Home / எறும்பு மற்றும் ஹுத்ஹுத் / எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-11)

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-11)

11வது படிப்பினை
நல்லோர்களின் தோழமையை விரும்பி, அவர்களுடன் சேர்த்து வைக்குமாறு வேண்டுதலும்.
{وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ } النمل: 19
உனது அருள் மூலம் என்னை உனது நல்லடியார்களில் நுழைவிப்பாயாக!
இது நபிமார்களும் அல்லாஹ்விடத்தில் கேட்ட பிரார்த்தனையாகும். யூஸூப் (அலை) அவர்கள் இவ்வாறு பிரார்த்தித்தார்கள். ((என்னை முஸ்லிமாக மரணிக்க வைத்து நல்லோருடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக.)) (யூஸூப்:101)
ஒவ்வொரு நாளும் ஸுரதுல் பாதிஹாவில் நல்லோர்களின் பாதையின் பக்கம் வழிகாட்டுமாறு பிரார்த்திப்பதை அல்லாஹ் இச்சமூகத்தின் மீது  கடமையாக்கியுள்ளான்.
((உனது அருள் மூலம்)) என்ற வார்த்தை நல்லோர்களுடன் சேர்வது, அல்லாஹ்வியின் உதவியின்றி சாத்தியமில்லை என்பதைக் காட்டுகிறது.
மேலும் நல்லோர்களின் சகவாசம் அவர்களுடன் கலந்திருப்பது போன்றவை விரும்பக்கத்தக்கதாகும். ஏனெனில் அல்லாஹ் அல்குர்ஆனில் ((நபியே! அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடியோராக காலையிலும்,  மாலையிலும் தனது இறைவனை அழைப்போருடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக!)) எனக் கூறுகிறான். (கஹ்ப்: 28)
இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (நல்லோர்களில் நான் அடங்காவிட்டாலும் நான் அவர்களை நேசிக்கிறேன். ஏனெனில் அதன் மூலம் அவர்களது சிபாரிசையாவது நான் பெறலாம். யாருடைய வியாபாரம் தீமைகளாகவுள்ளதோ அவர்களை நான் வெறுக்கிறேன். நாம் பொருளில் ஒருவருக்கொருவர் சமமாக இருந்தபோதிலும் சரியே.) (அதாவது நான் பாவியாக இருந்தாலும் பாவிகளை வெறுக்கிறேன்.)
தொடரும்……

Check Also

அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்? | ஜும்ஆ தமிழாக்கம் |

அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்? ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 01 …

Leave a Reply