Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 47

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 47

ஹதீத் பாகம் – 47

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

 حدثني أحمد ابن أبي رجاء حدثنا النضر عن هشام قال أخبرني أبي عن

عائشة قالت كان فراش رسول الله صلى الله عليه وسلم من أدم وحشوه من ليف

ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) வின் படுக்கையாக தோலாலான விரிப்பு இருந்தது அது ஓலைகளால் நிரப்பப்பட்டிருக்கும்.

 حدثنا قتادة قال كنا نأتي أنس بن مالك وخبازه قائم وقال كلوا فما أعلم النبي

صلى الله عليه وسلم رأى رغيفا مرققا حتى لحق بالله ولا رأى شاة سميطا بعينه

قط

கத்தாதா (ரஹ்)- நாங்கள் அனஸ் இப்னு மாலிக் (ரலி) இடம் செல்வோம் அவருக்கு ஹுபுஸ்(ரொட்டி) செய்பவர் அங்கிருந்தார்கள். அதை எங்களிடம் உன்ன சொல்லிவிட்டு -நபி (ஸல்) அல்லாஹ்வை சந்திக்கின்ற வரை முறையாக தயார்படுத்தப்பட்ட ரொட்டியை சாப்பிட்டதாக நான் அறிந்ததில்லை. நல்ல முறையில் சதையுள்ள ஆட்டிறைச்சியை நபி (ஸல்) உண்டது எனக்கு தெரியாது.

 حدثنا محمد بن المثنى حدثنا يحيى حدثنا هشام أخبرني أبي عن عائشة

رضي الله عنها قالت كان يأتي علينا الشهر ما نوقد فيه نارا إنما هو التمر والماء

إلا أن نؤتى باللحيم

ஆயிஷா (ரலி) – ஒரு முறை கூட அடுப்பில் நெருப்பு மூட்டாத மாதங்கள் எங்கள் வாழ்வில் இருந்தது நாங்கள் ஈத்தம்பழத்தையும் தண்ணீரையும் தான் உண்டிருப்போம் யாரேனும் கொஞ்சமாக இறைச்சியை எங்களுக்கு அளித்தாலே தவிர.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply