وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ ۖ وَبِئْسَ الْمَصِيرُ ﴿٦﴾
(தனது இறைவனை மறுத்தோருக்கு நரகத்தின் வேதனை உள்ளது. (அது) கெட்ட தங்குமிடம்). அல்முல்க் – 6
அவர்கள் மீலுமிடம் (செல்லுமிடம்), மிகக் கெட்டதாகும். காரணம், அல்லாஹ்வை நிராகரிப்பது குற்றங்களில் மிகப் பெரியது.
إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ ﴿٧﴾
(அதில் அவர்கள் போடப்படும் போது அது கொதித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதனிடமிருந்து கழுதையின் கத்துதலைச் செவியுறுவார்கள்). அல்முல்க் – 7
இந்த வசனத்துக்கு இப்னு ஜரீர் (ரஹ்) விளக்கம் கூறுகின்ற போது:
அது பெரிய சப்தமாகும் எனக் கூறுகிறார்கள்.
(அது கொதித்துக் கொண்டிருக்கும்).
தவ்ரி (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அதிகமான நீரில் குறைந்த வித்துக்கள் எவ்வாறு கொதிக்குமோ அவ்வாறு கொதிப்பார்கள்.
تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ ۖ كُلَّمَا أُلْقِيَ فِيهَا فَوْجٌ سَأَلَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌ ﴿٨﴾
(கோபத்தால் அது வெடித்துவிட முற்படும். ஒவ்வொரு கூட்டத்தினரும் அதில் போடப்படும் போதெல்லாம் எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா? என்று அதன் காவலர்கள் அவர்களிடம்; கேட்பார்கள்).
அல்முல்க்- 8
அவர்கள் மீதுள்ள கடும் கோபம் காரணமாக சிலது மற்றும் சிலதை விட்டும் அகன்றுவிட முற்படும். நரகம் அதில் நுழைபவர்களுடன் கோபமாக இருக்கும். மேலும், அவர்களை பிடித்து பழிக்குப்பழி வாங்கும். ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தார்கள். மேலும் அவன் மீது பழிசுமத்தி அவனது கட்டளைகளை எடுத்து நடக்காது விலக்கல்களைச்
செய்து கொண்டிருந்தார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்:
(அளவற்ற அருளாளன் பிள்ளையை ஏற்படுத்திக் கொண்டான் என்று அவர்கள் கூறுகின்றனர். அபாண்டத்தையே கொண்டு வந்துவிட்டீர்கள். அளவற்ற அருளாளனுக்கு பிள்ளை இருப்பதாக அவர்கள் வாதிடுவதால் வானங்கள் வெடித்து, பூமி பிளந்து மலைகள் நொறுங்கி விடப்பார்க்கின்றன. பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளும் அவசியம் அளவற்ற அருளாளனுக்கு இல்லை). அல் மர்யம் – 88-92.
நரகம் படைக்கப்பட்டுள்ளது. அது இணை கற்பிப்பவர்களுடன் கடுமையாக நடந்துகொள்ளும் என்பதை இன்னும் பல வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்;.
உதாரணமாக:
(நரகம் அவர்களை தொலைவான இடத்தில் காணும் போதே அதன் கொந்தளிப்பையும், இரைச்சலையும் அவர்கள் செவியுறுவார்கள்).
அல் ஃபுர்கான் – 12.
தொடரும்…