Home / கட்டுரை (page 5)

கட்டுரை

பித்அத் தவிர்ப்போம்!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலஃபி) “அஹ்லுஸ் ஸுன்னா”, “பிர்கதுன்னாஜியா” (வெற்றி பெற்ற பிரிவினர்), அத்தாயிபதுல் மன்ஸூரா (உதவி செய்யப்படும் குழுவினர்) என்றெல்லாம் சிறப்பித்துக் கூறப்படும் சுவனம் செல்லும் பிரிவினரின் பண்புகளில் பித்அத்தை விட்டும் விலகியிருப்பதும் ஒன்றாகும். பித்அத்தைத் தவிர்ப்பதும், அதை எதிர்ப்பதும் அஹ்லுஸ் ஸுன்னாவின் பண்பாகும். பித்அத்: “பித்அத்” என்பது ஓர் அறபுப் பதமாகும். “பதஅ” என்ற வினைச் சொல்லிலிருந்து இது உருவானதாகும். புதியது, முன்னுதாரணமின்றித் தோற்றுவிக்கப்பட்டது என்பன இதன் …

Read More »

அல்லாஹ்வின் கருணையைத் தேடித்தரக்கூடிய செயல்கள்…..

அபூ ஹுனைப் ஹிஷாம் (மதனி) بسم الله الرحمن الرحيم அல்லாஹ்வின் கருணையைத் தேடித்தரக்கூடிய செயல்கள் பல உள்ளன. அவற்றை நாம் கண்டறிந்து செயற்படுவோமென்றால் அவனின் கருணை நிச்சயமாக எங்களையும் வந்தடையும். அந்தவிதத்தில் அல்லாஹ்வின் கருணையைத் தேடித்தரக்கூடிய சில செயல்களை இங்கு நாம் இனங்காட்டுகின்றோம். 01. படைப்பினங்கள் மீது கருணை காட்டல். அல்லாஹ்வின் படைப்புகள் மீது கருணை காட்டுவது அவனின் கருணையை எமக்குத் தேடித்தரும். நபியவர்கள் கூறினார்கள்: “பூமியில் உள்ளவர்களுக்கு …

Read More »

அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும்

_அஸ்கி இப்னு ஷம்சிலாபிதீன் முன்னுரை அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். அவனுக்கே உயர்ந்த பண்புகள் உள்ளன. அவனுக்கு ஒப்பானவன் யாருமில்லை. அவனுடைய பண்புகளை எமக்கு எத்திவைத்த எம் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தன்னுடைய இறைவன், நபி, மார்க்கம் ஆகியவைகளைப்பற்றித் தெரிந்து கொள்வது கட்டாயக் கடமையாகும். அல்லாஹ்வைப்பற்றித் தெரிந்து கொள்ளும்போது கட்டாயம் அவனுடைய பெயர்களையும் பண்புகளையும் தெரிந்து …

Read More »

நபி(ஸல்) அவர்கள் சிரித்த சந்தர்ப்பங்கள்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலஃபி) “சிரிப்பு” என்பது அல்லாஹ் மனிதனுக்கு மட்டுமே வழங்கிய ஒரு அருட்கொடையாகும். சிரிக்கத் தெரியாத மனிதன் வாழ்வை இரசிக்கத் தெரியாதவன். பிறரின் மனதைக் குளிரச் செய்யத் தெரியாதவன். அன்பையும், அரவணைப்பையும், கூட்டு வாழ்வையும், நட்பையும் புரிந்துகொள்ளத் தெரியாதவன். மனித வாழ்வில் “சிரிப்பு” என்பது மிக மிக முக்கியம். குறைந்த பட்சம் அடுத்தவரைக் காணும் போது ஒரு புன்முறுவலையாவது வெளிப்படுத்தாத மனிதன் மனிதனேயல்ல. உன் சகோதரனைச் சிரித்த …

Read More »

இக்வான்களின் முன்மாதிரிகள் ஷீயாக்களே…

மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் இஸ்லாமிய ஆட்சி பற்றிப் பேசிவரும் அமைப்புக்கள் விட்ட மிகப் பெரும் தவறுகளில் ஒன்றுதான் இஸ்லாமிய ஆட்சிக் கோஷத்தைக் கையிலெடுத்துக் கொண்டவர்களையெல்லாம் ஆதரிக்க முற்பட்டமையாகும். சிலவேளை நாம் அவ்வாறு கண்மூடித்தனமாக அனைவரையும் ஆதரிக்கவில்லை என அவர்கள் இதை மறுக்கலாம் ஆனால் அதுவே மறுக்கப்பட முடியாத உண்மை. அதிலும் குறிப்பாக ஈரானை ஆளும் ஷீஆக்களை ஆதரிக்க முற்பட்டமையாகும். இந்தத் தோறணையிலமைந்த இவர்களின் வழமையான புலம்பல்களில் ஒன்றுதான் “அரபு …

Read More »

உறவுகளைப் பேணுவோம்

ஷெய்க் S.H.Mஇஸ்மாயில் ஸலஃபி இஸ்லாம் வலியுறுத்தும் சமூக உறவுடன் சம்பந்தப்பட்ட இபாதத்துக்களில் குடும்ப உறவைப் பேணுவது மிக முக்கியமானதாகும். சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் இன்றியமையாததாகும். இவ் வகையில் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப உறவுகளை ஏற்படுத்த வேண்டும். துரதிஷ்டவசமாக மார்க்க ஈடுபாடு உள்ள பலரிடம் கூட இன்றைய சமூக சூழல் இரத்த உறவை விட நட்பையும் இடையில் ஒட்டிக்கொண்ட …

Read More »

போலி ஹதீஸ்களும், சமூகத்தில் அதன் தாக்கங்களும்

_ஷெய்க் S.H.M இஸ்மாயில் ஸலஃபி குர்ஆன், ஹதீஸ் என்ற அடிப்படையான இரண்டு மூலாதாரங்களின் மீதுதான் இஸ்லாம் எனும் கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது. குர்ஆனைப் பொறுத்தவரையில் அது அல்லாஹ்வின் ‘கலாம்’ பேச்சு என்பதால் அதில் யாரும் எந்தக் குளறுபடிகளும் செய்துவிட முடியாது. 1400 வருடங்களாக எத்தகைய இடைச்செருகல் களுக்கோ, கூட்டல் குறைத்தல்களுக்கோ உள்ளாகாமல் அட்சரம் பிசகாமல் அப்படியே அது பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆனால், இரண்டாவது மூலாதாரமான ஹதீஸைப் பொறுத்தவரை அதன் கருத்து வஹி மூலம் …

Read More »

ஷரீஆவின் கண்ணோட்டத்தில் மனைவியைத் தண்டித்தல்

-எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) பெண்கள் பாரிய குடும்ப வன்முறைகளைச் சந்தித்து வருகின்றனர் . அறிவியலிலும், நாகரிகத்திலும்(?) முன்னேற்றம் கண்ட நாடுகளில் கூட பெண்கள் தமது கணவர்களினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு வன்முறைக்குள்ளாக்கப்படுகின்றனர். சில ஆய்வுகள் 80 வீதமான பெண்கள் தமது கணவர்களினால் பெரியளவோ, சிரியளவோ வன்முறைக்குள்ளப்படுவதாகக் கூறுகின்றது. குடிகாரக் கணவர்களினால் மட்டுமன்றிப் படித்தவர்கள், பண்பட்டவர்கள், உயர் அரச உத்தியோகத்தினரால் கூட மனைவியர் மாடுகளைப் போன்று தண்டிக்கப்படுகின்றனர். இது குறித்த இஸ்லாத்தின் …

Read More »

இஸ்லாமும் சுற்றுச் சூழல் பாதுகாப்பும் – S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர், உண்மை உதயம்

இஸ்லாமும் சுற்றுச் சூழல் பாதுகாப்பும். S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர், உண்மை உதயம்- ஜூன் மாதம் 05 ஆம் திகதி -சர்வதேச சுற்றுச் சூழல் பாதுகாப்பு- தினமாகும். மனித வாழ்வு இயந்திரமயமான பின்னர் ; சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது தினம் தினம் கேள்விக் குறியாகிக் கொண்டே செல்கின்றது. குறிப்பாக 18 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் இயந்திரங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றினூடாக எமது சுற்றுப் புறச் சூழல் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகின்றது. …

Read More »

இந்து, கிறிஸ்துவம், மற்றும் பௌத்த மதங்களில் ஹிஜாப், முஸ்லிம் பெண்களின் ஆடை அடிப்படை வாத்தின் அடையாளமா?

முஸ்லிம் பெண்களின் ஆடை அடிப்படை வாத்தின் அடையாளமா? முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா, பர்தா போன்ற ஆடை அமைப்பு அடிப்படைவாதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது. முப்பது வருடங்களுக்கு முன்பு இந்த ஆடை முஸ்லிம்களிடம் இருக்கவில்லை’ இப்போது ஏன் இப்படி அணிகின்றனர் என்று கேட்கின்றனர்.   ஒருவர் அணியும் ஆடையை வைத்து அடிப்படை வாதத்தைத் தீர்மானிக்க முடியுமா? முப்பது வருடங்களுக்கு முன் நாம் இப்படி ஆடை அணியாவிட்டால் இப்போது அணியக் கூடாதா? இந்த …

Read More »

இலங்கையை ஆண்ட பண்டார அவ்லியாவின் வரலாற்று குறிப்புகள் மற்றும் படிப்பினைகள்

இலங்கையை ஆண்ட பண்டார அவ்லியாவின் வரலாற்று குறிப்புகள் மற்றும் படிப்பினைகள் ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலபி, (ஆசிரியர், உண்மை உதயம்) வத்ஹிமி அல்லது கலே பண்டார என அழைக்கப்படும் ஒரு முஸ்லிம் மன்னன் குருநாகலை இராசதானியை குறுகிய காலம் ஆண்டுள்ளார். இவரது இயற் பெயர் ‘குரஷான் செய்யது இஸ்மாயில்’ என்பதாகும். இவர் இரண்டாம் புவனேகபாகுவின் புதல்வராவார். அவரது முஸ்லிம் மனைவிக்குப் பிறந்த இஸ்மாயில்| தந்தை இரண்டாம் புவனேகபாகுவின் மரணத்தைத் …

Read More »

மார்க்கத்தை யாரிடமிருந்து கற்கவேண்டும்?

மௌலவி M. பஷீர் ஃபிர்தௌஸி இஸ்லாம் கல்விக்கும் ஞானத்திர்க்கும் அதிக முக்கியத்துவம் வழங்கக்கூடிய மார்க்கம் கல்வியாளர்களைத்தான் அல்லாஹ் அவனது மார்க்கத்தை பாதுகாக்கவும் அதனை பரப்புவதர்க்கும் தேர்ந்தெடுத்துள்ளான். அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை; அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம்.. மாறாக! எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது – அநியாயக்காரர்கள் …

Read More »

பாதுகாப்பு அல்லாஹ்வின் அளப்பெறும் அருட்கொடையாகும்…

பாதுகாப்பு அல்லாஹ்வின் அளப்பெறும் அருட்கொடையாகும்… ஆசிரியர்: மௌலவி மஸ்வூத் ஸலஃபி – அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம், தம்மாம், சவுதி அரேபியா. ‫بسم الله الرحمن الرحيم‬‎ மனிதன் வாழத்தேவையான அனைத்து வசதி வாய்ப்புக்களும் அல்லாஹ்வால் அருளப்பட்டவையே. அல்லாஹ்வின் அருளினால்தான் அவனை மறுக்கும் இறை மறுப்பாளர்களும் இவ்வுலகில் வாழ்கின்றனர். இவ்வுலகமும் அதன் செழுமையும் மனிதர்களுக்குப் பெறுமதிமிக்கதாய் தெரிந்தாலும் அல்லாஹ்விடத்தில் இவ்வுலகம் பெருமதியற்றதே என்பதை கீழ்வரும் நபி மொழியிலிருந்து விளங்கலாம். …

Read More »

எதிரிகளை சந்திக்கும்போது, அதிகாரமுடையவர்களை பயப்படும்போது

எதிரிகளை சந்திக்கும்போது, அதிகாரமுடையவர்களை பயப்படும்போது #போர்கள் #மற்றும் #கலவரத்தின் #போது اَللّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ اَللّهُمَّ اهْزِمْ الأَحْزَابَ اَللّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி, ஸரீஅல் ஹிஸாபி, அல்லாஹும்மஹ்ஸிமில் அஹ்ஸாப், அல்லாஹும்மஹ்ஸிம்ஹும் வஸல்ஸில்ஹும். பொருள் : இறைவா! வேதத்தை அருளியவனே! விரைந்து விசாரிப்பவனே! எதிரிகளின் கூட்டணியைத் தோல்வியுறச் செய்வாயாக! அவர்களைத் தடுமாறச் செய்வாயாக! ஆதாரம்: புகாரி اَللّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ وَمُجْرِيَ السَّحَابِ وَهَازِمَ …

Read More »

முஸ்லிம் அல்லாதவர்களின் பெருநாள் நிகழ்சிகளில் பங்குகொள்ளுதல்

முஸ்லிம் அல்லாதவர்களின் பெருநாள் நிகழ்சிகளில் பங்குகொள்ளுதல் இவ்வாரான விழாக்களில் பங்கு பெற்றுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். நபி (ஸல்) அவர்கள் மாற்று மதத்தவர்களை ஒப்பாகுவதை தடை செய்துள்ளார்கள். யார் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகின்றாறோ அவர் அந்தக் கூட்டத்தை (அந்த மதத்தை) சார்ந்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அபூ தாவூத் அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னுல் ஆஸ் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்: யார் மாற்று மதத்தவர்கள் வாழும் …

Read More »

ஐவேளைத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது ‘ஷர்த்(கட்டாயமா) அல்லது “பர்ழு கிபாயா” வலியுறுத்தப்பட்ட கடமையா?…

ஜமாஅத்துத் தொழுகை;- கட்டுரை | அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஸலபி சென்ற இதழில் ஜமாஅத்துத் தொழுகை கட்டாயக் கடமை என்று கூறுவோரின் ஆதாரங்களை அவதானித்தோம். இந்த இதழில் ஜமாஅத்துத் தொழுகை ஷர்த்தோ, பர்ளு ஐனோ அல்ல என்ற கருத்துடையோரின் ஆதாரங்களை அலசவுள்ளோம். 01. தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது 25 அல்லது 27 மடங்கு சிறந்தது என ஹதீஸ்கள் கூறுகின்றன. இந்த ஹதீஸ் ஜமாஅத்துத் தொழுகையின் சிறப்பைக் கூறும் அதே …

Read More »

இஸ்லாம் பொறுமையையும் சொல்கின்றது, போராட்டத்தையும் சொல்கின்றது- கட்டுரை | அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஸலபி

இஸ்லாம் பொறுமையையும் சொல்கின்றது, போராட்டத்தையும் சொல்கின்றது. வரலாறு நெடுகிலும் முஸ்லிம் சமூகம் பல்வேறுபட்ட சவால்களைச் சந்தித்தே வருகின்றது. சோதனைகளும், வேதனைகளும் முஸ்லிம் சமூகத்திற்கு புதிதல்ல. சோதனைகள் வாட்டி வதைத்தாலும், துன்பங்களும் துயரங்களும் துரத்தித் துரத்தி வந்தாலும் சோர்ந்து போகாமல் வாடி வதங்கிவிடாமல் தலை நிமர்ந்து நிற்பது அல்லாஹ்வின் அருள் மாத்திரமே என்பது தெளிவாகும். முஸ்லிம் சமூகம் அடுத்தவர்களால் சீண்டப்படும் வேளைகளில், உலமாக்கள் மற்றும் சமூக முன்னோடிகள் அவர்களைப் பொறுமையாக இருங்கள்; …

Read More »

மஸ்ஜிதுல் அக்ஸாவின் சிறப்புக்கள்…கட்டுரை | ரிஸ்கான் மதனி

மஸ்ஜிதுல் அக்ஸாவின் சிறப்புக்கள்… 01) அபிவிருத்தி (பறக்கத்து) செய்யப்பட்ட பூமி (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான். (17:1) 02) உலகில் நிர்மானிக்கப்பட்ட இரண்டாவது பள்ளிவாசல்.. …

Read More »

நேர்வழி, உறுதி, இன்மை மற்றும் மறுமை வெற்றியை ‘ருஷ்த்’ எனும் நேர்வழியை கேட்பது

‘ருஷ்த்’ எனும் நேர்வழியுடன் கூடிய முதிர்ச்சியை கேட்பது! குகைவாசிகள் மிக இக்கட்டான ஒரு சூழ்நிலையில் குகைக்குள் அகப்பட்டவர்களாக அல்லாஹ்விடம் எதனை கேட்டனர்? அவர்கள் உதவியையோ, வெற்றியையோ அல்லது பலத்தையோ கேட்க்காமல் ‘ருஷ்த்’ எனும் ‘காரியத்தில் இலகு’ அல்லது ‘நேர்வழியுடன் கூடிய முதிர்ச்சியை’ அல்லாஹ்விடம் கேட்டார்கள். “அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் ‘எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் …

Read More »

உலகலாவிய வறுமையை ஒழித்திட வல்லோனின் செயற்திட்டம்…மௌலவி ரிஸ்கான் மதனி

உலகலாவிய வறுமையை ஒழித்திட வல்லோனின் செயற்திட்டம்… எம். றிஸ்கான் முஸ்தீன் (மதனி), அழைப்பாளர், அல்- கப்ஜி, இஸ்லாமிய நிலையம், சவுதி அரேபியா. நடப்பு உலகத்தில் தலைவிரித்தாடக் கூடிய பட்டினி, வறுமை, வேலையில்லாப் பிரச்சினை போன்ற பல்வேறு வகையான அவலங்களுக்கு தீர்வுகனுவதில் முழு உலகமும் சோர்வடைந்து போய்யுள்ளது. வளர்முக நாடுகளில் கூட மேற்படி அவலங்கள் அலையடிக்க ஆரம்பித்துள்ள இத்தருனத்தில் சுயதொழில் ஊக்குவிப்பு, வட்டியில்லா கடன், வாழ்வாதார உதவி, குடிசைக் கைத்தொழில் என …

Read More »