Home / Islamic Months / Haj / Umrah / Sacrifice / ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர் – 5

ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர் – 5

முடியை முழுமையாக மழிப்பது அல்லது குறைத்துக் கொள்வது இதில் ஏற்படும் தவறுகள்:

1. தலையின் நடுப்பபகுதி மற்றும் அதன் ஓரங்களில் ஆங்காங்கே மிகக் குறைவாக முடிகளை அகற்றுவது இது மிகப்பெரும் தவறு என்பதை அதிகமானவர்கள் அறியாமலேயே இருக்கிறார்கள். இவ்வாறு செய்வதனால் அவர் இஹ்ராமிலிருந்து விடுபட்டவராக கருத்தப்படமாட்டார். ஆண்கள் குறைப்பதாக இருந்தால் முழுமையாக குறைக்க வேண்டும் மழிப்பதாக இருந்தால் முழுமையாக மழிக்க வேண்டும். மழிப்பதே மிகச் சிறந்தது அவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை பிரார்த்தனை செய்துள்ளார்கள். (ஹஜ்ஜின் வகைகளை பொறுத்து இச்சட்டம் மாறுபடும் ) ஹஜ்ஜத்துல் விதாவில் நபி (ஸல்) அவர்கள் முடியை மழித்தவர்களுக்காக மூன்று முறை பிரார்த்தனை செய்துள்ளார்கள். முடியை குறைத்துக் கொண்டவர்களுக்காக ஒரு முறை பிரார்த்தனை செய்துள்ளார்கள். நூல் :முஸ்லிம் 3150

2.மேலே கூறப்பட்ட இத்தவறை செய்பவர்கள் இஹ்ராமிலிருக்கும் நிலையில் முடியை வெட்டிய குற்றத்திற்கு ஆளாகிறார்கள் இதற்காக அவர்கள் ஒரு ஆட்டை பலி கொடுக்க வேண்டும். அதன் இறைச்சி மக்காவிலுள்ள ஏழைகளுக்கு பங்கிடப்பட வேண்டும். அதிலிருந்து இவர் எதையும் உண்ணகூடாது.

3. பெண்ணாக இருப்பின் அனைத்து முடிகளையும் சேர்த்து ஒரு இன்ச் குறைத்துக் கொள்ள வேண்டும். இன்ஷா அல்லாஹ் இது பெண்களுக்கு போதுமானதாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பெண்களுக்கு மொட்டை அடிப்பது என்பது இல்லை . பெண்கள் குறைத்துக் கொள்ளவேண்டும். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) , நூல்:அபூதாவூத் 1985

4. தலை முடியை மழிக்கும் போது சிலர் தாடியையும் சேர்த்து மழிக்கின்றனர். தாடியை வளர விடுங்கள் என்ற நபி அவர்களின் வழிமுறைக்கு நேர் முரணானதும். மிகப்பெரிய குற்றமும் ஆகும்.

5. ஹஜ்ஜின் வகைகளை பொறுத்து இச்சட்டம் மாறுபடும்…

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

Check Also

ஹஜ்ஜை முடித்த ஹாஜிகளுக்கு சில உபதேசங்கள் | Assheikh Azhar Yousuf Seelani |

ஹஜ்ஜை முடித்த ஹாஜிகளுக்கு சில உபதேசங்கள் உரை: அஷ்ஷைக் அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி Subscribe to our Youtube Channel …

Leave a Reply