Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 11

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 11

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் 

பாகம் – 11

மத்தன் ரீதியாக ஒரு ஹதீஸை  (موضوع) இட்டுக்கட்டப்பட்டது என்று அறிவிப்பதற்கான காரணிகள் :-

 

1. அந்த வார்த்தையை கண்டால் அது நபி (ஸல்) அவர்களின் வார்த்தையல்ல என்று கண்டறிய முடியும்.

2. அறிவுக்கு பொருந்தாத விஷயங்களாக இருக்கும்.

 

உதாரணம்:-

அல்லாஹ் குதிரையை படைத்தான் குதிரையை ஓட விட்டான் பிறகு அதன் வியர்வையால் தன்னை படைத்தான்.

🍃 இமாம் இப்னுல் ஜவ்ஸீ ( ரஹ்) கூறுகிறார்கள்  (موضوع) ஆன ஹதீஸுகளை 3 அடிப்படையில் அணுக வேண்டும்.

❖ குர்ஆனுக்கு முரண்படுகிறதா என்று பார்க்க வேண்டும்.

 ஸஹீஹான  ஹதீஸுக்கு முரண்படுகிறதா என்று பார்க்க வேண்டும்.

 அறிவுக்கு முரண்படுகிறதா என்று பார்க்க வேண்டும்.

 

3. குர்ஆனுக்கு நேரடியாக முரண்படக்கூடியதாக இருக்கும்

 

உதாரணம் :

நபி ( ஸல்) – நான் என் மீது சத்தியமிட்டு கூறுகின்றேன் எவருடைய பெயர் முஹம்மது, அஹமத் என்று இருக்கிறதோ அவர் நரகத்திற்கு செல்லவே மாட்டார்.

 

4. வரலாற்று நிகழ்வுகளுக்கு முரணாக இருக்கும்.

 

உதாரணம்:

கைபர் யுத்தம் நடந்தபோது அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஜிஸ்யா கடமையாக்கினார்கள்.

🍃 முஆவியா இப்னு அபூசுஃபியான் (ரலி) அவர்கள் ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்களை சாட்சியாக வைத்து தான் கடிதம் எழுதினார்கள் என்று இடம்பெறுகிறது.

🍃 ஆனால் ஸஅத் இப்னு முஆத் (ரலி) கைபர் யுத்தம் நடப்பதற்கு முன்னரே கந்தக் யுத்தத்தின் சிறிது காலத்திலேயே இறந்து விட்டார்கள்.

🍃 மேலும் முஆவியா இப்னு அபூசுஃபியான் (ரலி)அவர்கள் மக்கா வெற்றிக்கு பின்னால் தான் இஸ்லாத்தை தழுவினார்கள்.

ஆகவே இந்த அறிவிப்பு வரலாற்றுக்கு முரணாக இருக்கிறது.

 

5. அறிவுக்கு எட்டாத அளவுக்கு அளவில்லா நன்மையை கூறக்கூடியதாக இருக்கும்.

 

உதாரணம் :-

🍃 யார் லுஹா தொழுகையை தொழுகிறாரோ அவருக்கு 70 நபிமார்களின் நன்மை கொடுக்கப்படும்.

🍃  யார் லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறுகிறாரோ அப்போது அல்லாஹ் ஒரு பறவையை  படைப்பின் அதற்கு 70,000 நாவு இருக்கும் ஒவ்வொரு நாவும் 1000 மொழி பேசக்கூடியதாக இருக்கும்.

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 4

ஃபிக்ஹ் பாகம் – 4 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ வித்ரு எத்தனை ரக்காஅத்? ஆயிஷா (ரலி) …

Leave a Reply