Home / இமாம்களின் வரலாறு / அழைப்பாளர்களின் முன்மாதிரி வீரர் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்)

அழைப்பாளர்களின் முன்மாதிரி வீரர் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்)

_ஷெய்க் எம்.ஜே. எம். ரிஸ்வான் மதனி

அறிமுகம்:

பிறப்பு : ஹி.164/ மரணம் ஹி. 241. (கி.பி.780-855)

முழுப் பெயர் :
அபூ அப்தில்லாஹ் அஹ்மத் பின் முஹம்மத் பின் ஹம்பல் அஷ்ஷைபானி .
சிறந்த ஹதீஸ் கலை மேதை. ஃபிக்ஹ் சட்டக் கலை நிபுணர்.
رحمه الله رحمة واسعة
இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் சிரேஷ்ட மாணவரான இவர் ஹதீஸ் துறையில் தனது ஆசிரியரை விட திறமையானவராக விளங்குகிறார் என்பதை மறுக்க முடியாது.
இவரது காலத்தில் முஃதஸிலாக்களின் பகுத்தறிவு வழிகேட்டால் பலர் வழிகெடுக்கப்படுவதில் இருந்து இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் தனிமனிதாக நின்று போராடி வெற்றி கண்டார்கள் .

இவரைப் பற்றிய வாசிப்பு அறிஞர்கள், அழைப்பாளர்கள் என்போருக்கு பல உண்மைகளை உணர்த்துவதால் அவர்கள் தொடர்பாக சில கருத்துக்கள் இங்கு பதிவிடப்படுகின்றது.

இமாம் அஹ்மத் பற்றி இமாம் இப்னுல் மதீனி அவர்கள்:

” إن الله أعز هذا الدين برجلين ليس لهما ثالث أبو بكر الصديق يوم الردة ، وأحمد بن حنبل يوم المحنة \ علي بن المديني : \ ” تاريخ بغداد للخطيب البغدادي ( 4 / 418 )
நபியின் மரணத்தின் பின் ஏற்பட்ட மதம் மாறிய தினத்தில் முதலாம் கலீஃபா அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்கள் மூலமும்,
மற்றது சோதனையில் இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் மூலமாகும் என இமாம் அலி பின் மதீனி என்ற அறிஞர் ஒப்பிட்டுக் கூறும் அளவு இமாம் அஹ்மத் (ரஹ்) ஆகிய
இரு மனிதர்கள் மூலம் அல்லாஹ் இந்த மார்க்கத்தை கண்ணியப்படுத்தினான். அதற்கு மூன்றாமவர் இருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.( தாரீகு பக்தாத்)

சோதனையில் தனிமனிதாக நின்று அப்பாஸிய அரச ஆதரவாளர்களை குர்ஆன் மற்றும் ஹதீஸின் ஆதாரங்களை முன்னிறுத்தி சுக்குநூறாக்கிய வரலாற்றுச் சாதனை படைத்த இமாம் அவர்களின் வாழ்வில் கற்றுக் கொள்ள பல நூறு பாடங்கள் உண்டு.

அகீதாவில் வழிகெட்ட சூஃபிக்கள், ஷீஆக்கள், அஷ்அரிக்கள் போன்ற பிரிவுகளோடு சமரசம் செய்து கொண்டு சில்லறை மார்க்கம் பேசுவோர் அகீதா தொடர்பான கருத்துக்களில் இமாமின் நிலைப்பாட்டில் நிறையவே படிக்க வேண்டி பகுதிகள் உள்ளன என்பதை உண்மையாளர்கள் மறுக்க மாட்டார்கள் என நினைக்கின்றேன்…

முஃதஸிலா சோதனைப் புயலில் சற்றும் தரளாது இமைய மலையாய் நின்ற இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள்:

அல்குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சாகும். அது படைக்கப் பட்டது அல்ல; என்பதை பின்வரும் வசனத்தின் மூலம் தெளிவு படுத்தி உள்ளதாக அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அது தொடர்பாக இங்கு நோக்குவோம்.

أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ تَبَارَكَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ )الأعراف/ 54)

படைத்தல் மற்றும் கட்டளையிடுதல் என்பது அவனுக்குரியதாகும். அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ் மகத்துவமானவனாகிவிட்டான். ( அல்அஃராஃப்- 54) மேலுள்ள வசனத்தில் இருந்து இரண்டு வகையான விளக்கங்கள் பெறப்படும்.

1)படைத்தல், கட்டளையிடுதல் ஆகிய இரண்டிற்கும் இடையில் அல்லாஹ் வேறுபடுத்திக் கூறி உள்ளமை.

அவ்விரெண்டும் அல்லாஹ்வின் பண்புகளைக் குறிக்கும். அவற்றை அவன் தன் பக்கம் இணைத்துக் கூறியமை ஆகிய இரண்டு அம்சங்களே அவை.

படைப்பு என்பது அவனது செயலைக் குறிக்கும்.

கட்டளை என்பது ஏவல் தொடர்பான அவனது வார்த்தையைக் குறிக்கும்.

இங்கு இரண்டு முக்கியமான குறிப்புக்களை அறிய முடிகிறது.

((1)) இவ்விரண்டும் ஒன்றல்ல. மாறுபட்ட இரு வெவ்வேறு அம்சங்கள் என்பதை உணர்த்தவே (و ) வாவ் என்ற சொல் கொண்டு வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. அதனை மறுக்க முடியாத, மாற்றமாக அதை உறுதி செய்கின்றவாறான அமைப்பில் அது இடம் பெற்றுள்ளது.

((2)).இரண்டாவது அம்சம் : படைத்தல் என்பது அவனது கட்டளையை அடுத்து நடைபெறக் கூடியதாகும். உதாரணமாக

( إِنَّمَا أَمْرُهُ إِذَا أَرَادَ شَيْئًا أَنْ يَقُولَ لَهُ كُنْ فَيَكُونُ ) يس/ 82 )

ஒரு படைப்பைப் படைக்க அவன் நாடினால் அதற்கு அவனது கட்டளை குன் (كن) ஆகு; எனக் கட்டளையிடுவதாகும். (அவ்வாறு கூறப்பட்டதும்) அது உடனே ஆகிவிடும் (யாசீன். வச: 82) என இடம் பெறும் வசனத்தை குறிப்பிட முடியும்.

இங்கு குன் (كن) ஆகு எனக் கூறுவது அவனது கட்டளையாகும். அந்தக் கட்டளை படைக்கப்பட்டதாக இருப்பின் அவனது படைப்பு என்பது மற்றொரு கட்டளையின் பக்கமும், மற்றொரு கட்டளை புதிய இன்னொரு பக்கமும் இவ்வாறு எல்லை இல்லாமல் தேவைப்பட்டதாக இருப்பது தொடரும். தொடரி வாதம் என்பதற்கு ஒப்பான இந்த விளக்கம் அசாத்தியமான வழிமுறையாகும்.

எனவே படைத்தல், கட்டளை பிறப்பித்தல் ஆகிய இரண்டும் வேறுபட்டதாகும். அந்த வகையில் குர்ஆன் படைத்தலோடு தொடர்பானது கிடையாது. மாற்றமாக , அல்லாஹ்வின் கட்டளையோடு தொடர்பானதாகும்.

அல்லாஹ்வின் கட்டளையோடு தொடர்பானதாக் காணப்படும் குர்ஆன் எப்படி படைக்கப்பட்டதாக இருக்க முடியும் என்பது அறிவுச் சிகரம் அஹ்மத் (ரஹ்) அவர்களின் வாதமாகும். (சபாஷ் அழகிய வாதம் இமாம் அவர்களே).

இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் விவாத நேரங்களில் முஃதஸிலா, ஜஹ்மிய்யா போன்ற வழி கெட்ட பிரிவினர்களுக்கெதிராக மேற்படி வசனத்தையே #முன்வைத்ததோடு ,

وقال لهم : ” قال الله : ( أتى أمر الله …) [النحل: 1] فأمره كلامه واستطاعته ليس بمخلوق ، فلا تضربوا كتاب الله بعضه ببعض ” رواه حنبل في ” المحنة ” (ص/54).
அல்லாஹ்வின் கட்டளை வந்தது என இடம் பெறும் வசனத்தில் அல்லாஹ்வின் கட்டளை என்பது அவனது பேச்சாகும். அது படைக்கப்பட்டது அல்ல. எனவே அல்லாஹ்வின் வேதத்தில் ஒன்றை மற்றொன்றோடு மோதி விடாதீர்கள் எனக் கூறினார்கள்.

அப்பாஸிய கலீஃபாவான அல்முஃதஸிம் ஒழுங்கு செய்திருந்த முஃதஸிலாக் கொள்கை பரப்பாளர் என அறியப்படுகிறது இப்னு அபீ துஆத் என்பவனோடு கலீஃபாவின் மஜ்லிஸில் நடை பெற்ற விவாத அரங்கில் குர்ஆன் படைக்கப்பட்டது என்று கூறுமாறு வற்புறுத்தப்பட்டு பல முறைகள் அடித்து துன்புறுத்தப்பட்ட போதும் உங்கள் கூற்றுக்கு குர்ஆனில் இருந்தோ அல்லது சுன்னாவில் இருந்தோ முறையான, ஏற்றுக் கொள்ளத்தக்க ஆதாரத்தை சமர்ப்பியுங்கள் என வேண்டிக் கொள்ளும் இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள்,
قال تعالى: يس والقرآن الحكيم ولم يقل والقرآن المخلوق
யாசீன் ஞானம் நிறைந்த இந்தக் குர்ஆன் மீது சத்தியமாக என இடம் பெறும் வசனத்தில் அல்லாஹ் படைக்கப்பட்ட குர்ஆன் மீது சத்தியமாக எனக் குறிப்பிடவில்லை என முஃதஸிலா ஆதாரவாளரான அல்முஃதஸிமிடம் இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் எடுத்துக் காட்டியதாக அவரது விவாத அரங்கம் பற்றிய வாசிப்பு உணர்த்துகின்றது.

அல்முதவக்கில் என்ற அப்பாஸிய கலீஃபாவிடம்
وقال فيما كتبه للمتوكل حين سأله عن مسألة القرآن :
” وقد قال الله تعالى : ( وَإِنْ أَحَدٌ مِنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّى يَسْمَعَ كَلَامَ اللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنَهُ ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَعْلَمُونَ )التوبة/ 6 ، وقال : ( ألا له الخلق والأمر ) ، فأخبر بالخلق ، ثم قال : ( والأمر ) ، فأخبر أن الأمر غير مخلوق ” انتهى. رواه صالح ابنه في ” المحنة ” (روايته ص: 120 – 121).
(நபியே!) இணைவைப்பாளர்களில் யாராவது ஒருவன் (போரின் போது ) உம்மிடம் பாதுகாப்பு வேண்டினால் அவன் அல்லாஹ்வின் பேச்சை (குர்ஆனை) செவிமடுப்பதற்காக அவனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பீராக! பின்னர், ( குர்ஆனை நம்பிக்கை கொள்ளாதிருப்பின்)
அவனை பாதுகாப்பான அவனது இடத்தில் சேர்ப்பீராக! அவர்கள் விளங்காத சமூகம் என்பதே இதற்கான காரணமாகும் (அத்தவ்பா. 09) என இடம் பெறும் வசனத்தை குறிப்பிட்டு அவனது படைப்பும் கட்டளையும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறானது என விளக்கிக் கூறியதாக இமாம் அஹ்மத் அவர்களின் வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. (அல்மிஹ்னா).

இந்தக் கருத்தை இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களுக்கு முன்னால் ஹதீஸ் கலை மேதையான அஹ்மத் இமாமின் ஆசிரியர் சுஃப்யான் பின் உயைனா அல்ஹிலாலி (ரஹ்) அவர்களும் சுட்டிக்காட்டி இருப்பது இங்கு கவனிக்கத் தக்கதாகும்.

மற்றொரு ஆதாரம்:
الرَّحْمَنُ . عَلَّمَ الْقُرْآنَ . خَلَقَ الْإِنْسَانَ …)الرحمن/ 1 – 3 )

அர்ரஹ்மான் (அல்லாஹ்) குர்ஆனைக் கற்றுக் கொடுத்தான். மனிதனைப் படைத்த அவன் பேச்சைக் கற்றுக் கொடுத்தான்.( அர்ரஹ்மான். 1-3).

இங்கு அல்லாஹ்வின் அறிவு, மற்றும் அவனது படைப்பு ஆகிய இரண்டிற்கும் இடையில் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. அல்குர்ஆன் அவனது அறிவையும் மனிதன் என்பது அவனது படைப்பையும் குறிக்கும். எனவே அவனது அறிவு என்பது படைக்கபடாததாகும்.

மேலதிக தகவல்களுக்கு
https://islamqa.info/ar/13804.

மாமேதை இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் அப்பாசிய கலீபாக்கள் மூன்று சாராரின் காலத்தில் வாழ்ந்த முக்கியமான அறிஞராகும்.

பின்வரும் அப்பாஸிய கலீஃபாக்கள் எண்மர் காலத்தில் வாழ்ந்ததாக வரலாறு குறிப்பிடுகின்றது.

முதலாம் பிரிவினர் :

அவர்களில் :
١ – *ﺍﻟﻤﻬﺪﻱ.*அல்மஹ்தி
٢ – *ﺍﻟﻬﺎﺩﻱ.*அல்ஹாதி
٣ – *ﺍﻟﺮﺷﻴﺪ*.அய்ரஷீத்
٤ – *ﺍﻷﻣﻴﻦ؛*அல் அமீன்
ஆகிய கலீஃபாக்கள் நால்வரும் அஸ்மா, ஸிஃபாத் கோட்பாட்டில் ஸலஃபு சிந்தனையாளர்கள் என அடையாளப்படுத்தப்படுகின்றனர்.

இந்த கலீஃபாக்கள் அல்குர்ஆன் ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் வஹியாகச் சொன்ன , அவனது யதார்த்தமான பேச்சாக (ஸலஃப்) முன்னோர்களின் கருத்தை சரி கண்டவர்களாகும்.

இவர்கள் காலத்தில் இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் தனது போதனைகளை முன்னெடுக்க எவ்வித தடங்கல்களும் இருந்ததில்லை.

இரண்டாவது பிரிவினர்

(2) அல்குர்ஆன் அல்லாஹ்வால் இறக்கப்பட்டதில்லை. மாறாக, அது அவனால்
படைக்கப்பட்டதாகும்; என்ற, வழிகெட்ட முஃதஸிலாக்கள் மற்றும் பகுத்தறிவு வாத கொள்கையாயர்களான

٥ – *ﺍﻟﻤﺄﻣﻮﻥ.*அல்மாமூன்
٦ *ﺍﻟﻤﻌﺘﺼﻢ.*அல்முஃதஸிம்
٧- *ﺍﻟﻮﺍﺛﻖ*அல்வாசிக்
ஆகிய நால்வர் காலம்.
இவர்கள் முஃதஸாலாக்களைச் சரிகண்டவர்கள். அதனால் அவர்களது வழிகேட்டு சிந்தனைகளை அங்கீரிக்க இமாம்களை சிறைப்பிடித்தனர் வதைத்தனர்.

(3)மூன்றாம் பிரிவு .
இமாம் அவர்கள் சொல்வதே சரி, முஃதஸிலாக்கள் கூறுவது பிழை எனக் காணும் கலீஃபா
٨ – *ﺍﻟﻤﺘﻮﻛﻞ؛*
அல்முதவக்கில் காலம்

அவர் இது போன்ற நவீன கருத்தியல் சார்ந்த பித்அத்க்களை அழித்து, அல்லாஹ்வின் தூதரின் சுன்னாவை நேசிக்கின்ற அல்முதவக்கில் என்ற கலீஃபா (அல்லாஹ் அவர்களுக்கு அருள் செய்வானாக! ) காலத்தில் தனது பிரச்சாரத்திற்கு தாராள அனுமதி அளிக்கப்பட்டதன் விளைவாக தனது பிரச்சாரத்தை தொடர்ந்தார்கள்.

குர்ஆன் தொடர்பாக மேலதிக விளக்கம்:

அல்லாஹ் அல்லாத அனைத்தும் படைக்கப்பட்டவை என்ற முஃதஸிலாக்களின் கோட்பாட்டு விதியின் அடிப்படையில் குர்ஆன் என்ற அல்லாஹ்வின் பேச்சும் படைப்புகள் போன்று படைக்கப்பட்டதாகும் என்ற தவறான முடிவில் இருந்து வந்த அப்பாஸிய கலீஃபாக்கள் முஃதஸிலாக்களை ஆதாரமாகக் கொண்டு அதுவே சரி என நம்பி வந்த போக்கை அப்பாஸிய கலீஃபா المتوكل (ரஹ்) அவர்கள் பிழையாகக் கண்டதன் காரணமாக குர்ஆன் என்பது அல்லாஹ் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் பேசிக் கூறியதால் அது ஒலி வடிவில் முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் ஓதிக்காட்டப்பட்ட
كلام الله الحقيقي
அல்லாஹ்வின் யதார்த்தமான பேச்சாகவே இறக்கியருளப்பட்டது, அவர்கள் அதனை ஓதிக்காட்டும் மோது அவர்களின் தோழர்கள் அதனை எழுதிக் கொள்வார்கள் என இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் அல்லாஹ்வின் புனித கலாமாகிய குர்ஆன் தொடர்பாக முன்வைத்த கருத்து சரியானதுதான்.

முஃதஸிலாக்களின் கருத்து பிழையானதே என்ற எண்ணப்பாடு மக்கள் மனங்களில் படரத் தொடங்கியது.

இதனால் முஃதஸிலா கொள்கை ஆதரவு என்பது அப்பாஸிய கலீஃபாக்கள் வட்டத்தில் வழக்கொழிந்து செல்லும் நிலை தோன்றியது.

குறிப்பு: அல்லாஹ்வின் பேச்சு அவனது உயர்ந்த பண்புகளில் ஒரு பண்பாகும். அவன் ஆதிமுதல் பேசி வருவது போன்று அவன் விரும்பும் போதெல்லாம் பேசுவான்.

அல்லாஹ் தான் நாடும் போதெல்லாம் அவனது கட்டளைகளைப் பிறப்பித்த வண்ணம் இருக்கின்றான்.

இவ்வாறான அல்லாஹ்வுடன் தொடர்பான செயற்பாடுகளை படைக்கப்பட்டது என கூறுவது மிகப் பெரிய தவறாகும் என்பது இமாம் அஹ்மத் அவர்களின் வாதமாகும்.

அதனால் குர்ஆனை நாம் படைக்கப்பட்ட ஒரு படைப்பாக நோக்குவது கூடாது. மாற்றமாக அதனை அவனது பண்புகளில் ஒன்று கூறப்படும்.
இந்த விளக்கத்தின் அடிப்படையில் குர்ஆன் மீது சத்தியம் செய்யலாம் எனக் கூறப்பட்டாலும் அல்லாஹ்வின் மீது சத்தியமாக எனக் கூறுவதே சிறந்ததாகும்.ஆனால் ஒருவர் அல்லாஹ்வின் பண்பான குர்ஆன் மீது சத்தியமாக எனக் கூறுவதை பிழையாகச் சொல்ல முடியாது என்பது அறிஞர்களின் விளக்கமாகும்.

தலைப்பாகை சுத்திய மௌலவிகள், தென்னிந்திய அண்ணன், தம்பிகளிடம் குர்ஆன் தொடர்பாக முஃதஸிலாக்களின் இந்த நிலைப்பாடு காணப்படுவதாலேயே அல்லாஹ்வின் பண்பாகிய
குர்ஆன் மீது சத்தியம் செய்தல் என்பதை பாவமாக சில போது குஃப்ராக பார்க்கின்றனர்..

மேற்படி கருத்துக் குழப்பம் ஏற்பட வழிகோலிய காரணிகள்:

முஃதஸிலாக்களின் இந்த குழப்பங்களின் பின்னணியாக பின்வரும் காரணிகள் கண்டறியப்படுகின்றன.

குழப்பங்களுக்கான முக்கிய காரணிகள்.

((1))இந்திய, மற்றும் ரோம், பாரஸீக , கிரேக்க நூல்களை அரபி மொழியில் மொழியாக்கம் செய்தமை.

((2))நவீனத்துவம் என்ற பெயரில் ஷரீஆ அங்கீகரிக்காத புதியவைகளை தோற்றுவிப்போரை கலீஃபா மஃமூன் நெருக்கமாக்கியமை, தனக்கு ஆலோசகர்களாக எடுத்துக் கொண்டமை. இந்தக் குழப்பத்தை ஆரம்பித்ததவரும் அவரே என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயமாகும்.

குர்ஆன் படைக்கப்பட்டது என்ற சிந்தனை சூத்திரதாரி:
ﺃﺣﻤﺪ ﺑﻦ ﺃﺑﻲ ﺩُﺅَﺍد

அஹ்மத் பின் அபீ துஆத் என்ற முத்திய முஃதஸிலா.

இந்தக் குழப்பம் ஹிஜ்ரி 218 ல் ஆரம்பமாகி உள்ளது என்றால் இதற்கு முன்னர் இவ்வாறான புரழிகள் காணப்பட்டதில்லை என்பதே உண்மை.

மேற்படி பித்அத்தை சரிகாணாதோருக்கான அரச தண்டனை.
அறிஞர்களை சிறைப்படித்து அவர்கள் மீது மன அழுத்தங்களை உருவாக்குதல், அதில் இருந்து வாபஸ் பெறுமாறு அழுத்தம் கொடுத்தல்

சாட்டைஅடி, சவுக்கடி

பதவி நீக்கம் செய்து, அரச நிதியமான பைத்துல் மாலின் மூலமான கொடுப்பனவை முழுமையாக நிறுத்துதல். இதன் மூலம் அவர்களின் வாழ்வாதரங்களைப் பாதிப்டையச் செய்யும் மூல அபாயங்களை வகுத்தனர்.

மேற்படி சோதனையில் சிக்கிக் கொண்ட இமாம்கள்:

இந்தக் குழப்பமும் சோதனையும் தலைவிரித்தாடிய போது வாளுக்கு அஞ்சி பின்வரும் பிரபல்யங்கள் குர்ஆன் படைக்கப்பட்டது என்ற வழிகேட்டை வெளியில் சரிகண்டவர்களாகப் பேசப்படுகின்றனர்.
அவர்கள் விபரம் பின்வருமாறு:
١ – *ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺳﻌﺪ؛ ﻛﺎﺗﺐ ﺍﻟﻮﺍﻗﺪﻱ*.
٢ – *ﻳﺤﻴﻰ ﺑﻦ ﻣﻌﻴﻦ*.
٣ – *ﺃﺑﻮ ﺧﻴﺜﻤﺔ*.
٤ – *ﺃﺑﻮ ﻣﺴﻠﻢ ﺍﻟﻤﺴﺘﻤﻠﻲ*.
٥ – *ﺇﺳﻤﺎﻋﻴﻞ ﺑﻦ ﺩﺍﻭﺩ ﺍﻟﺠﻮﺯﻱ*.
٦ – *ﺃﺣﻤﺪ ﺍﻟﺪﻭﺭﻗﻲ*.
٧ – *ﺍﺑﻦ ﺃﺑﻲ ﻣﺴﻌﻮﺩ؛*
” *ﻭﻫﺆﻻﺀ ﺃﺟﺎﺑﻮﺍ ﺧﻮﻓﺎً ﻣﻦ ﺍﻟﺴﻴﻒ، ﻏﻔﺮ ﺍﻟﻠّٰﻪ ﻟﻬﻢ* “.
அல்லாஹ் அவர்களை மன்னிப்பானாக!

இவர்கள் பற்றி இமாம் அஹ்மத் ரஹ் அவர்கள்:
ﻫﺆﻻﺀ ﻟﻮ ﻛﺎﻧﻮﺍ ﺻﺒﺮﻭﺍ ﻭﻗﺎﻣﻮﺍ ﻟﻠّٰﻪ ﻟﻜﺎﻥ ﺍﻷﻣﺮ ﻗﺪ ﺍﻧﻘﻄﻊ، ﻭﺣﺬِﺭَﻫﻢ ﺍﻟﺮﺟﻞ -ﻳﻌﻨﻲ: ﺍﻟﻤﺄﻣﻮﻥ-، ﻭﻟﻜﻦ ﻟﻤﺎ ﺃﺟﺎﺑﻮﺍ -ﻭﻫﻢ ﻋﻴﻦ ﺍﻟﺒﻠﺪ- ﺍﺟﺘﺮﺃ ﻋﻠﻰ ﻏﻴﺮﻫﻢ…ﻫﻢ ﺃﻭﻝ ﻣﻦ ﺛﻠﻢ ﻫﺬﻩ ﺍﻟﺜُّﻠﻤﺔ، ﻭﺃﻓﺴﺪ ﻫﺬﺍ ﺍﻷﻣﺮ* “.
இவர்கள் பொறுமையாக இருந்து, அல்லாஹ்வுக்காக தமது உறுதியாக இருந்திருப்பின் இந்த விவகாரம் முடிவுக்கு வந்திருக்கும். மஃமூன் இவர்களைப் பயமுறுத்தி போது இப்பிராந்தியத்தின் முக்கியஸ்தராகளான இந்த அறிஞர்கள் அதற்கு தலையாட்டியதால் சாதாரண பொதுமக்கள் மீது அவன் தனது கைவரிசையைக் காட்ட எளிதாகிப் போனது . இவர்கள் தாம் இந்த பிரச்சனை முத்தவும், குழப்பம் பரவும் காரணமாகவர்களாகக் காணப்பட்டனர் எனக் கூறினார்கள். இமாம் அஹ்மத் அவர்களோடு சிறைப் பிடிக்கப்பட்ட அறிஞர்கள்.
٨ – *ﺍﻹﻣﺎﻡ ﺃﺣﻤﺪ ﺑﻦ ﺣﻨﺒﻞ*.
٩ – *ﻣﺤﻤﺪ ﺑﻦ ﻧﻮﺡ*.
١٠ – *ﻋﺒﻴﺪ ﺍﻟﻠّٰﻪ ﺑﻦ ﻋﻤﺮ ﺍﻟﻘﻮﺍﺭﻳﺮﻱ*.
١١ – *ﺍﻟﺤﺴﻦ ﺑﻦ ﺣﻤﺎﺩ ﺳﺠَّﺎﺩﺓ؛*
இவர்களில் இமாம் கவாரீரி, மற்றும் ஸஜ்ஜாதா ஆகிய இருவரும் சிறையில் தாக்குப் பிடிக்க முடியாது வெளிப்படையில் பதில் அளித்திருந்தனர் என்பது வரலாறு.

இமாம் முஹம்மத் பின் நூஹ் இமாம் அஹ்மத் ரஹ் ஆகிய இருவரும் கடைசிவரை சிறையில் காலம் கழித்தாலும் இமாம் முஹம்மத் பின் நூஹ் (ரஹ்) அவர்கள் ஒரு நாள் சிறையில் இருந்து மஃமூனிடம் எடுத்துச் செல்லும் வழியில் மரணித்தார்கள். அவர் மீது இமாம் அஹ்மத் அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தி விட்டுச் செல்லும் வழியில் “யா அல்லாஹ் எனக்கு மஃமூனுடைய முகத்தைக் காண்பிக்காதே” என்று பிரார்த்தனை செய்து கொண்டு சென்றார்கள். அங்கு அவர்கள் சென்றடையும் முன் மஃமூனின் மரணச் செய்தி அவர்களை வந்தடைந்தது.அதனால் அவர்கள் மீண்டும் பக்தாத் சிறைக்கு மீட்டப்பட்டார்கள்.

மஃமூனின் மரணத்தின் பின்னால்:

ஹிஜ்ரி 218 அல்முஃதஸிம் புதிய கலீஃபாவாக பதவியேற்ற பின் நிலைமை இன்னும் மோசமடைந்தது. அவனது ஆட்சியில் இமாம் அவர்களின் இருகரங்களும் செயலிழந்து விடும் அளவு கடுமையாக அடிக்கப்பட்டார்கள்.

நான் தினமும் எண்பது தடவைகள் அஹ்மதைக் கடுமையாக அடித்தேன். அவர் பட்ட அடியை ஒரு யானைக்கு நீ அடித்தால் அதுவும் மாண்டுவிடும் என அவர்களைத் தண்டித்த கொடிய விஷமி குறிப்பிடுகின்றான். இவ்வாறு 28 மாதங்கள் தொடராகத் துன்புறுத்தப்பட்ட இமாம் அவர்கள் ஹிஜ்ரி 221 ல் சிறையில் இரண்டு வருடமும் நான்கு மாதங்களும் கழித்த பின் அங்கிருந்து விடுதலை செய்யப்பட்டார்கள் . அடிக் காயங்கள் தழும்புகளில் இருந்து அல்லாஹ்வின் அருளால் குணைமடைந்ததும் மீண்டும் பாடங்கள் நடத்துவதைத் தொடர்ந்தார்கள் . அல்முஃதஸிம் ஹிஜ்ரி 227 ல் மரணித்தார். அவருக்குப் பின்னால் ஆட்சிக்கு வந்த அல்வாஸிக் ஹிஜ்ரி 231 ல்
இமாம் அவர்கள் பாடம் நடத்த தடை விதித்தார். அவரும் ஹிஜ்ரி 233 ல் மரணித்த பின் ஆட்சியில் அமர்ந்த அல்முதவக்கில் சுன்னா வழியை உயிர்பித்தார். பித்ஆ சிந்தனைகளை புதைகுழிக்குள் போட்டுப் புதைத்தார் என வரலாறு குறிப்பிடுகின்றது.

الحمد لله بنعمته تتم الصالحات

உசாத்துணைகள் :
https://islamqa.info/ar/13804
www. Saaid.net

محنة الإمام أحمد بن حنبل
للعلامة/ صالح بن فوزان الفوزان -حفظه اللّٰه تعالى.

Check Also

தனிநபர் வழிபாட்டை இட்டுச் செல்லும் கண்மூடித்தனமான நம்பிக்கைகள் !!

தனிநபர் வழிபாட்டை இட்டுச் செல்லும் கண்மூடித்தனமான நம்பிக்கைகள் !! —————————————————————————————————————————————- அரசியல் வாதிகள் முதல் பாமர குடிமக்கள் வரை அனைவரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *