Home / Classes (e-learning) / Dr. Abdur Rahim - இலக்கண பாடம் / Dr. Abdur Rahim இரண்டாவது பாடம் – الدَّرْسُ الثَّانِ

Dr. Abdur Rahim இரண்டாவது பாடம் – الدَّرْسُ الثَّانِ

இரண்டாவது பாடம் الدَّرْسُ الثَّانِ  
 ذَلِكَ – அது
ஒரு பொருளை சுட்டி காட்ட உதவுவதால் இதற்கு சுட்டுப்பெயர்ச்சொல் என்று கூறப்படும்.
இதை அரபியில் اِسْمُ الاِشَارَةُ என்று சொல்லப்படும்.


தூரத்தில்  உள்ள பொருட்களை நாம் அது என்போம். ஆதலால் இதை தூரத்தில்  உள்ளதை 

குறிக்கும் சுட்டுபெயர்ச்சொல் என்று கூறலாம் اِسْمُ الاِشَارَةُ لِلْبَعِيْدِ 

இது குதிரை மேலும் இது கழுதைهَذَا حِصَانٌ وَ ذَلِكَ حِمَار

இங்கு இரு வாக்கியங்களை இணைத்ததால் இந்த و விற்கு இணைக்கும் 

இடைச்சொல் என்று பெயர்( (حَرْفٌ عَطْفٌ


வாக்கியம்جُمْلَةٌ    

ஒன்றுக்கும் மேற்பட்ட வார்த்தைகள்  இணைந்து முழுமையான பொருளைத் தந்தால் 

அது جُمْلَةٌவாக்கியம் எனப்படும். அரபியில் வாக்கியங்கள் இரு வைப்படும். ஒரு வாக்கியம் பெயர்ச்சொல்லைக் கொண்டு தொடங்கினால் அது பெயர்ச்சொல் வாக்கியம் எனப்படும். இதை அரபியில் الْجُمْلَةُ الْاِسْمِيَّةُஎன்று சொல்லப்படும்
ஒரு வாக்கியம் வினைசொல்லைக் கொண்டு தொடங்கினால் அது வினைச்சொல் வாக்கியம் எனப்படும். இதை அரபியில்   الْجُمْلَةُ الْفِعْلِيَّةَ என்று சொல்லப்படும்
பெயேர்ச்சொல் வாக்கியம்   இரு முக்கிய பிரிவுகளைக் கொண்டதாக இருக்கும்

1. مُبْتَدَأٌ     2.  خَبَرٌ

  எழுவாய்    مُبْتَدَأٌ    
எதைக்கொண்டு ஒரு வாக்கியத்தை  ஆரம்பம் செய்கிறோமோ அது  எழுவாய்  مُبْتَدَأஎனப்படும். مُبْتَدَأஎப்போதும் مَرْفُوْعٌஆக வரும்.

உதாரணம்;
நாற்காலி உடைந்திருக்கிறது الْكُرْسِيُّ مَكْسُوْرٌ
இந்த வாக்கியத்தில் நாற்காலி என்பது مُبْتَدَأَ

பயனிலைخَبَرٌ
ஒரு வாக்கியத்தில் எழுவாய் சொல்ல வரும் செய்தி خَبَرٌஎனப்படும். خَبَرٌ எப்போதும் مَرْفُوْعٌஆக வரும்

உதாரணம்;
நாற்காலி உடைந்திருக்கிறதுالْكُرْسِيُّ مَكْسُوْرٌ  
இதில் நாற்காலி உடைந்திருக்கிறது என்று நாற்காலியைப் பற்றிய செய்தியை சொல்வதால் مَكْسُوْرٌ , خَبَرٌஆக வருகிறது.
الْكَلِمَاةُ الْجَدِيْدُ
தலைவர் – اِمَامٌ    ; கல் – حَجَرٌ     ;சர்க்கரை – سُكَّرٌ    ; பால் – لَبَنٌ

Check Also

Dr. Abdur Rahim Arabic Book 2 lesson 1-இலக்கண பாடம் 1 (الدَّرْسُ الأَوَّل)

Dr. Abdur Rahim Arabic Book 2 – இலக்கண பாடம் 1 PDF Read Only / வாசிக்க …

One comment

  1. Assalamu alaikum…
    Mubthadha la yen alif laam joind aagirukkunnu sollirkalam konjam imaam

Leave a Reply to hasan jas Cancel reply