Home / TNTJ விற்கு மறுப்பு / அல்குர்ஆன் வசனத்தையும் நாம் ஆய்வுக்குட்படுத்தியே நம்புவோம் என்ற வாதத்திற்கு பதில்

அல்குர்ஆன் வசனத்தையும் நாம் ஆய்வுக்குட்படுத்தியே நம்புவோம் என்ற வாதத்திற்கு பதில்

அல்குர்ஆன் வசனத்தையும் நாம் ஆய்வுக்குட்படுத்தியே நம்புவோம். கேட்ட மாத்திரத்தில் நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்ற வாதத்திற்கு ஆதாரமாக அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் அவர்கள் விழ மாட்டார்கள்.(25:73) என்ற வசனத்தைக் காட்டுகின்றனர்.

இது மிகப்பெரும் தவறாகும். இவர்கள் கூறும் இந்த விளக்கத்தை உலக வரலாற்றில் நமக்குத் தெரிந்த வரை யாருமே கூறவில்லை. மாற்றமாக அவர்கள் கூற வரும் கொள்கைக்கு மாற்றமான கருத்தையே அவ்வசனம் கொண்டுள்ளது.

அவ்வசனத்தின் விளக்கம் அல்குர்ஆன் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்படும் போது அதனை நன்கு செவிமடுப்பார்கள் என்பதாகும். ஏனெனில்; இவ்வசனம் முஃமின்களைப் பற்றிப் பேசும் வசனமாகும். அவர்கள் காபிர்களைப்; போல் அல்குர்ஆன் வசனங்கள் ஓதப்படும் போது அதனைப் புறக்கணிக்கமாட்டார்கள். மாறாக அதனைக் கவனித்துக் கேட்பார்கள் என்பதேயாகும்.

இவர்கள் கூறுவது போல் அவ்வசனத்தின் கருத்து இருக்குமேயானால் காபிர்கள் அல்குர்ஆனைக் கேட்டவுடன் ஆய்வின்றி ஏற்றுக்கொள்வார்கள் என்ற கருத்தை இவர்கள் கொடுக்கவேண்டி வரும். இது தவறு என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

சரியான கருத்து:

ரஹ்மானின் அடியார்கள் காபிர்களைப் போன்றில்லாமல் அல்குர்ஆன் வசனத்தை செவிமடுத்துக் கேட்பார்கள். அதனை ஏறெடுத்துப் பார்ப்பார்கள்.

விழமாட்டார்கள் என்பது நேரடிக் கருத்தாக இருந்தாலும் அரபு மொழியில் இச்சொற்றொடர் வேறு கருத்துக்களிலும் சிலேடையாகப் பயன்படுத்தப்படும். இவ்வசனமும் அவ்வாறான ஒரு சந்தர்ப்பமாகும்.

உதாரணமாக அரபு மொழியில் ஏசிக்கொண்டிருந்தான் என்பதை அமர்ந்து ஏசிக்கொண்டிருந்தான் எனக் குறிப்பிடுவார்கள். அதைப் போன்றே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள விழமாட்டார்கள் என்பதும்.

நாம் மேலே இவ்வசனத்திற்குக் கூறிய கருத்தை வலுப்படுத்தும் இன்னும் அல்குர்ஆன் வசனங்களும் உள்ளன.

அல்லாஹ்வுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய நம்பிக்கை (மென்மேலும்) அதிகரிக்கும். 8:2
உண்மையில் யார் நம்பிக்கையாளர்களோ அவர்களின் நம்பிக்கையை ஒவ்வோர் அத்தியாயமும் அதிகமாக்கியே இருக்கிறது. 9:124

அல்குர்ஆனை எவ்வாறு விளங்க வேண்டும் என்பதைப் பற்றி இவ்வசனம் பேசவே இல்லை என்பதே மேற்கூறிய ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபனம் ஆகும் உண்மையாகும்.
அல்குர்ஆனை எவ்வாறு புரிவது என்பதை இன்ஷா அல்லாஹ் வேறொரு பதிவில் பார்க்கலாம்.

மூலநூட்கள்:
தபரி, இப்னு கஸீர், குர்துபி, ஸாதுல் மஸீர்

Check Also

வதந்திகளைக் கையாள்வதற்கான இஸ்லாத்தின் வழிகாட்டல்கள் | ஜும்ஆ தமிழாக்கம் |

வதந்திகளைக் கையாள்வதற்கான இஸ்லாத்தின் வழிகாட்டல்கள் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 22 …

Leave a Reply