Home / Classes (e-learning) / Dr. Abdur Rahim - இலக்கண பாடம் / Dr. Abdur Rahim – الدَّرْسُ الثّامنُ – எட்டாவது பாடம்

Dr. Abdur Rahim – الدَّرْسُ الثّامنُ – எட்டாவது பாடம்

الدَّرْسُ الثّامنُ  – எட்டாவது பாடம்
هذا الرّجلُ تاجرٌ وذالك الرّجل طبيبٌ
இந்த மனிதன் வியாபாரி மேலும் அந்த மனிதன் மருத்துவர்
اسمُ التاجرُ محمُودٌ واسمُ الطبيبُ سَعِيْدٌ
வியாபாரியின் பெயர் மஹ்மூத் மேலும் மருத்துவரின் பெயர் சயீத்
هذا البيتُ للِتَّاجِرِ و ذالك البيتُ للِطَّبِيْبِ
இந்த வீடு வியாபாரிக்குரியது  மேலும் அந்த வீடு மருத்துவருக்குரியது
بيتُ التاجرِ أَمَامَ الْمَسْجِدِ و بيتُ الطبيبِ خَلْفَ المَدَرَسَةِ
வியாபாரியின் வீடு மஸ்ஜிதுக்கு முன்னால் (இருக்கிறது). மேலும் மருத்துவரின் வீடு பள்ளிக்கு பின்னால் (இருக்கிறது)
لِمَنْ هَذِهِ السيّارةُ و لمن تِلْكَ؟
இந்த வண்டி யாருக்குரியது  மேலும் அது யாருக்குரியது ?
هذه السيارةُ للِطَّبِيْبِ وتلك للِتَّاجِرِ
இந்த வண்டி மருத்துவருக்குரியது மேலும் அது வியாபாரிக்குரியது
هَذِهِ السيّارةُ من الْيَابَانِ وتلك منْ أَمْرِيْكَا
இந்த வண்டி ஜப்பானிலிருந்து (வந்திருக்கிறது) மேலும் அது அமெரிக்காவிலிருந்து (வந்திருக்கிறது)
இலக்கணக் குறிப்புகள்
  1.   بَدَلٌ (பதில்)
முதல் பாடத்தில் “ هذا بيتٌஇது வீடு” என்று பார்த்தோம். இப்போதுهذا البيتُ இந்த வீடு” என்று பார்க்கப்போகிறோம்.

هذا جديدٌஇது புதியது :
 இதில்,  هذا – مبتدأ, جديد – خبر
البيت جديدُ(குறிப்பிட்ட அல்லது இந்த) வீடு புதியது ;
இதில்,  البيت – مبتدأ, جديد – خبر
 – هذا البيت جديد  இந்த வீடு புதியது ;  
இங்கு, هذا – مبتدأ , البيت – مبتدأ, جديد – خبر.
 மேற்கூறப்பட்ட வாக்கியத்தில் இரண்டு  مبتدأ  க்கள் வருவதால், முதல்  مبتدأ வை مبتدأ என்றே குறிப்பிட்டு, இரண்டாவதாக வரும்  مبتدأ முதல்  مبتدأ விற்கு பதிலாக அல்லது பகரமாக வருவதால் அதை بَدَلٌ (பதில்) என்று குறிப்பிடுவோம்.
இதைப்பற்றி போகப்போக விரிவாக படிக்கவிருக்கிறோம். ان شاء الله
குறிப்பு 1: اسم لاشارا  விற்குப் பின்னால் வரும்  ال இல் துவங்கும் பெயர்ச்சொற்கள் அனைத்தும்  بَدَلٌ (பதில்) தான்..
சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால் ஒரு வாக்கியத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்கள் ஒரே இலக்கணக்குறிப்பைக் கொண்டு வருமாயின் முதல் வார்த்தையை அதற்கான இலக்கணப்பெயருடன் குறிப்பிட்டு அதைப் பின்தொடரும் அதே இலக்கணம் சார்ந்த வாக்கியத்தை பதில் (بَدَلٌ)  என்போம்.
குறிப்பு 2 : இந்த  பாடத்தில் நாம் பார்த்தோம் هَذِهِ السيّارةُ من الْيَابَانِ وتلك منْ أَمْرِيْكَا
. இதில் مِنْ أَمْرِيْكَا வைப் பற்றி பார்ப்போம். பொதுவாக مِنْ இற்கு பின்னால் வரும் பெயர்ச்சொல் مجرور ஆக தான் வரும் என்று நாம் முன்பே அறிந்திருக்கிறோம். அனால் இங்கு أَمْرِيْكَا வின் கடைசி எழுத்தில் கஸ்ரா இல்லை. ஆனாலும் அது مجرور தான்.
أَمْرِيْكَا என்ற இந்த பெயர்ச்சொல் அரபு மொழியில் உள்ள பெயர்ச்சொல் அல்ல. இது அரபு அல்லாத ஒரு மொழியின் பெயராகும். ஆகவே இது مجرور ஆக இருப்பினும் இங்கு இவ்வாறே குறிப்பிடப்பட்டிருக்கிறது. நான்காவது பாடத்தில் ஆண்கள் பெயர்கள் மற்றும் பெண்கள் பெயர்களை பற்றி விரிவாக பின்னால் பார்க்கவிருக்கிறோம் என்று குறிப்பிட்டது போல இதுவும் அந்த தலைப்பின் கீழ் வருவதால் பாடத்தின் கடைசியில் இதைப்பற்றி பார்ப்போம் ان شاء الله
குறிப்பு 3:  خَلْفَ  பின்னால்;  – أَمَامَ முன்னால்; இவை இரண்டும் நாம் புதிதாக பார்க்கும் ظرف ஆகும். இவை இரண்டிற்குமே مضاف اليه இருப்பதை பாடத்தில் கவணிக்கலாம். இவை منصوب  ல் இருக்கிறது. ظرف கள் அநேகமான சந்தர்பங்களில் منصوب  ஆக வரும்.
  البيتُ خَلْفَ المسجدِ  –   அந்த வீடு மஸ்ஜிதிற்கு பின்னல் (இருக்கிறது)
              –   حامدٌ اَمَامَ المدرسِஹாமித் ஆசிரியருக்கு முன்னால் (இருக்கிறான்)
இங்கு ظرف களைத் தொடர்ந்து مضاف اليه வருகிறது.
குறிப்பு 4: جلس      – அவன் உட்கார்ந்தான்
     –    أين جلس حامد ؟ ஹாமித்  எங்கே உட்கார்ந்தான்?
جلس حامد خلف محمود   ஹாமித் மஹ்மூதிற்கு பின்னல் உட்கார்ந்தான்.
இது ஒரு جملة فعلية  ஆகும். ஒரு فعل  இருந்தால் அதற்கொரு  فاعل  கண்டிப்பாக இருக்க வேண்டும். فعل  க்கு பின்னல் தான் فاعل  வரும், ஒரு போதும் فعل  க்கு முன்னால் فاعل  வராது.
உதாரணம்: ذهب حامد الى المسجد
 ذهب   –  فعل : حامد    –   فاعل : الى المسجد –  جار و مجرو
இப்போது  حامد வசனத்தின் ஆரம்பத்தில் வருமாயின்
 حامد ذهب الى المسجد  இது جملة اسمية ஆகும் . இங்கே حامد,  مبتدأ வாக மாறிவிடும். ஒரு جملة اسمية வில்  مبتدأ இருந்தால் அதற்கொரு خبر  இருக்கும். ஆனால் இங்கு حامد  என்ற  مبتدأ விற்கு பின்னால் ஒரு  فعل (ذهب ) வந்துள்ளது. நாம் ஒரு فعل   ஐ கண்டால் فاعل  ஐ தேடவேண்டும். இங்கு ذهب  என்னும்  فعل உடைய فاعل  فاعل مستتر  ஆக வருகிறது. فاعل  ஒரு போதும் فعل   ற்கு முன்னால் வராது. ஒன்றில் مستتر  ஆக வரும் அல்லது فعل   ஐ தொடர்ந்து பின்னால் எங்கேனும் வரும்.
         حامد ذهب الى المسجد –  ஹாமித் மஸ்ஜிதிற்கு போனான்
இதில் ,   مبتدأ  حامد. ஒரு مبتدأ  இருந்தால் அதற்கொரு خبر  வேண்டும். இந்த வசனத்தில் حامد என்ற مبتدأ  வை பிரித்தால் எஞ்சும் வசனம்
 ذهب الى المسجدமஸ்ஜிதிற்கு போனான். இது ஒரு جملة فعلية ஆகும்.
இங்கு,  فعل  (فاعل مستتر تقديره هو ) ؛ الى المسجد –  جار و مجرو  ذهب
எனவே இங்கு خبر  , மஸ்ஜிதிற்கு போனான் என்ற முழுமையான جملة فعلية خبر  ஆக வருகிறது.
இங்கு حامد ஐ பற்றி சொல்ல வந்த செய்தி அவன் மஸ்ஜிதிற்கு போனான் என்ற முழு வசனமும் ஆகும், எனவே இது جملة فعلية خبر   எனப்படும்.
குறிப்பு 5:   خبر   உலமாக்களின் கருத்துப்படி 3 வகைப்படும். இலகுவாக்குவதற்காக அதை நாம் ஐந்து வகையாக பார்போம். அதில் நான்கு வகைகளை பார்த்துள்ளோம். அவை
  1. ஒரு வார்த்தையாக வரும்
  2. جار و مجرور شبه جملة خبر  ஆக வரும்
  3. ظرف شبه جملة خبر  ஆக வரும்
  4. الجملة فعلية خبر  ஆக வரும்
ஐந்தாவது خبر   ஐ நாம் பின்னர் பார்ப்போம். ان شاء الله ….
تمارين பயிற்சிகள்
  1. கீழ்க்கண்ட கேள்விகளுக்கு சரியான விடையளி:
  2. எழுதி படித்து சரியாக إعراب செய்யவும்
  3. கீழ்க்கண்ட உதாரணத்தை படித்து அதன் படி வாக்கியங்களை அமைக்கவும்
  4. கீழ்க்கண்ட உதாரணத்தை படித்து அதன் படி கீழே கொடுக்கப்பட்டவற்றிலிருந்தே கேள்வியையும் பதிலையும் அமைக்கவும்
  5. கீழுள்ளவைகயைப் பார்த்துப் புரிந்து அரபு அல்லாத சொற்கள் மஜ்ரூரில் எப்படி வருகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்
  6. எழுதி படித்து சரியாக إعراب செய்யவும்
  7. படித்து சரியாக இஹ்ராப் செய்யவும்
  8.   புதிய வார்த்தைகள் الكلمات الجديدة
 – المُسْتَشْفَىமருத்துவமனை –  ألْمَانِيَا  :ஜெர்மனி – اِنْكَلْتَرَا : இங்கிலாந்து;  – سُوِيسْرا  சுவிச்சர்லாந்து – السَّكِّينُ : கத்தி – فَرَنْسَا : பிரான்ஸ்:
 – أَمَامَ முன்னால் – خَلْفَ  :பின்னால்
*********

Check Also

Dr. Abdur Rahim Arabic Book 2 lesson 1-இலக்கண பாடம் 1 (الدَّرْسُ الأَوَّل)

Dr. Abdur Rahim Arabic Book 2 – இலக்கண பாடம் 1 PDF Read Only / வாசிக்க …

3 comments

  1. முன்னய ஏழு பாடத்தையும் சிறந்த முறையில் படித்துவிட்டு எட்டாம் பாடத்தை மிகவும் ஆவளுடன் எதிர்பார்திருந்தேன். அல்ஹம்துலில்லாஹ்!
    இதனால் எமக்கு பயன்பெற உதவிய அனைத்து நல்லுல்லம் படைத்தவர்களுக்கும் அல்லாஹுதஆலா சுவர்கத்தை பரிசாக வழங்க வேண்டுகின்றேன்.

  2. Assalamu alikum,
    Pls ,pls ,pls,
    Upload more grammar lesson from9
    Very very usfull
    Insha allah
    Jazahkallahkhair

  3. ஹாஜத்துன்னிஸா

    அஸ்ஸலாமு அலைக்கும். முந்தைய எட்டு பாடங்களும் நன்கு விளங்கினோம். மீதமுள்ள பாடங்களை எதிர் பார்க்கின்றோம். மேலும். இரண்டாம் பாகத்திலுள்ள பாடங்களும் எங்களுக்கு தேவை. அதிலுள்ளவற்றையும் பதிவேற்றம் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply to ஹாஜத்துன்னிஸா Cancel reply