدفوع بالأبواب، لو أقسم على الله         لأبرَّه))؛ رواه

مسلم

அபூஹுரைரா (ரலி) – பரட்டை தலையுடைய, அவர்களை பார்த்ததும் கதவை சாத்தும் அளவுக்கு உள்ள சிலர் இருக்கிறார்கள் அல்லாஹ் வின்  மீது ஆணையிட்டு அவர்கள் ஒன்று நடக்க வேண்டும் அல்லது நடக்க கூடாது என்று சத்தியம் செய்தால் அவர்களது சத்தியத்திற்கு அல்லாஹ் உதவுவான் (முஸ்லீம்)

🔷 ஆயிஷா ரலி இடம் உணவு கேட்டு வந்து 3 பேரெத்தம்பழங்கள் கிடைக்கப்பெற்று அதில் இரண்டை இரண்டு பெண் பிள்ளைகளுக்கு கொடுத்து ஒன்றை உண்ணச்செல்லும்போது பிள்ளைகளின் தேவை கருதி அதையும் பங்கிட்டு கொடுத்த பெண்மணியை பற்றி நபி (ஸல்) கூறுகையில் அவர்களுக்கு அல்லாஹ்  சொர்க்கத்தை கடமையாக்கிவிட்டான் என்று கூறினார்கள்

 إن الله يحب العبد التقي الغني الخفي

சஅத் (ரலி)-நபி (ஸல்) – இறையச்சமுள்ள பிறரை சார்ந்து வாழாத(போதுமென்ற உள்ளம் கொண்ட)அறிமுகமற்று வாழ்பவரை அல்லாஹ் விரும்புகிறான்.

(முஸ்லீம்)

الخفي – அவர் வந்தால் அவர் வந்திருக்கிறார் என்ற செய்தி மக்களுக்கு தெரிந்திருக்காது அவர் வரவில்லையென்றால் அதைப்பற்றி யாரும் கேட்கவும் மாட்டார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply