Home / Islamic Centers / Al Khobar Islamic Center / தப்ஸீர் ஸூரத்துல் ஷம்ஸ் அத்தியாயம் 91

தப்ஸீர் ஸூரத்துல் ஷம்ஸ் அத்தியாயம் 91

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி.

நாள்: 19:09:2014,வெள்ளிக்கிழமை.

இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா, அல்கோபர், சவூதி அரேபியா.

வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.


தர்பியா வகுப்பில் கொடுக்கப்பட்ட குறிப்புகள்..

ஸூரத்துஷ் ஷம்ஸ் (சூரியன்) அத்தியாயம்93  
 வசனங்கள்: 15
بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
وَالشَّمْسِ وَضُحَاهَا ﴿١ وَالْقَمَرِ إِذَا تَلَاهَا ﴿٢ وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا ﴿٣ وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا ﴿٤ وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا ﴿٥وَالْأَرْضِ وَمَا طَحَاهَا ﴿٦ وَنَفْسٍ وَمَا سَوَّاهَا ﴿٧ فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا ﴿٨ قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا ﴿٩ وَقَدْ خَابَ مَن دَسَّاهَا ﴿١٠ كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا ﴿١١ إِذِ انبَعَثَ أَشْقَاهَا﴿١٢ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّـهِ نَاقَةَ اللَّـهِ وَسُقْيَاهَا ﴿١٣ فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنبِهِمْ فَسَوَّاهَا ﴿١٤ وَلَا يَخَافُ عُقْبَاهَا ﴿١٥
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகின்றேன்).
1சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக-
2. (பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-
3. (சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-
4. (அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-
5வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
6பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-
7ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-
8அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.
9அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.
10ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.
11. “ஸமூது” (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.
12அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது,
13அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது; இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்என்று கூறினார்.
14ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் – ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.
15அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை.
விளக்கம்:
அல்லாஹ் தான் படைத்திருக்கும் பிரமாண்டமான படைப்புகளின் மீது சத்தியம் செய்கின்றான். இப்பிரமாண்டமான படைப்புகளை எவன் படைத்தானோ அவனுடைய வல்லமைமைய மனிதன் உரிய முறையில் விளங்கி அவனை மாத்திரமே வணங்க வேண்டும் என்பதையே வல்ல நாயன் விரும்புகின்றான். 
وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ لَا تَسْجُدُوا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خَلَقَهُنَّ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ (37: 41)
“இரவும், பகலும்; சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதாம். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையே வணங்குகிறவர்களாக இருந்தால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஸுஜூது செய்யாதீர்கள் – இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்யுங்கள்”. (4: 37) .
 சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகள். எவருடைய மரணத்திற்காகவும் அவற்றிற்குக் கிரகணம் பிடிப்பதில்லை. மாறாக அதன் மூலம் அல்லாஹ தன்னுடைய அடியார்களை எச்சரிக்கிறான்‘. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி) அவர்கள், ஆதாரம்: புஹாரி 1048).
عَنْ أَبِي ذَرٍّ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَبِي ذَرٍّ حِينَ غَرَبَتِ الشَّمْسُ تَدْرِي أَيْنَ تَذْهَبُ قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ فَإِنَّهَا تَذْهَبُ حَتَّى تَسْجُدَ تَحْتَ الْعَرْشِ فَتَسْتَأْذِنَ فَيُؤْذَنَ لَهَا وَيُوشِكُ أَنْ تَسْجُدَ فَلاَ يُقْبَلَ مِنْهَا وَتَسْتَأْذِنَ فَلاَ يُؤْذَنَ لَهَا يُقَالُ لَهَا ارْجِعِي مِنْ حَيْثُ جِئْتِ فَتَطْلُعُ مِنْ مَغْرِبِهَا فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى : {وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ}.
அபூ தர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், ‘அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘அல்லாஹ்வும்,அவனது தூதருமே அறிவார்கள் என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது (கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. அப்போது அது (வழக்கம் போன்று) கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும்; அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக, ‘வந்த வழியே திரும்பி விடு” என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்” என்றார்கள். இதைத் தான், ‘சூரியன், தான் நிலை கொள்ளும் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும்” என்னும் (திருக்குர்ஆன் 36:38) இறைவசனம் குறிக்கிறது” என்றார்கள். (புஹாரி 3199).
நன்மை மற்றும் தீமை இரண்டையும் அல்லாஹ் மனிதனுக்கு அறிவித்துக் கொடுத்திருக்கின்றான். மனிதன் அதில் எந்தப் பாதையை தெரிவு செய்கின்றானோ அதை வைத்தே அவனது முடிவு அமைகின்றது. ஒவ்வொருவரும் தனது நப்ஃஸை பரிசுத்தப்படுத்துவதின் அவசியத்தை இந்த வசனங்கள் மிகத் தெளிவாக உணர்த்துகின்றன. மனிதனுக்கு முன்னாள் உள்ள போராட்டங்களில் இதுவே மிகப் பெரிய போராட்டமாக உள்ளது. நப்ஃஸுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அறிஞர்கள் அதிகம் சிரமப்பட்டார்கள் என்பதை அவர்களின் கூற்றுகளிலிருந்தே அறிய முடிகின்றது. ஓவ்வொரு மனிதனுக்கும் தனது நஃப்ஸோடு உள்ள போராட்டம் என்பது மரணிக்கும் வரை நீடிக்கக்கூடிய ஒன்றாகவே உள்ளது.
நப்ஃஸை பரிசுத்தப்படுத்திக் கொள்வதற்காக சில வழி முறைகள்: தூய ஓரிறைக்கொள்கையில் உறுதியாக இருப்பது, எவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றாரோ அல்லாஹ் அந்த உள்ளத்தை நேர் வழியில் செலுத்துகின்றான் என்பது அவனது வாக்காகும், அவனது வார்த்தைகளான அல்குர்ஆனின் பக்கம் நமது தொடர்பை அதிகப்படுத்திக் கொள்வது, அது உள நோய்கள் அனைத்திற்கும் நிவாரணியாக உள்ளது, அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூறுவது உள்ளத்தின் அமைதி அதில்தான் தங்கியுள்ளது, கற்ற மார்க்க விடயங்களை முடிந்த வரை செயல் படுத்துவது, நப்ஃஸை மாசுபடுத்தும் பாவங்களிலிருந்து விலகி இருப்பது, நப்ஸின் தூய்மைக்காக அதிக மதிகம் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது. நற்கருமங்களில் உறுதியாகவும், தொடர்சியாகவும் இருப்பது. பிறருடன் உயரிய பண்புகளுடன் நடந்து கொள்வது, மரணம், மறுமை பற்றிய சிந்தனைகளை அதிகம் வளர்த்துக் கொள்வது, கூலியை அல்லாஹ்விடமே எதிர் பார்த்து உளத் தூய்மையுடன் செயல் படுவது. தங்களின் செயல் பாடுகளை எப்போதும் சுய பரிசோதனை செய்து கொண்டே இருப்பது.
நப்ஃஸ் அழுக்கடைகின்றபோது அது படிப்படியாக பெரும் பாவங்களின் பக்கம் அவனை இட்டுச் செல்கின்றது, அல்லாஹ்வுடைய தீனுக்கெதிராகவே அவனை செயல் படத் தூண்டுகின்றது, தெளிவான அல்லாஹ்வின் அத்தாட்சிகளை காணுன்போது கூட ஆணவத்தின் காரணத்தால் அவனது உள்ளம் அவற்றை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. ஸமூது கூட்டத்தாருக்கு ஏற்பட்ட மோசமான முடிவை அல்லாஹ் இங்கு தெளிவு படுத்துவதிலிருந்தே இந்த உண்மையை நமக்கு விளங்கிக் கொள்ள முடியும்.
யாவற்றின் மீதும் ஆற்றல் மிக்க அல்லாஹ் எந்த முடிவுக்கும் அஞ்சுவதில்லை. அவன் நாடியதை தீர்ப்பளிப்பான். அவனது தீர்ப்பு எப்போதும் நீதியானதாகவே இருக்கும். அவனது தண்டனை எந்த சமூகத்தைப் பிடித்துக்கொண்டாலும் அதற்கு அவர்களது அக்கிரமமே காரணம் என்பதை அல்குர்ஆன் பல இடங்களில் தெளிவு படுத்துகின்றது.

Check Also

எப்பொழுது எங்களுக்கு நிம்மதி?

எப்பொழுது எங்களுக்கு நிம்மதி? ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் விஷேட உரை தேதி : 19 – 04 …

Leave a Reply