Home / Quran / குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை / அத்தியாயம் 91 ஷம்ஸ் (சூரியன்) வசனங்கள் 15

அத்தியாயம் 91 ஷம்ஸ் (சூரியன்) வசனங்கள் 15

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
وَالشَّمْسِ وَضُحَاهَا ﴿١﴾
1) சூரியன் மீதும்அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக
وَالشَّمْسِ
وَضُحَاهَا
சூரியன் மீது சத்தியமாக
அதன் பிரகாசத்தின் மீதும்
 وَالْقَمَرِ إِذَا تَلَاهَا ﴿٢﴾ 
2) (பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக
وَالْقَمَرِ
إِذَا تَلَاهَا
சந்திரன் மீதும்
அதைத் தொடரும்போது
 وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا﴿٣﴾
3) பகல் வெளியாகும் போதுஅதன் மீதும் சத்தியமாக
وَالنَّهَارِ
إِذَا جَلَّاهَا
பகல் மீதும்
அதை அது வெளியாக்கும் போது
 وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا  ﴿٤﴾
4) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக
وَاللَّيْلِ
إِذَا يَغْشَاهَا
இரவின் மீதும்
அதை அது மூடிக்கொள்ளும்
 وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا ﴿٥﴾
5) வானத்தின் மீதும்அதை அமைத்திருப்பதின் மீதும் சத்தியமாக
وَالسَّمَاءِ
وَمَا بَنَاهَا
வானத்தின் மீதும்
அதை அமைத்திருப்பது
  
 وَالْأَرْضِ وَمَا طَحَاهَا ﴿٦﴾
6) பூமியின் மீதும்இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக
وَالْأَرْضِ
وَمَا طَحَاهَا
பூமியின் மீதும்
இன்னும் அதை விரித்திருப்பது
 وَنَفْسٍ وَمَا سَوَّاهَا ﴿٧﴾
7) ஆத்மாவின் மீதும்அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக
وَنَفْسٍ
وَمَا سَوَّاهَا
ஆத்மாவின் மீதும்
அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும்
 فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا ﴿٨﴾
8) அப்பால்அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும்அதன் நன்மையையும் உணர்த்தினான். 
فَأَلْهَمَهَا
فُجُورَهَا
وَتَقْوَاهَا
அதற்கு அவன் உணர்த்தினான்
அதன் தீமை
அதன் நன்மையையும்
 قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا ﴿٩﴾
9) அதை(ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.
قَدْ
أَفْلَحَ
مَن زَكَّاهَا
திடமாக
வெற்றியடைந்தார்
அதைப் பரிசுத்தமாக்கினாரே அவர்
 وَقَدْ خَابَ مَن دَسَّاهَا﴿١٠﴾
10) ஆனால் எவன் அதைக் களங்கப்படுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான். 
وَقَدْ خَابَ
مَن دَسَّاهَا
திட்டமாகத் தோல்வி அடைந்தான்
அதைக் களங்கப்படுத்தினாரே அவர்
 كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا ﴿١١﴾
11) ‘ஸமூது‘ (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தின் காரணத்தால்  (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர். 
كَذَّبَتْ
ثَمُودُ
بِطَغْوَاهَا
பொய்ப்படுத்தினர்
ஸமூதுகூட்டத்தினர்
அக்கிரமத்தின் காரணத்தால்
 إِذِ انبَعَثَ أَشْقَاهَا ﴿١٢﴾
12) அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்த போது,
إِذِ انبَعَثَ
أَشْقَاهَا
கிளம்பி வந்த போது
அவர்களில் கேடுகெட்டவன்
 فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّـهِ نَاقَةَ اللَّـهِ وَسُقْيَاهَا ﴿١٣﴾
13) அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: “இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையதுஇது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்” என்று கூறினார். 
فَقَالَ لَهُمْ
رَسُولُ اللَّـهِ
அவர்களிடத்தில் கூறினார்
அல்லாஹ்வின் தூதர்
نَاقَةَ اللَّـهِ
وَسُقْيَاهَا
அல்லாஹ்வுடைய ஒட்டகம்
அதை நீரருந்த
 فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنبِهِمْ فَسَوَّاهَا ﴿١٤﴾
14) ஆனால்அவர்கள் அவரைப் பொய்ப்பித்துஅதன் கால் நரம்பைத் தறித்துவிட்டனர்- ஆகவேஅவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கிஅவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான். 
فَكَذَّبُوهُ
فَعَقَرُوهَا
அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்
அதன் கால் நரம்பைத் தறித்தனர்
فَدَمْدَمَ
عَلَيْهِمْ
رَبُّهُم
வேதனையை இறக்கினான்
அவர்கள் மீது
அவர்களுடைய இறைவன்
بِذَنبِهِمْ
فَسَوَّاهَا
அவர்களின் பாவத்தின் காரணமாக
சமமாக்கினான்
 وَلَا يَخَافُ عُقْبَاهَا﴿١٥﴾  
15) அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை.
وَلَا يَخَافُ
عُقْبَاهَا
அவன் பயப்படவில்லை
அதன் முடிவைப்

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

3 comments

  1. as salaamu alaikum wr wb
    hasharath if you don’t mind why it will not make as application in Android?

Leave a Reply