بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
“சிறிய ஹதீஸ்கள் மனனம் செய்வதற்காக” – ஹதிஸ் எண் 5
عَنْ حُذَيْفَةَ رَضِيَ اللهُ عَنْه قَالَ:
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
” لا يَدْخُلُ الْجَنَّةَ نَمَّامٌ “
(صحيح مسلم 168)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“கோள் சொல்லித் திரிபவன் சுவனம் நுழைய மாட்டான்”
அறிவிப்பவர் : ஹுதைபா (ரலி). ஆதாரம் : முஸ்லிம் 168.
ஹதீஸ் வார்த்தைக்கு வார்த்தை…
لا يَدْخُلُ
|
الْجَنَّةَ
|
نَمَّامٌ
|
நுழைய மாட்டான்
|
சுவனம்
|
கோள் சொல்லித் திரிபவன்
|
ஹதிஸ் அறிவிப்பாளர்:
ஹுதைபா பின் யமான் (ரலி) அவர்கள் நபிகளாரின் அந்தரங்கச் செயலாளர் என்று அழைக்கப்பட்டவர், இஸ்லாமிய யுத்தங்களில் பெரும் பங்காற்றியவர், நபிகளாரைத் தொட்டும் 255 ஹதீஸ்களை அறிவித்தவர், ஹிஜ்ரி 36ம் ஆண்டு ஈராக்கில் இறையடி சேர்ந்தார்கள்.
ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
1) கோள் சொல்வது மக்களுக்கு மத்தியில் விரோதத்தை உண்டு பண்ணக்கூடிய ஒரு இழிவான பண்பாகும்.
2) கோள் சொல்வது சமூகத்தில் கலக்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும்.
3) கோள் சொல்வதை அனுமதிக்கப்பட்டதாக நினைத்து கோள் சொல்லித் திரிபவன் சுவனம் நுழைய மாட்டான்.