Home / Classes (e-learning) / Dr. Abdur Rahim - இலக்கண பாடம் / Dr. Abdur Rahim – நான்காவது பாடம்الدَّرْسُ الرَّابِعُ –

Dr. Abdur Rahim – நான்காவது பாடம்الدَّرْسُ الرَّابِعُ –


நான்காவது பாடம்الدَّرْسُ الرَّابِعُ
 ( أ)
الْبَيْتُ : فِي الْبَيْتِ          الْمَسْجِدُ : فِي الْمَسْجِدِ
الْمَكْتَبُ : عَلَى الْمَكْتَبِ       السَّرِيْرُ : عَلَى السَّرِيْرِ
(ب)
  முஹம்மத் எங்கே?أَيْنَ مَحَمَّدٌ؟                                        
 அவன் அறையில் இருக்கிறான்             هُوَ فِي الْغُرْفَةِ
மேலும் யாஸிர் எங்கே?                              وَأَيْنَ يَاسِرٌ؟
அவன் கழிவறையில் இருக்கிறன்          هُوَ فِي الْحَمَّامِ
மேலும் ஆமினா எங்கே?                 وَأَيْنَ آمِنَةُ؟
அவள் சமையலறையில் இருக்கிறாள்           هِيَ فِي الْمَطْبَخِ
புத்தகம் எங்கே?                                    وَأَيْنَ الْكِتَابُ؟
அது மேஜையின் மீது இருக்கிறது.              هُوَ عَلَى الْمَكْتَبِ
மேலும் கடிகாரம் எங்கே?                          وَأَيْنَ السَّاعَةُ؟
அது கட்டிலின் மீது இருக்கிறது.هِيَ عَلَى السَّرِيْر                 ِ
  فِيالْبَيْتِ الْبَيْتُ 
مَرْفُوْعٌ ஆக இருக்கும் الْبَيْتُ வை   فِيவந்து  مَجْرُوْرٌஆக மாற்றி விட்டது (.(حَرْفُ الْجَرِّ) في.  ஜர்ரு செய்யும் எழுத்து எனப்படும்.
ஜர்ருடைய எழுத்துக்கள் வந்தால் அதை பின்தொடரும் اِسْمٌ  مَجْرُوْرٌ ஆக மாற்றி விடும்.
حَرْفُ الْجَرِّ+ اِسْمٌ مَجْرُوْرٌ = جَارٌّ وَ مَجْرُوْرٌ
   ஐ  اِسْمٌ      حَرْفُ الْجَرّ வந்து   مَجْرُوْرٌ ஆக்கியதால் இதற்கு جَارٌّ وَ مَجْرُوْرٌ என்று பெயர்
எங்கே? أَيْنَ؟
முஹம்மத் எங்கே?         أَيْنَ  مُحَمَّدٌ؟
அவன் அறையில் இருக்கிறன்    هُوَ فِي الْغُرْفَةِ
பிரதி பெயர்ச்சொல் – ضَمِيْرٌ :
ஒரு மனிதரை முஹம்மது  வந்தார் , முஹம்மது உட்கார்ந்தார், முஹம்மது டீ குடித்தார் என வரிக்கு வரி பெயர் சொல்லி அழைக்க இயலாததால், முஹம்மது வந்தார் , அவர்  உட்கார்ந்தார், அவர்  டீ குடித்தார் என்று சொல்லுவோம். மீண்டும் மீண்டும் பெயரை உபயோகிப்பதற்கு பதிலாக ‘அவர்’ என்ற சொல் உபயோகிக்கப்பட்டதால் இது பிரதிப் பெயர்ச்சொல் எனப்படும். இங்கு அவர் என்றால் முஹம்மது என்றே பொருள் கொள்ளபடுகிறது.
        பிரதிப் பெயர்ச்சொல் ضَمِيْرٌ இரண்டு வகைப்படும். ஒன்று தனித்து வரக்கூடியது   ضَمِيرٌ مُنْفَصِلٌ . மற்றொன்று  சேர்ந்து வரக்கூடியது    ضَمِيْرٌ مُتَّصِلٌ 
 ضَمِيْرٌ مُنْفَصِلٌ அனைத்தும் مَرْفُوْعٌ.
         அரபியில் வேர்ச்சொற்கள் எது என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. சில அறிஞர்களின் கருத்துப்படி அரபியில் வேர்ச்சொற்கள் நான்கு விஷயங்களைக் கொண்டதாக இருக்கும். غاَءِبٌ     படர்க்கையாக இருக்கும், مُذَكَّرٌ ஆண்பாலாக இருக்கும்,مُفْرَدٌ  ஒருமையாக இருக்கும்,  الْمَاضِகடந்த காலமாக இருக்கும்.
ضَمِيْرٌ منْفَصِلٌ 
مُتَكَلِّمٌ –தன்னிலை
1st person
مُخاطبٌ –முன்னிலை
2nd person
غاَءِبٌ     –படர்க்கை
3rd person
مُذَكَّرٌ / مُؤَنَّثٌ
ஆண்பால் / பெண்பால்
مُؤَنَّثٌ
பெண்பால்
مُذَكَّرٌ
ஆண்பால்
مُؤَنَّثٌ
பெண்பால்
مُذَكَّرٌ
ஆண்பால்
اَنَا
நான்
اَنْتِ
நீ
اَنْتَ
 நீ
هِىَ
அவள்
هُوَ
அவன்
اَنْتُمَا
நீங்கள் இருவர்
اَنْتُمَا
நீங்கள் இருவர்
هُمَا
அவர்கள் இருவர்
هُمَا
அவர்கள்இருவர்
نَحْنُ
நாங்கள்
اَنْتُنَّ
நீங்கள் பலர்
اَنْتُمْ
நீங்கள் பலர்
هُنَّ
அவர்கள் பலர்
هُمْ
அவர்கள்பலர்
  
ஆகவே ஆண்பால், படர்க்கை, ஒருமை என்பதை இந்தهُوَகுறிக்கும்.
خَبَرٌ
        இங்கு هُوَஎன்று அவனைப்  பற்றி சொல்ல வந்த செய்தி ِفِي الْغُرْفَة  அதாவது அவன் அறையில் இருக்கிறான் என்பதாகும். இங்கு فِي الغُرْفَةِஎன்றால் “அவன் அறையில்” என்று அர்த்தம். “அறையில் இருக்கிறான்” என்று கூறியிருந்தால் வாக்கியம் முழுமை பெற்றிருக்கும். அனால் அறையில் என்று கூறியதால் இது முடிவுறா வாக்கியமாக இருக்கிறது. இவ்வாறு ஒன்றுக்கும் மேற்பட்ட வார்த்தைகள்  இணைந்து அந்த வாக்கியம் முழுமை அடையவில்லை என்றால் அது முடிவுறா வாக்கியம் (phrase),
முடிவுறா வாக்கியம்  شِبْهُ الْجُمْلَةِஎனப்படும்.
        முழுமையாக பொருள் தரும் வாக்கியத்தை  جُمْلَةٌஎனவும், முடிவுறா வாக்கியத்தை شِبْهُ الْجُمْلَةِ  எனவும் சொல்லப்படும்.
هُوَ فِي الْغُرْفَةِ
இங்கு هُوَمُبْتَدَأ,    فِيحَرْفُ الْجَرِّالْغُرْفَةِاِسْمٌ مَجْرُوْرٌ,
فِي الْغُرْفَةِ – جَارٌّ وَ مَجْرُوْرٌ شِبْهُ الجُمْلَةِ خَبَرٌ   .
خَبَرٌ ஐந்து வகைப்படும்.
1.ஒரு வார்த்தையாக ,مَرْفُوْعٌ ஆக இருக்கும்,
2.جَارٌّ وَ مَجْرُوْرٌ شِبْهُ الجُمْلَةِ جُمْلَةِ خَبَرٌ   
3. ظَرَفٌ شِبْهُ الجُمْلَةِ خَبَرٌ   
 4. الْجُمْلَةُ الْاِسْمِيَّةُ خَبَر 
5. الْجُمْلَةُ الْفِعْلِيَّة خَبَرٌ 
وَ اَيْنَ السَّاعَةُ ؟           هِىَ عَلَى المَكْتَبِ
அரபியில் உயிருள்ள, உயிரற்ற, உயர்திணை, அஃறினை அனைத்துப் பொருட்களும், ஆண்பாலில் அல்லது பெண்பாலில் தான் இருக்கும். இங்கு      (التَاءُ مَرْبُوطَة) “ة”  السَّاعَةُ     வில் முடிவதால். அது பெண்பாலின் அடையாளம் ஆகும். அனைத்து பெண்பாலும்التَاءُ مَرْبُوطَة    முடியும் என எடுத்து கொள்ள கூடாது. ஆண்பாலும் சில சமயங்களில்  التَاءُ مَرْبُوطَة  வைக் கொண்டு முடியும்.  حَمْزَةُ  ,  مُعَاوِيَةُأُسَامَةُ
பயிற்சி:
1. பாடத்தில் உள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்.
2. கடைசி எழுத்தை சரியாக எழுதி பழகவும்.
3. எழுதி படித்து பழகவும்
Pg no: 23
இங்கு ஆண்கள் பெயர் அனைத்தும்,  تَنْوِيْنٌகொண்டு முடிகிறது. பெண்கள் பெயர் அனைத்தும் تَنْوِيْنٌ இல்லாமல் இருக்கிறது. பெண்கள் பெயர்களுக்கு تَنْوِيْنٌ வராது. இதைப்பற்றி விரிவாக இந்த புத்தகத்தின் கடைசியில் படிக்க இருப்பதால்  சுருக்கமாக இங்கு பார்ப்போம். ஆண்கள் பெயர்கள்مَرْفُوْعٌ , مَنْصُوْبٌ ,مَجْرُوْرٌ ஆக வரும் என நாம் அறிந்ததே.
مُحَمَّدٌ – مَرْفُوْعٌ            مَنْصُوْبٌ  –   مُحَمَّدً                 مَجْرُوْرٌ  –  مُحَمَّدٍ
 பெண்கள் பெயரைப் பொருத்தவரை
مَرْفُوْعٌفَاطِمَةُ       مَنْصُوْبٌفَاطِمَةَ           مَجْرُوْرٌفَاطِمَةَ
 பெண்கள் பெயர்களுக்கு  مَجْرُوْرٌல் கடைசி எழுத்துக்கு كَسْرَةٌக்கு பகரமாக فَتْحَةٌதான் வரும்.
இங்கு நாம்  التَاءُ مَرْبُوطَة    முடியாத பெண்கள் பெயரையும் பார்க்கலாம்
பயிற்சி:
கீழ்க்கண்ட பெயர்களின் கடைசி எழுத்தை சரியாக உச்சரிக்கவும்:

Check Also

Muharram

https://www.qurankalvi.com/category/islamic-months/muharram/

4 comments

  1. Mohamed Abusamhu M.Ibrahim

    Alhamdulillah nalla padam

  2. alhamdhulilla edai poota ungal allorukum naan dua saikeran

  3. Indha paadathil pizhai irukiradhu…
    Adhu mejayin meedhu ulladhu nu soldradhuku yen huva sollirkinga? huva endral avan endru thanae artham?
    Adhu enbadharku dhaalika thanae sollanum?

Leave a Reply to Mohamed Abusamhu M.Ibrahim Cancel reply