Live Telecast
Home / கேள்வி பதில் பகுதி

கேள்வி பதில் பகுதி

Filter:AllOpenResolvedClosedUnanswered
pj விற்கு முன்பு இமாம்கள் சூனியத்தை மறுத்துள்ளார்களா? சிஹ்ர் (சூனியம்) குறித்து…. சூனியத்தை நாங்கள் தான் மறுக்கிறோம் எந்த இமாம்களும் மறுத்தது இல்லை என்றும் அப்படி மறுத்து இருந்தால் ஆதாரம் கொண்டு வாருங்கள் என்று என்று சவால் விட்ட குழப்பவாதிகளுக்கு. இந்த இந்த இமாம்கள் எல்லாம் மறுத்து உள்ளார்கள் என்று நாம் ஆதாரங்களை எடுத்து வைக்கும் போது அந்த கிதாபில் இருந்து எடுத்து காட்டுமாறு வாய்சவாடல் விடுகிறார்கள் அவர்களுக்கு இதோ ஆதாரங்கள் அந்த அந்த கிதாபில் இருந்தே எடுத்து வைக்கிறோம் திராணி இருந்தால் இதற்க்கு பதில் சொல்லட்டும் சிஹ்ர் விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் உண்டு. அது வெறும் கற்பனை தான்; அது உண்மையில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது. முதாலவாதாக ஃபத்ஹுல் பாரியில் இருந்து فتح الباري – ابن حجر – (10 / 222) واختلف في السحر فقيل هو تخبيل فقط ولا حقيقة له وهذا اختيار أبي جعفر الاسترباذي من الشافعية وأبي بكر الرازي من الحنفية وبن حزم الظاهري وطائفة قال النووي والصحيح أن له حقيقة وبه قطع الجمهور وعليه عامة العلماء ويدل عليه الكتاب والسنة الصحيحة المشهورة انتهى 1.ஃபத்ஹுல் பாரியில் இமாம் இப்னு ஹஜர் அவர்கள், சிஹ்ரின் புரிதலில் பல்வேறு குழப்பங்கள் இருந்திருக்கின்றன என்று கூறியிருக்கிறார். (பார்க்க ஃபத்ஹுல் பாரி 222/10) 2.ஹனஃபி மதுஹபின் இமாம் இப்னு ஹஸ்ம் மறுத்திருக்கிறார் (பார்க்க ஃபத்ஹுல் பாரி 222/10) 3.ஹனஃபி மதுஹபின் இமாம் அபுபக்கர் ராசி சிஹ்ரை மறுத்திருக்கிறார். (பார்க்க ஃபத்ஹுல் பாரி 222/10) அடுத்ததாக ரூஹுள் பயானில் இருந்து 1.ரூஹுல் பயான் 70/4 இல், சிஹ்ர் என்பது ஒரு பொய், பித்தலாட்டம் தான் என‌ இமாம் காஃழி கூறியதாக குறிப்பிடபப்ட்டிருக்கிறது. 2.இமாம் ஷஃரானி அவர்கள் கூறியதாக ரூஹுல் பயான் 274/6 இல், சூனியம் என்பது உண்மையில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. ——————————————————————————————————————- மேலே குறிப்பிட்ட ஆதாரங்களை அந்தந்த கிதாபில் இருந்து படத்தோடு பதிவு செய்து இருக்கிறோம் ஆதாரம் கொடுத்தால் கிதாபில் இருந்து எடுத்து காட்டுங்கள் என்று வெறும் வாய்சவாடல் விடும் வலிகேடர்களுக்கான பதிவு திராணி இருந்தால் பதில் சொல்லட்டும் இன்ஷா அல்லாஹ்தொடரும்…………
OpenFAZUL RAHIMAN asked 1 week ago • 
6 views0 answers0 votes
OpenIRFAN HAMEED asked 4 weeks ago • 
16 views0 answers0 votes
OpenHabeeb Mohamed asked 4 weeks ago • 
17 views0 answers0 votes