Home / Classes (e-learning) / Dr. Abdur Rahim - இலக்கண பாடம் / Dr. Abdur Rahim இலக்கண பாடம் 1

Dr. Abdur Rahim இலக்கண பாடம் 1

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
Dr. அப்துர்ரஹீம் அவர்களின்  (دُرُوسُ الْلُغَةُ الْعَرَبِيَّة )என்ற புத்தகத்தில்அரபி மொழியையும், இலக்கணத்தையும்,
எளிமையாகவும், நுணுக்கமாகவும் கற்றுக்கொள்ள எளியமுறையில் பாடங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்த புத்தகம் மதீனா பல்கலைக்கழகத்தின் பாடப்புத்தகமாகவும், இன்னும் உலகின் பல இடங்களில்,
குறிப்பாக இந்தியாவின் பல மதரஸாக்களிலும் இந்த புத்தகத்தையே தங்கள் பாடப்புத்தகமாக எடுத்து
கற்றுக்கொடுக்கப்படுகிறது.
இன்ஷா அல்லாஹ் இந்த புத்தகத்தைக் கொண்டே நாமும் எளிய முறையில் அரபி கற்றுக்கொள்ளலாம்.

இவ்வளவு எளிய முறையில் அரபிக் கற்றுக்கொள்ள நமக்கு தொகுத்து தந்த  Dr. அப்துர்ரஹீம் அவர்களுக்காக
துஆ செய்து, நமது நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்.

இந்த மொழிபெயர்ப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் அல்லாஹ்வின் உதவி இம்மையிலும், மறுமையிலும்
கிடைக்க துஆ செய்யுங்கள்
இந்த பாடத்திட்டம் மூன்று புத்தகமாக பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு முதல் புத்தத்திலிருந்து பாடங்கள்
ஒவ்வொன்றாக தொடங்கலாம்.
இன்ஷா அல்லாஹ். முதல் புத்தகத்தை Download  செய்ய கீழுள்ள Link-ஐ click செய்யவும். 
அரபியில் உயிரெழுத்துக்கள்
Dr Abdur Rahim aa

வேறு எந்த மொழிகளிலும் காணப்படாத தனிச் சிறப்பு அரபு மொழியில் பல உள்ளது. உதாரணம்,
لَا اِلَهَ اِلَّا اللهُ مُحَمَّدٌ الرَّسُوْلُ الله   – வணங்க தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை.
முஹம்மது அல்லாஹ்வுடைய தூதர்
اَشْهَدُ اَنَّ مُحَمَّدً عَبْدُهُ وَ رَسُوْلُهُ – முஹம்மத் அவனுடைய (அல்லாஹ்) அடிமை என்றும், மேலும் அவனுடைய தூதர்
என்றும் நான் சாட்சி சொல்கிறேன்
اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ   அல்லாஹ்வே முஹம்மத் (ஸல் ) அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் வழங்குவாயாக
இவற்றை தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ மொழி பெயர்க்கும் போது மூன்று இடத்திலும் முஹம்மது என்றே
குறிப்பிடப்பட்டுள்ளது . எழுத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அரபு மொழில் அதன் இலக்கண அமைப்பிற்கு
ஏற்றவாறு முஹம்மதுன் , முஹம்மதன் , முஹம்மதின் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Dr A Rahim..
مَجْرُوْرٌ
ஒரு பெயர்சொல்லின் கடைசி எழுத்துٍ ِஆகவோ இருந்தால்  مَجْرُوْرٌஎனப்படும்
Ex :   مُحَمَّدٍமுஹம்மதின்
அரபு மொழியல் மேலும் பல சுவையான விஷயங்கள் உள்ளன. இதைப்பற்றி அரிய பாடத்திற்கு செல்வோம்.
முதலாவது பாடம்  –الدَّرْسُ الأَوَّلُ
هذا– இது
ஒரு பொருளை சுட்டி காட்ட உதவுவதால் இதற்கு சுட்டுப்பெயர்ச்சொல் என்று கூறப்படும்.
இதை அரபியில் اِسْمُ الاِشَارَةُ என்று சொல்லப்படும்.
அருகில் உள்ள பொருட்களை நாம் இது என்போம். ஆதலால் இதை அருகில் உள்ளதை குறிக்கும் சுட்டுபெயர்ச்சொல்
என்று கூறவேண்டும் اِسْمُ الاِشَارَةُ لِلْقَرِيْبِ 
هَذَا بَيْتٌ                     இது வீடு
        هَذَا مَسْجِدٌ –    இது பள்ளி
இதன் உதவியோடு புத்தகத்தில் உள்ள பாடத்தை தொடரவும்.
Pg no: 2
مَا – என்ன ?
مَا هَذَا    – இது என்ன? هَذَا بَيْتٌ –  இது வீடு
Pg no; 7
பயிற்சி
பின்வரும் கேள்விகளுக்கு விடை அளிக்கவும்:
Pg  no; 8
இது வீடு + ஆ = இது வீடா?
    
     أَ هَذَا بَيْتٌ  =     هَذَا بَيْتٌ
ஆம் இது வீடு தான்   نَعَمْ ,هَذَا بَيْتٌ
نَعَمْ , لَا  –  حَرْفُ الْجَوَابِ
கேள்வி கேட்கப்படும் போது பதிலளிக்க ஆம்“,இல்லை என்ற சொல் உபயோகிக்கப்படுவதால் இதற்கு பதிலின்
இடைச்சொல் என்று பெயர்.
இது வீடு என்ற வாக்கியத்திற்கு பின்னால் “ஆ” சேர்த்து வீடா? என்று கூறும்போது அது கேள்வியாக மாறுவது போல,
 هَذَا بَيْتٌ என்ற வாக்கியத்திற்கு முன்னால்أ சேர்த்த உடன் அது கேள்வியாக மாறுகிறது.
Pg 9
படித்து எழுதி பார்க்கவும்   اِقْرَأْ وَكْتُبْ
مَنْ
مَا விற்கு பல அர்த்தங்கள் இருப்பினும் அது கேள்வியாக வரும்போது “என்ன?” என்ற அர்த்தத்தில் வரும். அதுவே
மனிதர்கள், ஜின்கள், மலக்குகள் இவர்களை  குறிக்கும் போது مَنْஎனும் வார்த்தை உபயோகிக்கப்படும்
 இவர்  யார் –من هذا؟ 
 படித்து எழுதி பார்க்கவும்    اِقْرَأْ وَكْتُبْ
الْكَلِمَاةُ الْجَدِيْدُ
பள்ளி مَسْجِدٌ;வீடு –  بَيْتٌ;பேனா     قَلَمٌ;  புத்தகம் كِتَابٌ
சாவி     مِفْتَاحٌ     ;     மேஜை مَكْتَبٌ  ;      கதவு  – باَبٌ; கட்டில்   سَرِيْرٌ   
நாற்காலி كُرْسِيٌّ;சட்டை قَمِيْصٌ ;   நட்சத்திரம் نَجْمٌ; மருத்துவர் طَبِيْبٌ
சிறுவன் وَلَدٌ ;   மாணவன் طَالِبٌ ; வியாபாரிتاَجِرٌ  ; மனிதன் رَجُلٌ
நாய் كَلْبٌ   ;     பூனை قِطٌّ   ; கழுதை حِمَارٌ ; குதிரை حِصَانٌ
ஒட்டகம் جَمَلٌ; சேவல் دِيْكٌ ; ஆசிரியர் مُدَرِّسٌ; கைக்குட்டை مِنْدِيْلٌ
ஆம் نَعَمْ ; இல்லை لَا ; என்ன مَا  ; யார் مَنْ

Check Also

Dr. Abdur Rahim Arabic Book 2 lesson 1-இலக்கண பாடம் 1 (الدَّرْسُ الأَوَّل)

Dr. Abdur Rahim Arabic Book 2 – இலக்கண பாடம் 1 PDF Read Only / வாசிக்க …

7 comments

  1. I am new muslim alhamthulillah veeri use full thanks allah

  2. Jazakallahu Khairan Katheera! Well done!!

  3. ماشاءالله
    جزاك الله خير

  4. Assalamu alaikum itz very usefull for me alhamdhulillah bcoz am studied Arabic course nd jazaak allah

  5. Assalamualaikum jazahallahuhairun I m very happy to go through dis lessons bcoz I m doing aleem course by Allah’s grace through WhatsApp alhamdhullah dua Mae yaad rako

  6. Please give 9th and other lessons

  7. Assalamu Alaikkum Warahumathullahi Wa Barakkathuhu.

    Jazakkumullahu Khairan.

    The lessons are nice and they’re just few drops from ocean. So, there’re lot more to learn about Grammars in Arabic and they’re fascinating once you got the grip on it. And finally our goal and aim is to have a clinging contact with The Holy Quran. This is what our Niyya to learn arabic nothing else. Also you’ll see memorizing quran will become easy if you know the grammar.

    Alhamdulillahi.

    I learned arabic grammars through Mathina Arabic books by Dr. V Abdur Raheem.(From youtube videos)
    My Teacher was Asif Meharali
    May Allah reward them all for their tremendous effort in making this projects successful and all of us.

    Resources:
    http://www.lqtoronto.com/downloads.html

    Thanks,
    Hussain Badusha.
    Assalamu Alaikkum varah…

Leave a Reply to yousuf Cancel reply