Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 20

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 20

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் 

பாகம் – 20

ஹதீஸ் கிரந்தங்கள் எவ்வாறெல்லாம் தொகுக்கப்பட்டன:-

1. தலைப்பு வாரியாக தொகுக்கப்பட்டது

2. சஹாபாக்களுடைய தரம் வரிசையின் படி தொகுக்கப்பட்டது.

3. எழுத்துவரிசை அடிப்படையில் தொகுக்கப்பட்டது  

الجامع

💠 ஜாமிஃ  என்றால் அதில் அகீதா, சட்டதிட்டங்கள்(ஃபிக்ஹ்),

மறுமையை நினைவூட்டக்கூடிய விஷயங்கள் இருக்க வேண்டும் (الرقاق), உண்ணுதல் மற்றும்  பருகுதல், பயணம் பற்றிய ஒழுக்கங்கள், தஃப்சீர், வரலாறு(التاريخ), சீரா (السيرة), மறுமையின்  அடையாளங்கள், சிறப்புகள்( المناقب), ஆகிய தலைப்புக்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.

(புகாரியில் 97 பாடங்கள் உள்ளன,

முஸ்லிமில் 54 பாடங்கள் உள்ளன,

திர்மிதியில் 50 பாடங்கள் உள்ளன).

4 வகை ஜாமிஃ தொகுப்புகள்

💕 الجامع صحيح البخاري

💕 الجامع صحيح ومسلم

💕 جامع الترمذي

💕 جامع معمر بن راشد الازدى

السنن

 

💠 இவற்றில் பெரும்பாலும் மர்ஃபூஃ(مرفوع) ஆன ஹதீஸுகள் இடம்பெற்றிருக்கும். ஃபிக்ஹ் கிதாபை போன்றே பாடங்கள் அமைக்கப் பெற்றிருக்கும்.

ஸுனன் தொகுப்புகள்

💕 سنن أبي داود ஸுனன் அபீ தாவூத்

💕 سنن نسائی ஸுனன் நஸயீ

💕 سنن ابن ماجة ஸுனன் இப்னு மாஜா  

💕 سنن دارمي ஸுனன் தாரமீ

💕 سنن الكبرى ஸுனனுல் குப்ரா

مصنفات

 

💠 இவை ஸுனன்களைப் போன்றே இருப்பினும் இதில் موقوف மவ்கூஃப் ஆன ஹதீஸுகளும் مقطوع மக்தூ’ ஆன ஹதீஸுகளும் இடம் பெறும்.

مصنف عبد الرزاق – இது 11 பாகங்களைக்கொண்ட இந்த நூலில் 19418 ஹதீஸுகள் இடம் பெற்றுள்ளன.

مصنف ابن أبي شيبة – இது 15 பாகங்களைக் கொண்டதாகும்.

موطأ

 

💠 இவை முஸன்னபாத்துகள் போன்றே இருப்பினும் அவற்றை தொகுத்த இமாம்களின் கருத்தும் இவற்றில் இடம்பெற்றிருக்கும்.

مجامع

💠 ஆறு கிரந்தங்களின்(صحاح الستة) கலவையாக இவை இருக்கும்.

வகைகள்:

💕 جامع الأصول

💕 كنز العمال

الزوائد

💠 வேறு எந்த ஹதீஸ் கிரந்தங்களிலும் இடம் பெறாத தனித்தனி கிரந்தங்களில் மட்டுமே இடம் பெற்ற ஹதீஸ் தொகுப்புக்களை தொகுப்பதே ஜவாயித் எனப்படும். இந்த வகையில் 3 புத்தகங்கள் உள்ளதாக அறிகிறோம்.

المستدرك

💠 ஒரு ஹதீஸ் தொகுப்பாளரின் நிபந்தனைக்கு உட்பட்டு இருப்பினும் தங்கள் கிரந்தங்களில் அந்த ஹதீஸுகளை கொண்டு வந்திருக்க மாட்டார்கள். அவ்வாறான ஹதீஸுகளை இமாம் ஹாகிம் அவர்கள் المستدرك على الصحيحين (அல் முஸ்தத்ரக் அலா சஹீஹய்ன்) என தொகுத்துள்ளார்கள்.  

المستخرجات

💠 இதன் ஆசிரியர் சனதை முழுமையாக அறிவிக்காமல் தன்னுடைய சனதிற்கு ஒத்திருக்கக்கூடிய ஹதீஸுகளை மற்ற கிரந்தகளிலிருந்து எடுத்து தனது கிரந்தத்தில் பதிவு செய்திருப்பார். புஹாரி முஸ்லீம் போன்ற கிரந்தங்களுக்கு முஸ்தஹரஜாத் நூற்கள் உள்ளன.

اجزاء

ஒரு தலைப்பில் உள்ள ஹதீஸுகளை மட்டுமாக தொகுப்பது.  

உதாரணம் :

💕 இமாம் புஹாரி (القراءة خلف الامام) இமாமுக்கு பின்னால் தொழும்போது கிராத் ஓதுவதைப்பற்றிய தொகுப்பு.

💕 தொழுகையில் இரு கைகளை உயர்த்துதல் (رفع اليدين) பற்றிய தொகுப்புகள் தொகுத்தது போலவே

💕 ரியாளுஸ்ஸாலிஹீன்

💕 அத்தர்கீப் அத்தர்கீப் (الترغيب والترهيب)

💕 ஷமாயிலு திர்மிதி الشمائل للترمذي நபி ஸல்) அவர்களின் வர்ணனையைப்பற்றிய தொகுப்பு.

راوي الحديث ஹதீஸ் அறிவிப்பாளர்கள் அடிப்படையில் 3 வகையாக பிரிக்கலாம்:

🍃 அறிவிப்பாளர்கள் வரிசை அடிப்படையில் தொகுக்கப்பட்ட நூற்களும் உள்ளன. அறிவிப்பாளர்களின் பெயர் வரிசை அடிப்படையில் தொகுக்கப்பட்ட தொகுப்புகளும் உள்ளன.

💕 مسند

💕 معجم

💕 اطراف

இவை 3 உம் அறிவிப்பாளர்களின் பெயர்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட புத்தகங்களாகும். 

அறிவிப்பாளர் பெயர்வரிசைப்படி தொகுத்தல் 3 விதமாக இடம்பெறும்.

🍃 இமாம் அஹ்மத் முஸ்னத் அஹ்மதில் தொகுத்தது போல ஸஹாபாக்களின் பெயர் அடிப்படையில் தொகுத்திருப்பார்கள்.

🍃 முஃஜம் கபீர், தப்றானீ – இவை ஸஹாபாக்களின் பெயர்கள் அடிப்படையில் தொகுத்த நூற்கள் ஆகும்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply