Home / Islamic Centers / Al Khobar Islamic Center / ஆணவமும் அகம்பாவமும் – உரை : மௌலவி அப்பாஸ் அலி MISC

ஆணவமும் அகம்பாவமும் – உரை : மௌலவி அப்பாஸ் அலி MISC

Audio mp3 (Download)

அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு,

உரை: மௌலவி அப்பாஸ் அலி MISC,
அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்,

நாள்: 19-04-2016, வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை,

இடம்: ஹிதாயா தஃவா நிலைய நூலகம், அல் கோபார், சவுதி அரேபியா.

ஆணவமும் அகம்பாவமும்
1. இறை நம்பிக்கையுள்ள அனைவரும் சகோதரர்கள்.
2. ஒரு சமுதாயம் முன்னேற்றம் அடைய வேண்டுமானால், ஈமான் கொண்டவர்கள் மத்தியில் சகோதரத்துவம் வேண்டும்.
3. ஒரு முஃமினிடம் இருக்கக் கூடாத குணம் ஆணவமும், அகம்பாவமும்.
4. தான் தான் பெரியவன் என பெருமை கொண்டாட தகுதி உடையவன் அல்லாஹ் ஒருவனே.
5. வானங்களிலும் பூமியிலும் உள்ள பெருமைகள் அனைத்தும் அல்லாஹ்க்கு மட்டுமே உரியது.
6. யாரேனும் மனிதர்களிடம் உயர்வை விரும்பினால் அவர்கள் அல்லாஹ் விடம் போட்டியிடுகின்றார்கள்.
7. பெருமை அல்லாஹ்வினுடைய மேலாடையாகவும், கண்ணியம், அந்தஸ்து அல்லாஹ்வினுடைய கீழாடையாகவும் உள்ளது.
8. மறுமையில் அல்லாஹ் மூவருடன் பேச மாட்டன், பார்க்க மாட்டன், கண்ணியப்படுத்த மாட்டன், தூயமைப்பாடுத்த மாட்டன்.
a. பொய் சொல்லும் அரசன்
b. விபச்சாரம் செய்யும் கிழவன்.
c. பெருமையடிக்கும் ஏழை
9. எவனுடைய உள்ளத்தில் அணுவளவு பெருமை உள்ளதோ அவன் சுவர்க்கம் செல்ல மாட்டன் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
10. உண்மையை மறுப்பதும், அடுத்தவர்களை இழிவாகக் கருதுவதும் பெருமை.
11. ஒருவருக்கொருவர் பணிவோடு நடக்க வேண்டும், பெருமை காட்ட கூடாது என நபி (ஸல்) அவர்கள் தனக்கு வஹி வந்ததாக கூறியுள்ளார்கள்.
12. ஒருவரிடம் ஈமான் இருந்தால் அவர் எந்த நிலைமையில் இருந்தாலும் அவரை நேசிக்க வேண்டும்.
13. அடுத்தவர்களிடம் பணிவாக நடப்பது நல்லடியார்களின் பண்புகளில் ஒன்று.
14. அல்லாஹ்வினுடைய சிந்தனை இன்மையே பெருமைக்கான முக்கிய காரணம்.
15. அல்லாஹ்விற்காக ஒருவர் பணிந்து விட்டால் அல்லாஹ் அவரை உயர்த்தாமல் விட மாட்டன்.
அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் வாராந்திர மார்க்க வகுப்பில் மௌலவி. அப்பாஸ் அலி அவர்களின் உரையில் இருந்து…

Check Also

அல்லாஹ்வின் மன்னிப்பின் விசாலம் | Assheikh Abdul Azeez Mursi |

Iftar Tent Dammam 03 15 24 Sheikh Abdul Azeez Mursi Subscribe to our Youtube Channel …

Leave a Reply