Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 19

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 19

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் 

பாகம் – 19

ஹதீஸுகளை எழுதுதல் என்பது இரு முறைகளில் எழுதப்பட்டது:-

1.  الكتابة الفرديىة தனி நபர்கள் ஹதீஸுகளை எழுதி தொகுத்து வைத்திருந்தனர்.

உதாரணம்:-

💠 அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) – நபி (ஸல்) அவர்களது காலத்தில் நபி(ஸல் ) அவர்களின் அனுமதியுடன் முதன்முதலில் ஹதீஸுகளை தொகுத்து எழுதியது நான் தான் எனக் கூறினார்கள்.

💠 மேலும் அலி (ரலி), அபூஹுரைரா (ரலி), வாஇல் இப்னு ஹுஜுர் (ரலி) அஸ்மா பின்த் உமைஸ் (ரலி), ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் அல் அன்ஸாரீ (ரலி) (ஹஜ்ஜின் சட்டங்களை அதிகமாக தொகுத்து வைத்திருந்தார்கள். இமாம் முஸ்லீம் அவர்கள் தனது தொகுப்பில் இவர்களது தொகுப்பிலிருந்து தான் அதிகமாக ஹஜ்ஜின் பாடத்தில் சேர்த்திருக்கிறார்கள்), இவர்களிடமும் சில தொகுப்புகள் இருந்தன.

2.  والكتابة الرسمية – முறைப்படுத்தி தொகுத்தல்:-

💠 இவ்வாறு ஹதீஸுகளை முதன்முதலில் முறைப்படுத்தி தொகுத்தவர் ابن شهاب الزهرى – இப்னு ஷிஹாப் அஸ் ஸுஹ்ரீ(ரஹ்) என்பவராவார். இவர் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் ஆசிரியராவார்.

எந்த ஒரு சனதை எடுத்துக்கொண்டாலும் கீழ்கண்ட ஆறு பேரை கடந்தே அது செல்லும்.

1. அறிவிப்புத்தொடர் மதீனா வாசிகள் தொடர்பானதாக  இருந்தால் ابن شهاب الزهرى இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) என்ற தாபியி அவர்கள் வழியாகவே வரும்.

2. மக்கா வாசிகள் மூலமாக கிடைத்த சனத் ஆக இருந்தால் عمرو بن دينار (அம்ர் இப்னு தீனார்(ரஹ்) என்ற தாபியியின் வழியாக வரும்.

3. பஸரா வாசிகளின் மூலமாக கிடைத்த சனத் ஆக இருந்தால் قتادة بن دعامة (கத்தாத இப்னு தஆமா) அல்லது يحيى بن ابى كثير யஹ்யா இப்னு அபீ கஸீர் (ரஹ்) அவர்கள் வழியாக வரும்.

4. கூஃபா வாசிகள் மூலமாக ابو اسحاق அபூ இஸ்ஹாக்(ரஹ்), மற்றும் சுலைமான்(ரஹ்) அவர்கள் வழியாகவும் வரும்.

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply