Home / எறும்பு மற்றும் ஹுத்ஹுத் / எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-15)

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-15)

15வது படிப்பினை
குற்றம் இழைத்தவனுக்கு அனுதாபம் காட்டக்கூடாது,
நிச்சயமாக அதனைக் கடுமையாக தண்டிப்பேன் அல்லது கொன்றுவிடுவேன்.
குற்றம் இழைத்தவனுக்கு அனுதாபம் காட்டுவது மற்றவர்களுக்கும் அவன் அநியாயம் இழைப்பதற்குத் தூண்டுவதாக அமையும்.
குற்றமிழைப்போருக்கும்குழப்பம் செய்வோருக்கும் கடுமையான தண்டனை வழங்குவது,குற்றமற்ற அப்பாவிகள் மீது காட்டும் அன்பும்,மக்களை அவர்களது தீமைகளிலிருந்து விடுவிப்பதுமாகும். அது போன்றே குற்றமிழைத்தோரும் மீண்டும் அந்தத் தவறில் ஈடுபடுவதை விட்டும் தடுக்கும்.
அதனால்தான் அல்லாஹ் ((விபச்சாரத்தில் ஆண்,பெண் அவர்கள் ஒவ்வொருவருக்கும் நூறு கசையடிகள் அடியுங்கள். நீங்கள் அல்லாஹ்வையும்,மறுமை நாளையும் கொண்டு விசுவாசம் கொள்வோராக இருந்தால் அல்லாஹ்வின் மார்க்கத்தில் அவ்விருவருக்கும் நீங்கள் பரிவுகாட்டவேண்டாம்.)) எனக் கூறுகிறான். ((அந்நூர்:02))
யாருடைய மனம் இது போன்ற பாவங்களைச் செய்யத் தூண்டுமோ அவர்கள் எச்சரிக்கையடைவதற்காக விபச்சாரம் புரிந்த ஆணுக்கோ,பெண்ணுக்கோ ஹத் (சமூக குற்றத்திற்கான தண்டனை) நிறைவேற்றும் போது அன்புகாட்ட வேண்டாம் என அல்லாஹ் எம்மைத் தடைசெய்துள்ளான்.
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது:
உரைனா கோத்திரத்தைச் சேர்ந்த சில மனிதர்கள் மதீனாவில் நபியவர்களிடம் வந்தனர். ஆனால் அவர்களுக்கு மதீனாவின் காலநிலை ஒத்துவரவில்லை. எனவே நபியவர்கள் அவர்களுக்கு நீங்கள் விரும்பினால் ஸதகாவின் ஒட்டகங்களிடம் சென்று அதனது பாலிலிருந்தும் சிறுநீரிலிருந்தும் குடித்துக் கொள்ளுங்கள். அவர்களும் அவ்வாறே செய்து நிவாரணமடைந்தனர். பின்பு அவர்கள் அங்கிருந்த மேய்ப்பாளர்களைத் தாக்கிக் கொன்று விட்டு,இஸ்லாத்தைவிட்டு வெளியேறி,நபியவர்களது ஒட்டக மந்தையையும் ஓட்டிச் சென்றுவிட்டனர். அச்செய்தி நபியவர்களுக்குத் தெரிந்த சமயம் அவர்களைத் தொடர்ந்து ஆட்களை அனுப்பி அவர்களைக் கொண்டு வரப்பட்டது. பின்பு நபியவர்கள் அவர்களது கால்களையும்,கைகளையும் வெட்டி,அவர்களது கண்களையும் பிடுங்கி,அவர்களை இறக்கும் வரையும் வெட்டவெளியில் விட்டார்கள். ((முஸ்லிம்:3162))
எனவேதான் நபியவர்கள் ஹத்துகளுடைய விடயத்தில் சிபாரிசு செய்வதைத் தடுத்துள்ளார்கள். ஏனெனில் ஹத்துகளை நிறைவேற்றுவது அல்லாஹ்வுக்குரிய உரிமையும்,பாவிகளின் தீங்குகளிலிருந்து சமூகத்தைப் பாதுகாப்பதுமாகும்.
 தொடரும்……

Check Also

வதந்திகளைக் கையாள்வதற்கான இஸ்லாத்தின் வழிகாட்டல்கள் | ஜும்ஆ தமிழாக்கம் |

வதந்திகளைக் கையாள்வதற்கான இஸ்லாத்தின் வழிகாட்டல்கள் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 22 …

Leave a Reply